அன்மையில் ஒரு நிகழ்வுக்கு சென்றிருக்கையில், சில சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்க நேர்ந்தது. பாட்டிமார்கள் சில சடங்கு முறைகளை யோசித்து யோசித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். என்னோடு உட்கார்ந்திருந்த பிள்ளையும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்து சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினால்.
பதில் கிடைக்குமா என்ற ஆர்வ கோளாரில் சிலரிடம் ஒவ்வொரு சடங்கின் முக்கியதுவத்தை significance கேட்டேன். விடை கிடைக்கவில்லை. சரி, மண்டோர்களாய் முன்னின்று சடங்குகளை அரங்கேற்றம் செய்யும் பாட்டிகளிடம் கேட்டால்;
“எங்க பாட்டி, அம்மா எல்லாரும் இப்படித்தான் செஞ்சாங்க, எங்களுக்கும் சொல்லி கொடுத்தாங்க. இப்ப நாங்க உங்களுக்குச் சொல்லி கொடுக்கிறோம். பின்னால் நீங்க இதயெல்லாம் உங்க பிள்ளைங்களுக்குச் செய்வீங்க..!” என்றனர்.
பூனையும் பாலும்
இதற்கு ஒரு கதையும் உள்ளது. ஓர் ஊருக்கு உபதேசம் செய்ய ஒரு சாமியார் வந்தார். மாலை நேரத்தில் அவ்வூரின் மண்டபத்தில் மக்கள் கூட தனது உபதேசத்தை துவங்கினார். அமைதியாகவும் உண்ணிப்பாகவும் மக்கள் கேட்டுக்கொண்டிருகும் போது அங்கிருந்த பூனை ஒன்று மியாவ் என்று கத்தியது.
உபதேசம் தொடர்ந்தது ஆனால் பூனை மீண்டும் மியாவ் என்றது, அதற்கு பசி என்று உணர்ந்த சாமியார், அதற்கு ஒரு கிண்ணத்தில் பால் வைக்கச் சொன்னார். பாலை குடித்த பூனை அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது. இதனால் அவரது உபதேசம் தடைபட, மக்கள் கவனமும் சிதறியது. நிலைமையை சரி செய்ய பூனையை ஒரு கூடையால் மூடி வைக்கச்சொன்னார்.
மறுநாளும் இதே நிலைதான். மூன்றாம் நாள் சாமியார் வந்தவுடன் உடனே ஒரு கிண்ணத்தில் பால் வைத்து பூனையை ஒரு கூடையால் மூடி வைக்கச்சொன்னார். அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் சாமியார் வந்தவுடன், அவ்வூர் மக்கள் எல்லாம செய்தாகிவிட்டது என்று கூடையால் பாலுடன் மூடப்பட்ட பூனையை காட்டிவர். அதைப்பார்த்த சாமியார் இன்று இடையூறு கிடையாது என்று கூறி உபதேசத்தை தொடங்குவார். இதே பழக்கமாகவும் ஆகி விட்டது.
உபதேசம் செய்த சாமியார் பல வருடங்களுக்கு பிறகு புதிய அணுபவங்க்களுடன் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். உபதேசத்தை கேட்க அனைவரையும் அழைத்தார். பலர் வந்தனர் ஆனால், சிலர் அங்கும் இங்கும் ஓடினர். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. நேரம் ஆகிகொண்டிருந்த்தால், சாமியாரும் காரணத்தை கேட்டார்.
அதற்கு அந்த ஊர் பெரியவர் ஒருவர் சாமியாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தங்களிடம் பாலும் கூடையும் உள்ளதாகவும் ஆனால் பூனை மட்டும் கிடைக்காததால் பக்கத்து ஊருக்கு பூனை பிடிக்க ஆள் அனுப்பு உள்ளதாக கூறினார். அதற்கு காரணம் கேட்ட சாமியாருக்கு அவர்கள், பூனையை பாலோடு வைத்து கூடையில் மூடி உபதேசம் செய்தால் இடையூறு நிகழாது என்ற அவரது உபதேசத்தை தாங்கள் காப்பாற்றி வருவதாக கூறினார்களாம்.
ஏன், எதனால், எதற்காகச் செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமல், காலங்காலமாய் செய்கிறோம், அதனால் அப்படியே தொடர்கிறோம் என்ற போக்கு தானெ மூட நம்பிக்கையாய் வேரூன்றி கிடக்கிறது நமது சமுதாயத்தில்?
பாட்டிகளும் பூச்சாண்டிகளும்
நம் பாட்டிமார்களுக்கு இப்படி காலங்காலமாக ஆழ் மனதில் பதிய வைத்த சில காரியங்களைச் செய்து முடித்தால்தான் தங்களின் மனம் நிறைவுபெரும் என்ற ஒரு போலியான நம்பிக்கை. இதனாலேயே பல செயல்பாடுகளை நியாயப்படுத்தி நிறைவேற்றி விடுகின்றனர். இவர்கள் மனம் கோணாமளிருக்க இவர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களை அங்கிகரிக்கும் நிலைமை வேறு ஏற்படுகிறது.
ஆனால் விளக்கம் கேட்டால் சொல்லவும் தெரியாமல், தாங்களும் அறியாமல், குழம்பி, குழப்பி விடுகின்றனர்.
இதன் விளைவு? நம் சமுதாயத்தில், பிறந்த குழந்தைகளுக்கு அதே மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் நல்ல தேர்ச்சி எடுக்க கையில் பல வண்ண கயிறுகளைக் கட்டிக் கொள்கின்றனர்; சில பரிகாரங்கள் செய்தால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்புகிறார்கள்; இருட்டில் வெளியே சென்றால் பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்று அஞ்சுகிறார்கள்.
எட்டாம் எண்ணில் பிறந்த குழந்தையை சனி பிடித்து ஆட்டும், வாழ்க்கை முழுவதும் துன்பம் ஏற்படும் என்று சொன்னால், இதை கேட்கும் அந்த பிள்ளைக்கு வாழ்வில் எப்படி வரும் தைரியம்?
இப்படி இல்லாத ஒன்றையும், சான்றில்லாத நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்கமுடியுமா?
இதனால் குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் பயம், மனபாதிப்பு, அடிமைத்தனம், தைரியமின்மை போன்ற தாக்கங்களையே விதைக்க நேரிடுகிறது.
