அன்மையில் ஒரு நிகழ்வுக்கு சென்றிருக்கையில், சில சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்க நேர்ந்தது. பாட்டிமார்கள் சில சடங்கு முறைகளை யோசித்து யோசித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். என்னோடு உட்கார்ந்திருந்த பிள்ளையும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்து சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினால்.
பதில் கிடைக்குமா என்ற ஆர்வ கோளாரில் சிலரிடம் ஒவ்வொரு சடங்கின் முக்கியதுவத்தை significance கேட்டேன். விடை கிடைக்கவில்லை. சரி, மண்டோர்களாய் முன்னின்று சடங்குகளை அரங்கேற்றம் செய்யும் பாட்டிகளிடம் கேட்டால்;
“எங்க பாட்டி, அம்மா எல்லாரும் இப்படித்தான் செஞ்சாங்க, எங்களுக்கும் சொல்லி கொடுத்தாங்க. இப்ப நாங்க உங்களுக்குச் சொல்லி கொடுக்கிறோம். பின்னால் நீங்க இதயெல்லாம் உங்க பிள்ளைங்களுக்குச் செய்வீங்க..!” என்றனர்.
பூனையும் பாலும்
இதற்கு ஒரு கதையும் உள்ளது. ஓர் ஊருக்கு உபதேசம் செய்ய ஒரு சாமியார் வந்தார். மாலை நேரத்தில் அவ்வூரின் மண்டபத்தில் மக்கள் கூட தனது உபதேசத்தை துவங்கினார். அமைதியாகவும் உண்ணிப்பாகவும் மக்கள் கேட்டுக்கொண்டிருகும் போது அங்கிருந்த பூனை ஒன்று மியாவ் என்று கத்தியது.
உபதேசம் தொடர்ந்தது ஆனால் பூனை மீண்டும் மியாவ் என்றது, அதற்கு பசி என்று உணர்ந்த சாமியார், அதற்கு ஒரு கிண்ணத்தில் பால் வைக்கச் சொன்னார். பாலை குடித்த பூனை அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது. இதனால் அவரது உபதேசம் தடைபட, மக்கள் கவனமும் சிதறியது. நிலைமையை சரி செய்ய பூனையை ஒரு கூடையால் மூடி வைக்கச்சொன்னார்.
மறுநாளும் இதே நிலைதான். மூன்றாம் நாள் சாமியார் வந்தவுடன் உடனே ஒரு கிண்ணத்தில் பால் வைத்து பூனையை ஒரு கூடையால் மூடி வைக்கச்சொன்னார். அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் சாமியார் வந்தவுடன், அவ்வூர் மக்கள் எல்லாம செய்தாகிவிட்டது என்று கூடையால் பாலுடன் மூடப்பட்ட பூனையை காட்டிவர். அதைப்பார்த்த சாமியார் இன்று இடையூறு கிடையாது என்று கூறி உபதேசத்தை தொடங்குவார். இதே பழக்கமாகவும் ஆகி விட்டது.
உபதேசம் செய்த சாமியார் பல வருடங்களுக்கு பிறகு புதிய அணுபவங்க்களுடன் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். உபதேசத்தை கேட்க அனைவரையும் அழைத்தார். பலர் வந்தனர் ஆனால், சிலர் அங்கும் இங்கும் ஓடினர். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. நேரம் ஆகிகொண்டிருந்த்தால், சாமியாரும் காரணத்தை கேட்டார்.
அதற்கு அந்த ஊர் பெரியவர் ஒருவர் சாமியாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தங்களிடம் பாலும் கூடையும் உள்ளதாகவும் ஆனால் பூனை மட்டும் கிடைக்காததால் பக்கத்து ஊருக்கு பூனை பிடிக்க ஆள் அனுப்பு உள்ளதாக கூறினார். அதற்கு காரணம் கேட்ட சாமியாருக்கு அவர்கள், பூனையை பாலோடு வைத்து கூடையில் மூடி உபதேசம் செய்தால் இடையூறு நிகழாது என்ற அவரது உபதேசத்தை தாங்கள் காப்பாற்றி வருவதாக கூறினார்களாம்.
ஏன், எதனால், எதற்காகச் செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமல், காலங்காலமாய் செய்கிறோம், அதனால் அப்படியே தொடர்கிறோம் என்ற போக்கு தானெ மூட நம்பிக்கையாய் வேரூன்றி கிடக்கிறது நமது சமுதாயத்தில்?
