வில்லனாகும் மைக் மோகன்!

தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்னும் உடைக்க முடியாத சில வெள்ளிவிழா ரெக்கார்டுகளை தன் பெயரில் வைத்திருப்பவர் ‘மைக்’ மோகன்.

ரொம்ப காலங்கள் ஒதுங்கியிருந்த இவர் சில வருடங்களுக்கு முன் சுட்ட பழம் என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படம் சம்பந்தப் பட்ட எல்லார் கையையுமே சுட்டுவிட, காணாமல் போய் விட்டார். பிறகு தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், கேரக்டர் ரோல்கள் என எவ்வளவோ வந்தும் அவற்றை ஏற்கவில்லை.

ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு தான் அடுத்து சூர்யாவை வைத்து இயக்கப் போகும் பேய் படத்தில் மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வில்லன் வேடத்தில். இது குறித்து மோகனிடம் பேசியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

தொடர்ந்து முழுநேர வில்லனாக நடிக்கத் தயார் என மோகன் பல இயக்குனர்களுக்கு தூதுவிட்டு வருகிறாராம்.  பிரியாணி படத்தில் ராம்கிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது சூர்யா படத்தில் மோகனுக்கு அந்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.