பகுத்தறிவு சிந்தனை வளரும் இந்த காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்கு முறைகளையும் இன்னும் புகுத்திக் கொண்டிருக்கப் போகிறோமா?
நம் பிள்ளைகளை குருகிய சிந்தனை வட்டத்தில் வைத்து, நமது நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் தினிக்காமல், அவர்களின் கற்பனை, சிந்தனை திறன்களுக்கு எல்லை வகுக்காமல் இருக்க முடியுமா நம்மால்?
குழந்தைகளின் கேள்விகளுக்கு இயன்றவரையில் சான்றுள்ள, ஏற்புடைய விளக்கங்களை அளிக்க முயல்வோம். பூச்சாண்டி பிடித்துக்கொள்ளும் என்பதை விடுத்து, உண்மையான காரணங்களைக் கூறி விளக்குவோம்.
இந்த காலத்தில், பிள்ளைகளின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் திக்குமுக்காடும் நிலையில் நம்மில் பலர் உள்ளோம். “வானவில்லில் ஏன் கருப்பு நிறம் இல்லை?”, “நம்ம வீட்டு நாய்குட்டியால் ஏன் பேச முடியவில்லை?”, “தாத்தாவின் தோல் ஏன் சுறுங்கி விட்டது?”
இப்படி, ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் எழும் கேள்விகளை உதரித்தள்ளாமல், ஊதாசினப்படுத்தாமல், அவர்களுக்கு முடிந்தவரை தகுந்த விடைகளை அளிக்க முயற்சி செய்வோம்.
முடிந்தால், புத்தகங்களைப் புரட்டி, அவர்களோடு இணைந்து விடைகளைத் தேடுவோம். இன்றைய அம்மாக்களுக்கு கை கொடுக்கத்தான் இணையதளம் உள்ளதே! எளிய முறையில் வலைப்பக்கங்களில் விடைகளைத் தேடி கொடுப்போம். படங்களோடு விளக்குவோம்.
இதைவிடுத்து, இன்னுமும் மூடத்தனமான விளக்கங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து நம் பிள்ளைகளின் வாயை மட்டும் அல்ல, அவர்களின் மூளை, சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்ந்தாற்போல் ஒரு விலங்கை மாட்டி விடுவது நாம் இழைக்கும் துரோகமாகவே உருவாகும்.
சரியான சாட்டை அடி கொடுத்திர்கள் சுதா சின்னசாமி அவர்களே ! நேற்று மாலை மின்னல் FM யில் ஊதுபத்தி விளம்பரத்தில் , அவர்களின் ஊதுபத்தியை கொளுத்தி வைத்தால் குழந்தைகள் படிப்பில், கேள்வி ஞானத்தில் சிறப்பாக தேர்ச்சி பெறுவார்கள் என்று சொன்னார்கள் ! இப்படிபட்ட விளம்பரத்தை மலாய் ,சீன ,ஆங்கில வானொலி, தொலைகாட்சியில் கேட்கவோ பார்க்கவோ முடியும்மா ? இவர்களின்செயல் ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காட்டுவதுபோல் இருக்கிறது !
உன்வாழ்வின் நடந்த சம்பவங்களை உமக்கு அறியா வெளிநாட்டில் உள்ள ஒருவர் எதாட்சையாக சந்திக்க நேர்ந்தபோது வாழ்வில் நடந்த அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவர்போல் புட்டு புட்டு வைக்கிறார். இதைப்பற்றி மக்களின் கருத்து யாதோ???
ஐயா இராமசாமி மாண்டோர் அவர்களே ! புட்டு புட்டு வைப்பதினால், கேட்டவருக்கும் சொன்னவருக்கும் என்ன பயன் ? சொன்னவருக்கு தச்சனையாக பணம் கிடைக்கலாம் ! கேட்டவர் நடந்ததை எண்ணி மகிழ்வார் அல்லது துக்கபடுவார் , நடக்கபோவதை சொல்பவன்தான் இல்லை ! அப்படி ஒருவன் இருந்தால் வல்லரசுகள் அவனை கடத்தி விடுவார்கள் !
நம்பிக்கை வேண்டும்: மூட நம்பிக்கை வேண்டாம். “மூட” எனும் சொல்லே தெளிவாகக் காட்டுகிறது.
நமக்கு அறிமுகமில்லாத வெளிநாட்டில் உள்ள ஒருவர் புட்டு புட்டு
வைக்கிறார் என்றால் அடுத்த ரேஸ் 28/6/2014 மெக்னமில் ஜேக் போட்
நம்பர் என்ன என்று சொல்ல முடியுமா ? ராமசாமி மண்டோர்
மூட நம்பிக்கையில் நீச்சல் அடிப்பவர் போல் தெரிகிறது.
அன்பர்களே, என்னுடைய கேள்வி, இப்படி அறியாதவர் ஒருவர் நடந்தவற்றை புட்டு புட்டு வைக்கும்போது மனம் தளராமல் இருக்குமா??? குறிப்பாக எப்படி நடந்தவற்றை தெள்ளத்தெளிவாக சொல்கிறார் என்பதே!!! யார் நீந்துகிறார் யார் மூல்கிறார் என்பது அனுபவித்தவர்களுக்கே வெளிச்சம்…i
அன்பர் தமிழ் நந்தா அவர்களே, என் அனுபவத்தில் ஒரு பிச்சைக்காரன்போல் தோன்றிய முதியவர் ஒருவர், இரு நபர்களுக்கு சொல்லிய வார்த்தைகள் சொல்லியபடி இரண்டு மற்றும் மூன்று வாரங்களில் அப்படியே நடந்தது. சொல்லியபடி ஒருவர் சரியாக இரு வாரங்களில் சிறைக்குச் சென்றார். மற்றவருக்கோ இவ்வளவு நாள் அயல்நாட்டில் மறைமுகமாக திருமணம் செய்த முதல் மனைவி இன்னும் மூன்று வாரங்களில் வருவதாகவும், வண்டவாளம் இந்நாட்டில் திருமணமான இரண்டாவது மனைவிக்குத் தெரியவரும் என்றும், இதனால் இருவருக்குமிடையில் சக்களத்தி போர் மூளும் என்று சொன்னது அப்படியே நடந்து குடும்பம் அதோகதியானது. இதுவும் மூடநம்பிக்கையா அன்பரே??? இந்த முதிய பரதேசி யாரென்று இக்கிராம மக்களுக்கே தெரியாது…இது காக்கை அமர கனி விழுந்த கதையல்ல…. ஒருசிலருக்கு இப்படிப்பட்ட அனுபவங்களும் இருக்கும்.. யாரையும் குறை சொல்லவில்லை..மக்களின் கருத்தையே கோரினேன்….