பாட்டிகளும் பூச்சாண்டிகளும்
நம் பாட்டிமார்களுக்கு இப்படி காலங்காலமாக ஆழ் மனதில் பதிய வைத்த சில காரியங்களைச் செய்து முடித்தால்தான் தங்களின் மனம் நிறைவுபெரும் என்ற ஒரு போலியான நம்பிக்கை. இதனாலேயே பல செயல்பாடுகளை நியாயப்படுத்தி நிறைவேற்றி விடுகின்றனர். இவர்கள் மனம் கோணாமளிருக்க இவர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களை அங்கிகரிக்கும் நிலைமை வேறு ஏற்படுகிறது.
ஆனால் விளக்கம் கேட்டால் சொல்லவும் தெரியாமல், தாங்களும் அறியாமல், குழம்பி, குழப்பி விடுகின்றனர்.
இதன் விளைவு? நம் சமுதாயத்தில், பிறந்த குழந்தைகளுக்கு அதே மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் நல்ல தேர்ச்சி எடுக்க கையில் பல வண்ண கயிறுகளைக் கட்டிக் கொள்கின்றனர்; சில பரிகாரங்கள் செய்தால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்புகிறார்கள்; இருட்டில் வெளியே சென்றால் பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்று அஞ்சுகிறார்கள்.
எட்டாம் எண்ணில் பிறந்த குழந்தையை சனி பிடித்து ஆட்டும், வாழ்க்கை முழுவதும் துன்பம் ஏற்படும் என்று சொன்னால், இதை கேட்கும் அந்த பிள்ளைக்கு வாழ்வில் எப்படி வரும் தைரியம்?
இப்படி இல்லாத ஒன்றையும், சான்றில்லாத நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்கமுடியுமா?
இதனால் குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் பயம், மனபாதிப்பு, அடிமைத்தனம், தைரியமின்மை போன்ற தாக்கங்களையே விதைக்க நேரிடுகிறது.
பகுத்தறிவு சிந்தனை வளரும் இந்த காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்கு முறைகளையும் இன்னும் புகுத்திக் கொண்டிருக்கப் போகிறோமா?
நம் பிள்ளைகளை குருகிய சிந்தனை வட்டத்தில் வைத்து, நமது நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் தினிக்காமல், அவர்களின் கற்பனை, சிந்தனை திறன்களுக்கு எல்லை வகுக்காமல் இருக்க முடியுமா நம்மால்?
குழந்தைகளின் கேள்விகளுக்கு இயன்றவரையில் சான்றுள்ள, ஏற்புடைய விளக்கங்களை அளிக்க முயல்வோம். பூச்சாண்டி பிடித்துக்கொள்ளும் என்பதை விடுத்து, உண்மையான காரணங்களைக் கூறி விளக்குவோம்.
இந்த காலத்தில், பிள்ளைகளின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் திக்குமுக்காடும் நிலையில் நம்மில் பலர் உள்ளோம். “வானவில்லில் ஏன் கருப்பு நிறம் இல்லை?”, “நம்ம வீட்டு நாய்குட்டியால் ஏன் பேச முடியவில்லை?”, “தாத்தாவின் தோல் ஏன் சுறுங்கி விட்டது?”
இப்படி, ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் எழும் கேள்விகளை உதரித்தள்ளாமல், ஊதாசினப்படுத்தாமல், அவர்களுக்கு முடிந்தவரை தகுந்த விடைகளை அளிக்க முயற்சி செய்வோம்.
முடிந்தால், புத்தகங்களைப் புரட்டி, அவர்களோடு இணைந்து விடைகளைத் தேடுவோம். இன்றைய அம்மாக்களுக்கு கை கொடுக்கத்தான் இணையதளம் உள்ளதே! எளிய முறையில் வலைப்பக்கங்களில் விடைகளைத் தேடி கொடுப்போம். படங்களோடு விளக்குவோம்.
இதைவிடுத்து, இன்னுமும் மூடத்தனமான விளக்கங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து நம் பிள்ளைகளின் வாயை மட்டும் அல்ல, அவர்களின் மூளை, சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்ந்தாற்போல் ஒரு விலங்கை மாட்டி விடுவது நாம் இழைக்கும் துரோகமாகவே உருவாகும்.