ஆண் பெண் இருவரும் மூத்த பிள்ளைகளாய் இருந்தால் திருமணம் செய்ய கூடாது என்று கூறும் அரைவேக்காடுகள் அதற்கான சரியான காரணங்கள் சொல்லதெரியவில்லை. இது போன்ற மூட நம்பிக்கையில் பல திருமணங்கள் தடை பட்டுள்ளது. மூத்த பிள்ளைகளுக்கு பொறுப்பு அதிகம் இருப்பதால் அவர்கள் திருமணம் வாழ்க்கை சிரமம் ஏற்படும் என்ற காரணத்தால் அக் காலத்தில் தவிர்க்க பட்டது. ஆனால் இக்காலத்தில் அது போன்ற சிரமங்கள் இல்லையே .
வெப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுடின்னு விளையாட போகும் பொது சொல்லி வைப்பாங்க: உன் வேகத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க, வேலை அற்ற வீணர்களின் மூளை அற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடாதே…… நீ வீட்டுக்குள்ளே அடங்கி கிடந்தது வெம்பி விடாதே….. நீ …. வெம்பிவிடாதே!!
இதற்கு மேலே என்ன சொல்ல? 🙂
வந்துவிட்டாரையா ஞானவிலக்கு,கூட்டாக வாழும் யாவருக்கும் தன் குடும்ப சம்பிரதாயம் தெரியும்.அடையாலம் அற்றவர்க்கு தான் புதுமையாக தோன்றும் வியப்பில்லை.கறியில் ஏன் உப்பு போடுகின்றீர் என்று ஒரு பெண் கேட்டால் என்ன சொல்வது.அது போல் சராசரி சம்பிரதாயம் கூட தெரியாத ஜடத்திடம் ஏன் வீன் பேச்சு என்று விளகியிருக்கலாம்.எழுத்தே தெரியாதவனிடம் குறள் படிக்க கேட்பதுபோல்.அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடுவதை தவிர்க்கவும்.நீங்கள் என்ன மிஷினா அல்லது…..நாராயண நாராயண.
இதை நம் தமிழ் முதியவர்கள் காதுகளுக்கு கொண்டுப் போய் சேர்க்க வேண்டும் இம் மாதிரியான சடங்க்குகள் இக் கால வாழ்க்கை முறைக்கும் அல்லது நடைமுறைக்கும் முரண்பாடாக இல்லையா என்று ஒரு சில சம்பவக் குறிப்புகளை எடுத்து வழங்கிய சுதா சின்னசாமி அவர்களுக்கு தமிழ் சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்,தொடரட்டும் உங்கள் சீர் திருத்த சவால்
ஐயா இராமசாமி மாண்டோர் அவர்களே ! இதுபோன்ற பிச்சைகாரர் , அறிமுகம் இல்லாதவர் சொல்லும் வார்த்தைகள் உண்மையில் ஆங்காங்கே நடைபெறுகிறது ! அதனால் என்னவோ நவீன உலகத்திலும் மூட நம்பிக்கை போதனை தொடர்ந்து வருகிறது ! ஒரு சிலர் ”காரண உலகுக்கு” பயணம் செய்வதால் நடக்கபோவதை அறிய முடியும் என்பதும் உண்மையே ! இவர்களால் துக்கம் அல்லது மகிழ்ச்சி தவிர வேறு ஒன்றும் இல்லை !
இன்று நாம் கண் மூடிக்கொண்டு பின்பற்றும் சமய சடங்குகள் ..உண்மையில் வருமான பெற பிராமணர்களால் அறிமுக படுத்த பட்டவை ….யாராவது ஒரு பிராமணன் கஷ்டபட்டு தொழில் செய்து வாழ்கின்றானா?பழைய சமய வழிபாடு முறைகளை இந்த நாட்களில் பின்பற்றுவது கடினம் ..வேலை ..நேரம் காரணங்களினால் …இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் …சாதி ..நட்சத்திரம் ..கிரக பொருத்தம் பார்த்து மலேசியாவில் நடக்கும் திருமணங்கள் ஏன் தோல்வியில் முடிகின்றன ? ஒருவரும் மன பொருத்தம் பற்றி சிந்திப்பதில்லை …செவ்வாய் தோஷம் ஏன் மற்ற இனங்களை பாதிபதில்லை ?கரணம் அவர்கள் இதை நம்புவது இல்லை
சோழன் அவர்களே ! நீங்கள் இப்படி அறிவு பூர்வமாக எழுதினால்
ராமசாமிக்கு பிடிக்காது.
அர்த்தமற்ற நம்பிக்கையை வகுத்துக் கொண்டு அதனை ஒரு இனத்தின் வாழ்க்கை வழிமுறையாக, பண்பாடாக ஏற்றுக் கொள்வது அறிவீனம். தப்பு. அறிவுப் பூர்வமுடைய தமிழர்களின் பண்பாட்டு சடங்குகள் இக்கால வாழ்க்கை நடைமுறைக்கு ஒற்று வருமானால் பின் பற்றுவதில் தப்பில்லை. இந்த அளவுக்கு கட்டுரை வரையத் தெரிந்த கட்டுரையாளருக்கு அவர் கண்ட சடங்கு சம்பிரதாயங்கள் என்னவென்று அறியாமல் பாட்டிமார்களிடம் கேட்டோம் என்பது அறிவுடமையாகாது. எது சரி, எது பிழை என்று சுட்டிக் காட்டலாம் பொத்தாம் பொதுவாக கட்டுரை எழுதுவதில் பயனில்லை.
ஆசாமி அவர்களே, உங்கள் முதுகைப் முதலில் பாருங்கள். பிறகு பிறர் முதுகைப்பற்றி கருத்துரைக்கலாம்!!!. பிறரைக் குறை கூறாமல் தமிழ் நந்தா தமது கருத்தினை எழுதியிருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்… இதுவே அடக்கம்….