வணக்கம், இன்றைய அவசர உலகில், உள்ளங் கையில், கனிணி மூலியமாக உலகமே வந்து அமர்ந்து விட்ட காலமிது. என்னை திட்டுவதை விட்டுபுட்டு மக்களின் சந்தேகங்களுக்கு (மூட பழக்கம்) விடை தேடி பதில் எழுத முயற்சி செய்யுங்கள் . புண்ணியம் கிடைக்கும். வாசகர்கள் மேற் கூறிய சந்தேகங்கள் நகம் வெட்டுதல், எதிர் காலத்தை துல்லியமாக கூறுதல், மூத்த பிள்ளைகளின் கல்யாணம், செவ்வாய் தோசம் இன்னும் மற்றும் பல என்னால் அறிவியல் ரீதியாக அறிபுர்வமாக பதில் சொல்ல முடியும். தொழில், சூல்நிலை காரணமாக நேரமின்மையால் பதில் எழுதவில்லை. நான் நாத்திகனுமில்லை, ஆத்திகனுமில்லை. நான் ஒரு சாதாரண மனிதனே.
நமது அறிவுக்குப் புலப்படும்போது அதை ஏற்றுக்கொள்கிறோம். அறிவுக்குப் புலப்படாத ஒன்றை மூடநம்பிக்கை என்கின்றனர். நம்பிக்கையில் மூட நம்பிக்கரென்றோ மூடம் இல்லாத நம்பிக்கை என்றோ எதுவும் இல்லை. நம்புகிறோமா இல்லையா என்பது தான் முக்கியம். அதுதான் உண்மை. வெள்ளைக்காரன் ஏற்றுக்கொண்டால் அதை நாமும் அப்படியே ஏற்றுக்கொள்வோம். 13-ஆம் எண் சரியில்லை என்று வெள்ளையன் சொன்னான் நாமும் ஏற்றுக்கொண்டோம். நம் நாட்டில் கூட (தாமான் களில்) 13-ஆம் எண் வீடு இல்லை. சில தாமான்களில் 14. 24, 34, போன்ற 4 வரும் எண்கள் கொண்ட வீடுகள் இல்லை. இதையே தமிழ்ன் சொன்னால் அதை மூட நம்பிக்கை என்போம், சரிதானே? என்ன இருந்தாலும் இட்லி, தோசை சாப்பிடுவதை விட பிட்சா சாப்பிடுவதை கொளரவமாக எண்ணுவது ‘நமக்கு’ப் ‘பெருமை’ அல்லவா?
தேனீ அவர்களே பூனை கண்ணை மூடிகொண்டதும் உலகமே
இருண்டு விட்டது என்று உங்களிடம் வந்து எந்த மொழியில்
கூறியது இது ஒன்று போதுமே நீங்கள் கூறுவது பொய் உங்கள் கடவுள் நம்பிக்கையும் பூனை கதைதான் , கடவுள் ஒருத்தர் இருந்தால் அவர் எனக்கு புரியவைக்கட்டும் ,நான்
கடவுளை கும்பிட்டால் என்ன கும்பிடாமல் போனால் உமக்கு என்ன நட்டம் , நான் உன் வீட்டுக்கு பிச்சை கேட்டு
வந்தேனா . ஆரியன் நம் முதுகில் ஏறி சவாரி செய்வதிற்கு
காரணம் உங்களை போல உள்ள விதண்ட வாதிகள் தான் நைனா.