100 வருடங்களுக்கு முன்னர் கோவிலில்அர்த்தம் அற்ற ஆடு ,கோழி வெட்டும் சடங்கை நம் முன்னோர் அறிமுக படுத்தினர் …கல்வி அறிவு பெறாத அவர்களில்ன் நடவடிக்கையை இன்னும் 21 நூற்றாண்டில் கண்மூடி செய்து கொண்டு இருக்கின்றோம் ..இந்தியாவில் அங்கிலேயர் உடன் கட்டை ஏறும் வழக்கத்தை சட்டம் போட்டு நிறுத்தினர் என்பது குறிப்பிட தக்கது …இன்று தமிழர்களுக்கு தேவை கல்வி ..கல்வி..கல்வி
நம்பிக்கை பரவாயில்லை. மூட நம்பிக்கை தான் வேண்டாம். இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் யார் கொண்டு வந்தா? BRAHMIN தான். CHOLAN சொன்னது மாதிரி. இப்போ கேள்வி கேட்டால் சொல்ல தெரியாம இருக்கும். இவ்வுளவு நாள் இருந்தோம். இன்னும் அப்பிடியே இருக்கனுமா. புசாண்டி பிடிக்கும் என்று சொல்ல தேவையில்லை இப்போது. அது ஆபத்து அப்படி செய்யாதே என்றால் போதும். அட் லீஸ்ட் FUTURE PARENTS அப்படி சொல்ல TRY பண்ணுங்க. தெரிந்தால் சொல்லுங்க. இல்லேன பொய் சொல்ல வேண்டாம். ஜாதி, மதம் என்ற பேரில் FOOLISH மாதிரி FOLLOW பண்ண வீண்டாம்.
நமக்கு அறிவியல் அர்த்தமுள்ள கல்வி தேவை.அத்துடன் மொழிப்பற்று இனப்பற்று இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பொது அறிவு இல்லாத நாட்டு நடப்பு தெரியாத மடையர்களாக இருக்கின்றோம். குடித்து கூத்தடித்து கொண்டிருக்கின்றோம்.
நந்தா அவர்களே, சிலர் காரண உலகுக்கு பயணம் செய்வதாக
எழுதி இருக்கிறீர், அப்படி உண்மையானால் எதில் பயணம் செய்கிறார்கள் என்று விளக்கவும். அப்படி பஸ்லில் பயணம் செய்தால் எனக்கும்,மண்டோருக்கும் இரண்டு டிக்கட் புக் பண்ணுங்கள் விளக்கெண்ணெய் மாதிரி எழுதியதை,அடக்கம் என்கிறார் மண்டோர்.
ராமசாமி மாண்டோர் அவர்களே தோட்டங்கள் எல்லாம் மறைந்து வருகிறது .நீங்கள் இன்னும் பிரட்ட்டுக்கு ஆட்களை தேடுகிரிர்களா ?!
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தேவையோ???அரண்டவன் கண்ணுக்குத்தானே இருண்டதெல்லாம் பேய்!!!!
ஆசாமி அவர்களே ! நீங்கள் என்னுடன் 22 வருடம் இந்த ஆத்மீகம் பயணம் செய்யவேண்டும் , நான் சொல்லும் ”காரண உலகம்” பயணம் அனுபவமாக பயணம் சொல்ல
! ”ஒரு சிலர்” என்ற கருத்தை நீங்கள் கவனாமாக படிக்காமல் போனது வருத்தம் ஐயா ! கிண்டலும் நக்கலும் ஒரு மனிதனை வெற்றி அடைய செய்யாது ஐயா !
என்ன நைனா பாட்டி மட்டுமா மூடநம்பிக்கையை சொன்னார்கள் ஏன் தாத்தாக்கள் சொல்லவில்லையா ,கடவுள் ,
சாமி பூதம் எல்லாமே மூட ந,ம்பிக்கைதானே ( பழைய நம்பிக்கை) அதை வைத்து பிழைப்பு நடத்துவோர் நிறுத்தும்
வரைக்கும் மூட நம்பிக்கை தொடரரும் ,இப்போது எல்லாம்
சிறு பிள்ளைகளிடம் போய் இருக்கிறது ,கடவுள் இருக்கிறது
என்று சொன்னால் சிரிப்பார்கள்,நம்மை படைத்து கடவுள்
என்றால் கடவுளை படைத்து யார் என்று கேட்கிறார்கள் ,அவர் எங்கே வசிக்கிறார் , அவர் படித்ததை எவன் பார்த்தான் கடவுளை கண்டவர் விண்டிலர் ,விண்டவர்
கண்டிலர் கானத்தை கண்டேன் என்று சொல்வதும் ,சில மண்டுகள் அறிவிலிகள் காரண உலகுக்கு சென்றால் உண்மை புரியும் என்று கூறுகிறார்கள் உண்மை தெரியமால் மாய உலகில் வாழும் மந்தைகளாக நாம் இருக்கும் வரை மூட பழக்கம் ஒழியாது நைனா .
உப்புக்கு வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் பல நாடுகளில் உண்டு ..ரஷ்ய நாட்டில் புது வீடு செல்லும்ம்போது முதலில் உப்பை எடுத்து செல்வர்கள் ..சில ஆப்ரிக்க நாடுகளில் சோற்றில் உப்பு சேர்க்க மறந்தால் எதோ அசம்பாவிதம் குடும்பத்தில் நடக்க போவது என்றமாதிரி கருதுவார்கள் ..ஆனால் தமிழர்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள் மாதிரி எந்த இனத்திலும் இல்லை ..இவர்கள் தாங்கள் கெட்டது போதாமல் தங்கள் எதிர்கால சந்ததியையும் கெட வைக்கின்றார்கள்
தமிழ் பித்தன் தாங்கள் எந்த பட்டணத்தில் வசிக்கின்றீர்கள் என்று செம்பருத்தி வாயிலாக தெரிவித்தீர்களானால் தங்கள் குடும்பத்தினருக்கு சித்தாந்தம் பயிற்றுவித்து, தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை பெற முடியும். ஞானம் பிறக்கும். அஞ்சானம் ஒழியும்.