தமிழ் பித்தரே, பூனையின் கதை ஓர் உவமைதான் . தாங்கள் ஆஸ்திகரானாலும், நாஸ்திகரானாலும் அதனால் எமக்கு எவ்வொரு நட்டமும் இல்லை. ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை பொதுவில் தாங்கள் முன் வைக்கும் போது அது தவறு என்று எடுத்துரைப்பது ஆஸ்திகனான எனக்கு கடப்பாடு உள்ளது. நம்மில் பல அறிவார்ந்த தமிழர்கள், பிராமணத்துவம் (‘Brahminism’) சமய ரீதியில் நம்மை கட்டுப்படுத்தி, தாழ்த்தி, தரக்குறைவாக மதிப்பீடு செய்ததால் நாம் அனைவரும் அவர்களை வெறுக்கின்றோம். அவர்களின் அல்லது அவர்களைச் சார்ந்த அர்ச்சகர்களின் வைதீக பண்பாட்டு நிலைகளை நிலைநிறுத்தும் ஆலயத்தையும் வெறுக்கும் அளவிற்க்குச் சென்று விட்டோம். அதில் தங்களுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை. சமயத்தை ஓரளவு அறிந்த எமக்கு எது சரி, எது பிழை என்று அறிய வாய்ப்புக் கிடைத்தது. அதன் அடிப்படையில் சரியான சமய நெறியில் நிற்க கற்றுக் கொண்டேன். ஆதால், ஆரியனோ அல்லது எந்த ஒரு பிராமணனோ என் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மலேசியாவில் இன்று எந்த ஆரியனோ, பிராமணனோ நம் முதுகில் ஏறி சவாரி செய்யவில்லை. நம் தமிழ் அர்ச்சகர்களும், மலையாள, தெலுங்கு வம்சாவளி அர்ச்சகர்களுமே நம் முதுகில் ஏறி சவாரி செய்கின்றார். அதில் ஒன்றுதான் நமது ஆலயங்களுக்கு புதிதாக வந்து சேர்ந்த குரு பெயர்ச்சி யாகமும், சனி பெயர்ச்சி யாகமும். இதுவும் நம் மூட மக்களிடையே வளர்க்கப் பட்ட மூட நம்பிக்கைதான். சடமான இரு கிரகங்களுடன் “பகவானை” ச் சேர்த்து குருபகவான், சனிபகவான் என்று தெய்வமாக்கி நம்மிடையே பணத்தைக் கறக்க கற்றுக் கொண்டவர்கள் அர்ச்சகர்கள். இதற்கு வழிகோலியவர்கள் நம் ஆலய நிர்வாகஸ்தர்கள். வானவியல் சாஸ்திரத்தை ஆலயத்தில் கொண்டு வந்து புகுத்தி இதிலும் பணம் பறிக்கும் கும்பலிடம் நம் மூட மக்கள் பணத்தை பறிகொடுப்பது பரிதாபத்திலும் பரிதாபம்.
தேனி அவர்களே, பிராமணர்களின் பல கடவுள் வழிபாடும் (பணம் பறிக்கும் வழிபாடு), தமிழர்களின் ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சிறிது விளக்கமாக எழுதுங்கள் அய்யா. என்னுடன் மற்றவர்களும் சிறிது விளங்கி கொள்கிறோம்.
கோவில் சென்று வழிபாடு செய்தவுடன் அடுத்தது என்ன? கடவுளை உணர்வது எப்படி? மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுள் சிலையின் கட்டுமான அமைப்பை நன்கு கவனித்தால் அது புலப்படும்.கோவில் நம் உடல் என்றும் மூலஸ்தானம் நம் மூளை என்றும் கேள்வி பட்டியிருப்பீர்கள் அல்லது படித்தும் இருப்பீர்கள்.அது எதுவரை உண்மை என்று ஆராய்ந்து பாருங்கள்.அதே மூலஸ்தான கடவுள் நம் உள்ளேயும் இருக்கிறான் என்று உணர்ந்தவுடன் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக கலையும். கோவில் வெறும் வழிகாட்டி மட்டுமே…..
தமிழ்ப்பித்தரே… சிந்தனைக் குருடர்கள் நிறைந்த பூமி இது. ஓரே தாரையில் ஓடிப்பழகிய எலிகள் நிறைந்த பூமி. புதுமையைச் செய்யவும், புதுமையாக சிந்திக்கவும் முடியாத பழைமையின் அடிமை வாரிசுகள். எழுத்து புணர்ச்சி இலக்கணத்தில் தமிழில் ஒர் இமாலய புரட்சி செய்துகாட்டியவன் இந்த நாட்டில் ஒர் இஸ்லாமியத் தமிழன். அவரை சீனீ என்பர். தமிழுக்கு சீனி சேர்த்தவன். அப்படிப்பட்டவரையெலாம் தமிழர்கள் செல்லாக் காசாக்கினர். இப்படிப்பட்ட சமூகத்திற்கு உங்கள் கருத்தாழம் புரியாத புதிராக இருப்பதில் ஆச்சரியமில்லை!