மாய உலகில் வாழும் மந்தைகளாக நாம் இருக்கும் வரை, என்று சொல்லி உம்மையும் இணைத்தீரே… ஷபாஸ்…ஞானம் இல்லாருக்கு எந்ஞானத்திலாலும் யாது பயன்??? முற்றிலும் நனைந்து முக்காடு போடுவோரை விட்டுவிடுவதே நல்லது…
சுதா சின்னசாமி அவர்களே… என்ன என்ன மூட நம்பிக்கைகள் என்று நீங்க சொல்லவில்லையே….’எட்டாம் எண்ணில் பிறந்த குழந்தையை சனி பிடித்து ஆட்டும், வாழ்க்கை முழுவதும் துன்பம் ஏற்படும்’ என்பதை மட்டும்தானே மேற்கோள் காட்டினீர்கள். இதை எந்த பாட்டிமார் சொன்னார்? இது பஞ்சாங்க ஜாதகத்தில் ஒரு சிறு பகுதிதான். ஜாதகத்தையும் மூட நம்பிக்கையயும் தொடர்பு படுத்துவது சரியா? ஜாதகம் என்பதும் ஒரு கலையே…இதை நம்புவதும் நம்பாதததும் அவரவர் நம்பிக்கையயும் பகுத்தறிவையும் பொறுத்ததே…
தமிழர்க்கு தாய்மொழி தமிழ் என்பது மூடநம்பிக்கையா,ஏன் தமிழ்மொழி இந்த காலத்துக்கு தேவை விளக்கமுடியுமா.நாம் மலேசியர் தானே,நம் தாய் நாடு மலேசியா தானே அப்போ மலாய் மொழி நம் தாய்மொழி தானே.இந்த விஞ்ஞான உலகுக்கு தமிழ் மொழி அவசியமென்ன.ஆங்கில மொழியை உலக மொழியாகிவிட்டது.ஈபோர் தமிழ்பள்ளியில் வருடாந்திர ஸ்போட்ஸில்ஆரம்பம் முதல் இருதி வரை ஆங்கில பாடல் ஒளியேற்றப்பட்டது.நமது நன்பர் சீரியன் கூட உடன் இருந்தார்.ப்ராமணர் உடல் நோகாமல் பணம் சம்பாரிக்ரார் என்ற புகாருக்கு ஏன் சம்மந்தப்பட்டவர் போய் செய்யக்கூடாது,தாராலமாய் செய்யுங்கள்.வாய் சொல் வீரர்கள் ஜாஸ்தி மலேசியாவில்..நாகரீகம் யாதென்று தெரியாத காலமாச்சு.நாகரீகமாம்,மூடநம்பிக்கையாம் வந்தது தோட்டத்திலிருந்து பேசுவது,,,,,.நாராயண நாராயண.
தேனீ நைனா நான் எந்த பட்டணத்தில் வாழ்கிறேன் என்று கூறுவதால் மூடபழக்கம் அழிய போவது இல்லை ,உங்களை போன்ற அறிவிலிகளுக்கு மூடபழக்கம் ஒளியப்பவதுமில்லை ,கருத்தை எழுதியது நான் என்னைபற்றி எழுதுங்கள் என் குடும்பத்தை பற்றி எழுத எந்த …யோக்கியனுக்கும் (சித்தாந்தவாதி ) தகுதியில்லை ,உமக்கு வேண்டுமானால் எந்த மூட பழக்கத்தை ஆதரிப்பவனும் ,சாங்கியம் சபிரதா யத்தை ஆதரிகிரவனும் மக்களை ஏமாற்றி ஆதரிகிரவனும் சமூதாய துரோகிகள் தேனீ உட்பட . எனக்கு சித்தாந்த போதனையை போதிக்கும் முன் நைனா உன் பொண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கு நேர்மையாக யாரையும் ஏமாற்றாமல் வாழ கத்துகொடு நைனா , anonymous பெயர்
இல்லாத நைனா .உண்மை தான் நானும் இளமையில் உங்களை போல அறியாத புரியாத வயதில் மூடபழகத்தில் மூழ்கி சரஸ்வதியை கும்பிட்டால் படிப்பு தானாக வரும் என்று ஆரியர் கூறியதை நம்பி பக்திமானாக இளம் வயதில் ஆகி , வேத நூலகள் ,ரிக்வேதம் , ராமாயணம் ,பகவத் கீதை போன்ற சமய நூல்களை படிப்பதில் ஆர்வம் காட்டி படித்தேன் , எஸ் .ஆர். பி பரீச்சையில் தோல்வி கண்டதும் தான் எனக்கு உண்மை புரிந்தது அப்போது தந்தை பெரியாரின் புத்தகம் ஒன்று என் கண்ணில் பட்டது உண்மை புரிந்தது மீண்டும் எஸ் ஆர் பி பரீட்சையை எடுத்து வெற்றி பெற்று தொடந்து படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளேன் நைனா நான் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தவன் ஆகையால் நான் மடையன் அல்ல வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்கு செல்ல ,ஆனால் என் சமூதாயமும் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் நான் என் கருத்துகளை செம்பருத்தியில் எழுதுகிறேன் ,நான் எந்த திராவிட கட்சியை சேர்ந்தவன் அல்ல ஆனால் இருண்ட உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் திருசுடராக வந்த தந்தை பெரியாரை என் தலைவானாக ஏற்றுக்கொண்டவன் .
8 நம்பர் பிள்ளையை அப்படியே விட்டு விட முடியாது. அபுர்வாஸ் சென்று நாலு விரல்ல நவரத்தின கல்லு மோதிரம் போட்டு விடுவோம். அதுக்கு மேல இந்தியாவில் ஆர்டர் கொடுத்து தங்க தகடு செஞ்சு 48 நாள் எள்ளு மஞ்சள் எலுமிச்சை வச்சு பின் 48 ஆம் ராத்திரி யாரும் பாக்காம குழி தோண்டி புதைக்கணும். தகடு யார் கண்ணிலும் படக் கூடாது. அப்படி செஞ்சா சனி விலகி ராகு குடி வருவார். ஆனா அவரு ராகு காலம் பாத்து தான் வருவார். எத்தன பிரேமானந்த வந்தாலும் உங்கள …. மொழி, பண்பாடு, கலாச்சாரம், நம்பிக்கை, மற்றும் மூடநம்பிக்கை. இதுக்கு உள்ள வித்தியாசம் தெரியாதா? நல்ல வற்றின்மீது நம்பிக்கை வையுங்கள். மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.
விடுதலை முழக்கம் – சமூகத்தை வர்ணங்களாகப் பிரித்து, சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் அவர்களை அடிமைப்படுத்தி, அந்த அடிமைத்தளையை அவர்கள் உணர முடியாதவாறு அவர்களுக்கு அறிவு மறுப்பை ஏற்படுத்தி, அவர்களை என்றென்றும் அந்தக் கட்டுமானத்திலேயே அமிழ்த்தி வைப்பதுதான் ஆரியத்தின் சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியின் முதல் ஆயுதம் தான் சாதி. சாதிதான் இழிவைத் தருகிறது. இந்தச் சாதியின் அடிப்படை மதம். எல்லா அடிமைத்தனங்களுக்கும் அதுவே அடிப்படை. சாதி நம்பிக்கையை நீர்த்துப் போகாமல் காப்பாற்றுவதற்கு உதவுபவை சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலானவை. அந்த மதம் நிற்கும் அடிக்கல்தான் மூடநம்பிக்கை.
மொழி சமூகத்தின் அடையாளம். ஆரம்பத்தில் இருந்தே இருப்பது. மதம், ஜாதி, நம்பிக்கைகள் போல் பாதியில் வந்தது அல்ல. நம் தமிழ் இனத்தில் புகுந்து மூடர்கள் மொழியை அழிக்க முயன்றனர். நம் மீது சுமத்தப்பட்ட சாதி, மதம், நம்பிக்கைகள் ஆகிய அடிமைத்தனங்களை எதிர்த்த பெரியார் மொழி ரீதியான அடிமைப்படுத்தலையும் எதிர்த்து கடும் போரை நிகழ்த்தினார்.கோயிலில் ஒலிக்கும் மத ரீதியான சமக்கிருத மேதாவித்தனத்தையும், அம்மொழியின் முலம் திணிக்கப்பட்ட மந்திரங்கள், யாகங்கள், சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தும், பார்ப்பனிய ஆதிக்கத்தை முறியடித்தார் பெரியார். சரியான விளக்கங்களைப் பெற்று வரலாற்றை கற்று சரித்திரத்தைப் படித்து விவாதித்தி தமிழ் இனத்தில் உள்ள மடமையை அழித்து சமூகத்தை வளர்க்கலாம்.
சபாஷ்!! பெரியாரா? பிரேமாநந்தாவா?
ராஜு: தமிழச்சிதானே??? பேசறது மட்டும் இங்கிலீசு!!!
ராணி: நீ தமிழன் தானே??? சாப்டறது மட்டும் சிக்கன் ரைசு!!! நாசி லெமாக்??!!!
மானமுள்ளவருக்கு மூட நம்பிக்கை லிஸ்ட்டு படத்த பாத்த தெரியுது கொஞ்சம். ஜோதிடம், சடங்கு, சாமியாரு பேயோட்டராறு, கருப்பு பூன குருக்க போகுது, காக்கா கத்துனா வீட்டுல சாவு, மண்ட ஓடு சாமியாரு, கிளி ஜொசியம், கையுள கயிறு..இன்னும் யோசிச்சு சொல்லுங்கப்பா நம்ம சமுதாயத்துல கொங்சமாவா இருக்கு! ஐயோ ஐயோ!!!!
தமிழ் பித்தரே, பூனை கண் மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டதாக நினைத்துக் கொள்ளுமாம். அப்படிதான் தங்களின் கடவுள் நம்பிக்கையும். தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதனால் தங்களுக்கும் மிஞ்சிய ஒரு சக்தி இல்லாமல் இல்லை என்பதை தங்களால் நிறுவ முடியாது!. ஆனால் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் ஓர் அறிவுடைய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதனை கருதல் அளவையின் மூலம் சித்தாந்தம் நிரூபிக்கும். இது ஒரு தத்துவ கல்வி. தாங்கள் நினைப்பது போல் நம்பிக்கையால் அறியப்படும் ஓர் உருவைக் கொண்ட தெய்வத்தை, கடவுள் என்று உணர்த்தும் கல்வி அல்ல. தங்களுக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் தங்கள் குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்காதீர். இறை நம்பிக்கை வேறு. மூட நம்பிக்கை வேறு. எது சரி, எது பிழை என்று அறியாமல் இருட்டினில் இருந்துக் கொண்டே நான் வெளிச்சத்திற்கு வந்து விட்டேன் எனும் தங்களின் அறியாமை அறிந்து வருத்தபடுகின்றேன். நானும் தங்களைப் போல் மூட நம்பிக்கைகளை வெறுப்பவனே. ஆனால் இறைவன் என்னும் ஒரு சக்தி உண்டு என்பதனை அறிந்துக் கொண்டவன். அதனாலே வந்த ஆதங்கம்தான் தங்களின் இறை மறுப்புக் கொள்கைக்கு மறு கருத்தாக வந்தது.
தேனி அவர்களே , நீங்கள் என்ன இறைவன் அப்சில் , மனேஜராக வேலை பர்கிறிர்கள? நிறைய தகவல் தருகிறிர்களே? இ பி எப் , .. எல்லாம் சரியாக இருக்கிறதா .நம்ப இறைவன் தானே என்று நம்பி கடைசியில் ………….?
இறைவனிடம் எனக்கு கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லையப்பா. இறைவனுக்கு இனாமாக சிவதொண்டு செய்கின்றேன். அதனால் இ.பி.எப்., சொக்சோ பிரச்சனை எதுவும் வராது! நம்புக.
ஏய் தமிழா!
இந்த உலகத்தை படைத்தது
கடவுள் என்பதை ஒப்புக்கொள்கிறாய்
உலகத்தில் மனிதனை படைத்ததும்
கடவுள் என்பதை ஒப்புக்கொள்கிறாய்
மனிதனுக்கு ஓசையையும், மொழியையும் படைத்தது
கடவுள் என்பதை ஒப்புக்கொள்கிறாய்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது
என்பதையும் ஒப்புக்கொள்கிறாய்
அப்படியிருக்க உலகத்தில் உள்ள அனைவரும்
அவரவர் தாய் மொழியில் பிரார்த்தனை செய்ய
அந்த மொழிகளெல்லாம் கடவுளுக்கு புரியும் போழுது
உன் தாய் மொழியான தமிழில் மட்டும்
கடவுளுக்கு பிரார்த்தனை செய்தால்
கடவுளுக்கு புரியாது, தெரியாது
என்று சொல்வதை, ஏன் சிந்திக்க மறுக்கிறாய்?
ஓ அதுவா ! அதுதான் அரசியலும், சினிமா பற்றியும்
பேசவும், சிந்திக்கவும் நேரம் போதவில்லையே
அப்படியிருக்க உன்னை பற்றியும்
உன் வம்சத்தை பற்றியும் சிந்திக்க ஏது நேரம்?