இதற்குத்தான் தான் குரு தேவை,குரு இல்லாதவன் பிணத்திற்கு சமம்.கண் இல்லாதவன்,இவனுக்கு எவ்வளவு வுபதேசித்தாலும் வுனறார்.அவர்க்கு வெளி மனம் தடித்து விட்டது.நிறைய பயிற்சி தேவை.சிலர் பணம் பணம் என்று ஏன் இப்படி அலைகின்றனர் தெரியவில்லை.சிறையில் சில காலம் அடைத்துவைத்தால் ஞானம் தானே பிறக்கும்.இன்டர்நெட்டில் திருமணம் செஞ்சு குழந்தை பெட்க ஆசை படுகின்றனர் வாசகர்கள்,இங்கே அறிவை மட்டுமே பெறமுடியும்.நான் மிகவும் பாராட்டுகிறேன் மங்கை மற்றும் சிலரை தேனீ வுட்பட.இப்போ கெரக்கான் ஹிந்டியர் அர வாரியத்தை வழிநடத்த வராங்கோ,மங்கை வாயில் இனிப்பு தர வேண்டும்.ஆஸ்திகர் வாயில் நடக்கபோவதுவே வரும்.பெரியோரை இகழ்வது எம் நோக்ஹம் அல்ல ஆனால் தேடுகிறேன் பெரியோரை.வாழ்க நாராயண நாமம்.
மதிப்பு மிகு மங்கையே வணக்கம். கடவுளை பற்றி அவரின் சிறப்புக்கள் பற்றி நீ ங்கள் பேசும்போது அது குறித்து மாற்று கருத்து சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டுதானே ? சீக்கிய சமயத்தை பற்றி எழுதி கிறிகள். சீக்கிய மதம் உருவவதற்கு முன் அவர்கள் எந்த சமயத்தை பின்பற்றினார்கள் ,, விவரம் தெரியுமா ? நம் நாட்டில் பாதி சீனர்கள் புத்த சமயத்தை துறந்து ,கிறிஸ்துவ சமயத்தை தழுவி இருகிறார்கள் , அறிவீர்களா?இறக்கும்போது கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டே இறக்கவே ஆசை படுவான் என்பது உங்கள் எண்ணம். அனால் நான் மரண எல்லையை நெருங்கியபோது அம்மா என்று தான் அழைத்தேன்.மற்ற சமயத்தவர்கள் அவர்கள் சார்துள்ள சமயதிந்மீது மனக்குறை இருந்தாலும் வெளியே சொல்ல தயங்கு வ ர்கள். தலை துண்டிக்கப்படலாம், அல்லது நாடு கடத்தப்படலாம். அறிஞர் கலிலியோ விற்கு ஏற்பட்ட நிலை , அறிந்திருப்பிகளே?
உழவர் கேட்டுக் கொண்டதற்காக எழுதுகின்றேன். இன்று மலேசிய தென் இந்தியர்களை பார்ப்போமானால், நாம் மரபு வழிச் சார்ந்த பல தெய்வ வழிபாட்டுகளிலும், வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆரிய பண்பாட்டின் வேள்வி வழிபாட்டு முறைகளிலும், வைணவ மத வழிப்பாட்டுனூடே வந்த மற்றைய தெய்வங்களின் வழிபாடுகளையும் கலந்து வழிபட்டு வருகின்றோம். இதில் எண்ணில் அடங்கா தெய்வங்கள், ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலப்பல சிறப்பு திருவிழாக்கள், பூஜைகள் என்று நாள் நட்சத்திரம் பார்த்து செய்து வருகின்றோம்.ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு கோவில் கட்டிக் கொள்கின்றோம். ஒரே கோவிலில் கருவறை மூர்த்தம் மட்டும் இன்றி இன்னும் பல தெய்வச் சிலைகளையும் பரிவார மூர்த்தங்களாக நிறுவிக் கொண்டு வழிபடுகின்றோம். பரிவார மூர்த்தங்களை கருவறையில் வைத்து பரம்பொருளை பரிவார தெய்வமாக கருவறைக்கு வெளியே வைத்து வழிபடுகின்றோம். இன்னும் சில ஆலயங்களில் சடப் பொருட்களான கிரகங்கள் நாமத்தைச் சூற்றி நவ கிரக வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். இப்படி பலவாக இருக்கும் தெய்வ வழிபாட்டிற்கு எவ்வொரு நெறிமுறைகளும் வகுக்கப் படவில்லை. ஆகமங்கள் இல்லை (வழிப்பாடு நெறிமுறைகள், ஆலயம் கட்டும் நெறிகள் போன்றவை), மெய்கண்ட சாத்திர நூல்கள் (ஒரு சமயத்தின் இறைக் கோட்பாட்டினை விளக்கும் நூல்கள்) இல்லை. இவ்வாறான பரம்பொருள் அற்ற மற்றையத் தெய்வங்கள் வழிபடுவோர் அவர்தம் தெய்வத்தை மனிதனின் நிலைக்கு தரம் தாழ்த்தி, தனது உயிர் நிலைக்கு (மனித நிலைக்கு) ஏற்றவாறு, மனம் போகின்ற போக்கிற்கு வழிபட ஆரம்பித்து விட்டனர். இதுவே நமது சமய இறைக் கோட்பாடு கெடவும், பிறர் தூற்றவும், எதுவும், எவ்வாறும் சமயம் என்ற போர்வையில் செய்யலாம் என்ற துணிவும் நம்மிடையே பலருக்கு வந்து விட்டது. இதன் வெளிப்பாடே இன்று பிறை பண்டார் பாரு முனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் அலங்கோலமான, சமயத்திர்க்குப் புறம்பான வழிபாட்டு முறைகள். அங்கே நடப்பது போல இன்னும் பல ஆலயங்களிலும் நரபலி நடகின்றது. திருவிழாக்கள் என்று கூறிக் கொண்டு வரும் காவடி ஆட்டங்கள் எத்துனை வகை, காவடியுடன் ஆடி வரும் கூத்தாடிகளின் நிலை என்ன? இதற்கு மேலும் கையில் மதுபான புட்டிகளுடனும், வாயில் தீவட்டியுடனும், குத்தூசிகளை அருவறுக்கும் நிலையில் குத்திக் கொண்டு ஆடி வரும் நிலைதான் என்னவென்பது?. குறைகளைச் சொன்னால் எண்ணில் அடங்கா!. இவ்வாறு ஒரு வரைமுறை (சட்டம்) இல்லமால் தாந்தோன்றித் தனமாக பக்தியைப் புலப்படுத்துவதுதான் சமயமா? அல்ல இவைகளெல்லாம் நாமே அறியாமையில் மூடத் தனமாக வளர்த்துக் கொண்ட பக்தி நெறிகளா?. பின்கருத்தே சரியானது. சரி இவ்வாறான தற்குறி பக்தி நெறியை தடுத்து நிறுத்த இயலுமா? தொடரும்.. .
அம்மா
எவ்வொரு வழிபாட்டு முறைக்கும் ஒரு நெறியோ அல்லது வரைமுறைகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லையானால் அவ்வாறான பக்தி வழிப்பாடு வழி தவறிச் செல்வதிலிருந்து கட்டுப்படுத்த இயலாது. காரணம் இது சரி, இது பிழை என்பதற்கு அவர்களுடைய வழிபாட்டு முறையிலோ, பக்தி நெறியிலோ வழிகாட்டுதல் இல்லை. அவர்களுக்கு இது பிழையான முறை என்பதனை வலியுறுத்திச் சொல்வதற்கு அவ்வாறான, பரம்பொருள் அற்ற, மற்றையத் தெய்வங்களின் வழிபாட்டு முறையில் நெறிமுறைகளிள் இல்லை. இவ்வாறு வந்ததே கடந்த தைபூச விழாவின் போது மலேசிய இந்து சங்கம் காவடிகள் எடுப்போரும் அத்துடன் வரும் கூத்தாடிகளுக்கு போட்ட விதிமுறைகளைக் கண்டித்து மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவரே பக்தர்கள் வேண்டிக் கொண்டபடி நேர்த்திகடனைச் செலுத்தலாம் என்றது. அதற்குப் பதிலடியாக இந்து சங்கம் கேட்ட கேள்வி ‘நிர்வாணமாக காவடி எடுக்க வேண்டிக் கொண்டால் அவ்வாறே செய்ய விடுவீர்களா’ என்பது. பதிலடியான கேள்வி கோணங்கித்தனமாக இருந்தாலும் கேட்கப் பட வேண்டிய கேள்வியே. இவ்வாறே, பல தெய்வ வழிபாடுகளினால் ஆலய நிர்வாகச் செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அர்ச்சகர்கள் தெய்வச் சிலைகளுக்கு சாத்துபிடி செய்யவும், அலங்கரிக்கவும் , பூஜைகள் செய்யவும் நேரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவியாளர்களாக