மூட பழக்க வழக்கங்களால் எந்த துன்பம் வந்தாலும்
புரியாத மொழியில் யாகம் வளர்த்து
புசை செய்தால் துன்பம் நீங்கி
இன்பம் பெருகும் என்று உன் முன்னோர்கள்
உன் தலையில் பசுமரத்தாணி போல்
பதிந்து விட்டார்களே நீ எப்படி சிந்திப்பாய்.?
(குறிப்பு – இக்கவிதை இங்குள்ளவர்கள் யாரையும் நோக்கி எழுதப்பட்டதள்ள.
நன்றாக வாழ்ந்த தமிழினம் இப்படி தாழ்ந்து போகிறதே என்று என் மனதில் உதித்த ஆதங்கமே இது. நன்றி வணக்கம்)
உழவரே, தங்கள் வாசகங்களின் மொழிப் பகுதியை மலேசிய அர்ச்சகர் சங்கத்தின் காதில் தெளிவாக விழும்படி செய்யுங்கள். திருந்துகின்றார்களா அல்லது எங்களுக்கு சம்ஸ்கிருத மந்திரங்களைப் போதித்த குருமார்களுக்கு குரு நிந்தனை செய்யமால் தட்டில் காசு போட்டு அவர்கள் வாழ்வாதாரத்தை வளர்க்கும் தமிழனுக்கு வஞ்சனை செய்வார்களா என்று சொல்லட்டும்.
இந்த பகுதிக்கு எழுத கூடாது என்று ஒதுக்கி இருந்தேன். தெய்வத்தையும் மந்திரத்தையும் நிந்திக்கும் தமிழ் அன்பர்களே தயவு செய்து உங்கள் வாழ்கையை பெரியார் வகுத்த பாதையிலேயே செல்லுதுங்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வேண்டாம் . எந்த மதத்தில் பிறந்தவனாக இருந்தாலும் இறக்கும் பொது கடவுள் மத்திரத்தை உச்சரித்துக்கொண்டே இறக்கவே ஆசை படுவான் . இந்த நாட்டிக்கு இந்தியர்களை போல வந்த சீனர்களும் சீக்கியர்களும் எந்த கடவுளை வணங்கினார்களோ ?? எப்படி வணக்கினார்கள் ? நீங்கள் அப்படியெல்லாம் வணங்க அவசியம் இல்லை . அது தமிழர்களின் கட்டுப்பாடும் இல்லை . உங்கள் அறிவை கொண்டு இந்த நாட்டின் பொருளாதரத்தை பெருக்கிக்கொள்ளவும் . இந்தியர்கள் என்றாலே தமிழர்கள் தான் தலை சிறந்தவர்கள் என்றும் அறிவாளிகள் என்று கொள்கை வாதிகளே சீனர்கள் எடுத்து செய்தும் அணைத்து தொழிலையும் நீங்கள் (தமிழர்கள் ) செய்து உங்கள் பெரும் புகழையும் உலகிற்கு தெரியபடுத்துங்கள் . (அவர்களை விட நீங்கள் திறமையானவர்கள் ) இங்கே உள்ள சிலருக்கு மதத்திற்கும் இனத்திற்கும் (மொழிக்கும் ) உள்ள வேறுபாடு குடா தெரியாமல் இருகின்றனர். எந்த கிறித்துவனும் முஸ்லிமும் அவனது மதத்தை கடவுளாக பார்ப்பதால் கடவுளை நிந்திப்பது கிடையாது . அனால் அதை தமிழர்கள் நிறைவாகவே செய்கின்றனர் . கடவுள் மீது உண்மையான பக்தி இல்லாத மனிதனிடத்தில் எந்த சக்தியும் இருக்காது . அதே போலவே கோவில்கள் ஆடம்பரமாக இருந்தாலும் பக்தி இல்லை என்றால் அங்கே தெய்வமும் இருக்காது .
மங்கை தாங்கள் வருத்தத்துடன் எழுதியது வருத்தமளிக்கின்றது. தமிழன்தான் அறிவாளி என்று எழுதுவதெல்லாம் ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றியவன்’ என்றுஒரு புகழ்ச்சிக்காக சொல்வதைப் போல எழுதும் வார்த்தைகளே. செம்பருத்தி வாசகர்கள் இவ்வாறு எழுதுவதர்க்குக் காரணம் மலேசியாவில் கடந்த ஒரு15ஆண்டுகளாக தெலுங்கு சங்கம் மற்றும் மலையாளிகள் சங்கம் என்று அமைத்துக் கொண்டு அவர்கள் தங்களை தனிப்படுத்தி வெளிப்படுத்தியதால் வந்த வினையே. தமிழர்களும் தங்களை சரி நிகர்படுத்திப் பேச வேண்டியதாயிற்று.
மங்கை,நீங்கள் சுட்டிக்காட்டியது நிஜமே.மலையாளி,தெலுங்கர் தனியே ஒதுங்கியமைக்கு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.15 வருடங்களுக்கு பின் தான் நாம் இந்த நாட்டுக்கு பிழைப்பை தேடி வந்தோமா.பள்ளியில் தமிழ் அடுத்து மலையாளம் தெலுங்கு மொழிகலையும் போதித்திருக்கலாம்.விரன்டாவாதிகள்,ஜாதிகள் இல்லையாம் திருக்குறளில் ஊழ் என்று பகுதி உள்ளது தெரியுமா.ஹிந்தி மொழியில் வழிபாட்டை காணுங்கள் பரவசம் கொள்வீர்.தமிழில் மூக்குப்பொடி போதை புராணம் கிடைக்கும் விரண்டாவாதிக்கு.தமிழ் அர்சகரை கொஞ்சம் தொடருங்கள் நகங்களில் வர்னீஸ்,9 விழாவில் கானலாம்,நடை யுடை பாவனை,பிள்ளையார் பட்டியில் நுழையவே கூடாது யென்று சட்டம்,(கல்வி கற்க).நாகரீகம் என்றால் தமிழ் ஆண்கள் சேலை கட்டிக்கலாமே தோடு மூக்குத்தி கொலுசு மற்றும்2.மூடநம்பிக்கை என்றால் ஏன் தாலி கட்டி குடும்பம் நடத்தவேண்டும்,கல்யாண சம்பிரதாயம் தேவையில்லை ஆதி குரங்காயிற்றே ஆடை கூட இல்லை தேவை.தன் சாதியை போற்றுபவன்,தன் மொழியை போற்றுபவன்,தன் பிறப்பை போற்றுபவன்,தன் தாயை போற்றுவதற்கு சமம்.இவைகளை இகழ்பவன் தன் தாயை கேவலபடுத்துவதற்கு ஈடு.உயர்ந்தவன்,உயர்ந்த சாதியன் என்பவன் தன் சாதியை மதிப்பவனே.இந்த கேவலமான சாதி தாய் வயிற்றில் பிரந்துவிட்டோம் என்று வருந்துவான் சாதி இல்லை என்பான்.அடுத்த பிறப்பிலாவது ப்ராமணணாக பிரக்க ப்ரார்தியும் ஜாதிவெறியரே,நாராயண நாராயண.
காய் நீர் ஒரு திருந்தாத ஜென்மம். உமக்கு அறிவுரை புகட்டுவது என்பது வீண்.
நாய் வாலை கூட நிமிர்த்திவிடலாம் போலிருக்கிறது. ஆனால், ஒருசில ஜென்மங்களை எத்தனை ஜென்மம் கொண்டாலும் மாற்ற இயலாது….
மங்கை அவர்களே உங்கள் கருது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது .
எம்மை திருத்த வேண்டாம்,ஈபோர் தமிழ்பள்ளியில் நடந்த கேவலம் குறித்து நேற்று எழுதியிறுந்தேன் செம்பருத்தி ஆசிரியர் பிரசுரிக்கவில்லை ஏனோ, ஈபோர் தமிழ்பள்ளியின் அராஜகத்தில் பங்கு உண்டோ.நான்கு விளையாட்டிலும் விளையாடி வெற்றிப்பெற்ற மாணவனுக்கு கிடைக்காத ஓலாராகாவான் கோப்பை குலுவிலையாட்டில் மட்டும் கலந்துடவருக்கு ஓலாராகாவான் கோப்பை மற்றும் சலுகைகளும்,வேதனையிலும் வியப்பிலும் ஈபோர் தமிழ்பள்ளி வருடாந்திர விளையாட்டு போட்டி ஆங்கில பாடலில் துவங்கி ஆங்கில பாடலில் நிரைவு பொற்றது.சீரியன் கூட உடனிருந்து வழி நடத்தியுள்ளார்.மாணவன் சதீஸ்கு ஞாயம் கிடைக்கும் என்று எழுதினால் ப்ரசுரிக்கவே மறுத்துவிட்டார் நம் ஆசிரியர்,ஆனால் யாம் விடப்போவதில்லை சம்மந்தப்பட்ட தரப்பிடம் சேதியை சேர்போம் மாணவனுக்கு ஞாயம் கிடைக்க போராடுவேண்,நாராயண நாராயண.
MU TA neelavanan நான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவில்லை . ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியாரே குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றும் பாடி உள்ளார் . கடவுளை /மந்திரங்களை நிந்திகாதிர்கள் . என்று தான் சொன்னேன் , கடவுளை முறையாக வணங்குபவன் எந்த ஜாதியாக இருந்தாலும் அவன் பிராமணனே கீதையில் சொன்னது. உங்கள் குழந்தைகளுக்கு முட நம்பிக்கையை திணிக்காதிர்கள் என்று சொல்லும் முன் அவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த முட பழக்கம் வருகின்றது . பெற்றோர்களா இல்லை ஆசிரியர்களா யார் சொல்லி தருகின்றனர் .?? ஒவ்வொரு சடங்கிற்கும் தகுந்த விளக்கம் இல்லை என்பதற்காக அதை முட பழக்கம் என்று விளக்காமல் அது ஏன் எதனால் என்பதை பெற்றோகள் குழந்தைக்கு விளக்கினாலே போதும் . அந்த சாமியார் புணையை எதக்காக குடையில் முடினார் என்று குட தெரிந்து கொள்ளாத அறிவிலிகள் அந்த காலத்திலே இருந்தார்கள் என்றால் இன்றும் பலர் உள்ளனர் . அக்னி சாட்சியாக கட்டும் தாலிக்கு வலிமை உண்டு . இரவில் நகம் வெட்ட குடாது என்பது என்னை பொறுத்தவரை முட நம்பிக்கை என்பேன் . நன்மையையும் தீமையும் பிறர் தர வரா . நமக்கு தெரிந்தால் போதும்
வணக்கம். தாங்கள் நெடு நாட்களாக தேக்கி வைத்திருந்த உள்ள குமுறளை இன்று என் மீது கொட்டி விட்டீர்கள் ரொம்ப சந்தோசம். நானும் உங்கள் வழியை கடைபிடித்து ஒரே வரியில் பதில் கூறிவிடலாம் ( ஒரு தமிழன் இன்னோரு தமிழனுக்கு எழுதிய கவிதையில், இடையில் உமக்கென்ன வேலை ) இப்படி பதில் கூறிவிடலாம் இது நாகரீகமாகாது. சரி விசயத்திற்கு வருவோம் நான் படித்த, என் மனதை பாதித்த ஓர் உண்மை சம்பவம். ஆண்டு 2008 அல்லது 2009 தாக இருக்கலாம். தமிழீலத்தில் விடுதலை புலிகளுக்கும், சிங்கள ராணுவ வீரர்களுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்த நேரமது. சாதாரண தமிழ் பொது மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்தார்கள். மலேசியாவில் ஒரு தோட்டத்தில் ( ஊர், பெயர் ஞாபகமில்லை ) உலக அமைதிக்காக பெரிய அளவில் யாகம் வளர்த்து, மக்களின் மனதில் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர் ஓர் கூட்டத்தினர். என்ன கொடுமை மண்டோர் அவர்களே. எங்கேயும் நிறுத்தாமல் தொடருங்கள் உங்கள் நற்பனி சேவையை. ஆதியில் எங்கேயோ இருந்து இந்தியாவிற்குள் புகுந்தவர்கள், தமிழர்களை பார்த்து வேசிமகன், சூத்திரனுக்கு பிறந்தவன், காட்டுமிராண்டி கூட்டம், பேசும் மொழி நிச மொழி இப்படி எது வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நாங்கள் இதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. இந்த கருமத்தை எந்த சுவரில் முட்டிக்கொள்வது மங்கையே? நன்றி வணக்கம்.