மேலும் எடுபிடி அர்ச்சகர்களை வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆலய நிர்வாகச் செலவுகளை சீர்கட்ட முடியாத நிலையில், வருமாணத்தைப் பெருக்க வேண்டி ஆலயத்தில் வியாபார நோக்கத்தை முன் வைத்தனர் நிர்வாகஸ்தர்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி யாகம் செய்வோம். இன்னும் பல பூஜைகள், வேள்விகள் என்று புதிது புதிதாக கண்டுப் பிடித்து அர்ச்சகர்ளும் ஆலயங்களும் பணம் சம்பாரிக்கும் நோக்கில் ஆலயத்தை வியாபாரத் தலமாக மாற்றி விட்டனர். இந்த ஆலய வியாபாரம் செழிப்பாக வளர பலவகையான மூட நம்பிக்கைளை ‘ஐதீகம்’ என்ற போர்வையில் வளர்த்து விட்டனர். இதற்குப் பலிகடவானது நமது இந்தியப் பெண்மணிகளே அதிகம். பெரும்பாலும் உண்மையான சமய அறிவு இல்லாததால் ஏற்பட்ட பிழையான பக்தி நெறியில் நின்ற இவர்களே மூட நம்பிக்கைகள் வளர வழிவகுத்தனர். அவ்வாறே இன்னமும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பது போல. இவ்வாறான பிழையான பக்தி நெறியில் ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணத்துவதர்க்கு நரபலி இடும் இடத்தில் ஆண்களே முன்னோடிகளாக நிர்ப்பார். பல தெய்வ வழிபாட்டால் இறை பக்தி நீங்கி, பக்தர்கள் கிரியைகளிலே தமது மனோபலத்தை நோக்க விடுவதால் நம் சமயம் சன்னல் பின்னலாகிப் போனது. இதை நிவர்த்தி செய்யவே முடியாதா என்ற ஆதங்கம் அறிவார்ந்த இந்துப் பெருமக்களிடம் அதிகமாகவே உள்ளது. யோசி, யோசி, மாத்தி யோசி!. தொடரும்.
உலகத்தில் இன்று முன்னோடி மதங்களாக இருப்பவை, அவை தோன்றிய முதலே ஒரு கடவுள் வழிப்பாட்டினைக் கொண்டனர். தமிழர்களும் அவ்வாறே பரம்பொருள் என்னும் ஒரு கடவுள் வழிப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய சிவஞானியாகிய திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து அறிகின்றோம். ‘சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை’ என்று வலியுருத்தியதிலிருந்து பரம்பொருளாகிய சிவனைவிட மேலொரு தெய்வம் இல்லை என்பதனை உணர்த்தினார். திணையொரு தெய்வம் தமிழர் கொண்டிருந்ததை தொல்காப்பியர் நமக்கு விவரித்தாலும், எவ்வொரு திணைக்கும் அன்றி பொதுவாக அனைவராலும் வணங்கப்பட்ட பரம்பொருளான சிவ வழிபாடு அன்றே தமிழர்களின் பொது வழிபாட்டு முறையாக இருந்ததை அறிகின்றோம். அதை ஒட்டியே ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வாழ்த்தொலி தோன்றியது. அவ்வழியே வந்த நால்வர் பெருமக்களாகிய சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரும் பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவடியைப் போற்றி அவர் திருநாமங்களை தேவாரப் பாமாலைகளாகவும், திருவாசகமாகவும் பாடினர். திருநாவுக்கரசர் பரம்பொருளாகிய சிவபெருமானைத் தவிர்த்து வேறொரு தெய்வத்தை நாம் சென்று வாங்குவோம் அல்லோம் என்று அன்றே தைரியமாகச் சொன்னார். இன்று நாம் அதனை எடுத்துச் சொல்வதற்கு பயப்பட வேண்டுமோ?. அவ்வாறே சம்பந்தரும் ‘ஒரு நெறிய மனம் வைத்துனர் ஞானசம்பந்தன்’ என்று தன்னை ஒரு கடவுள் வழிபாட்டில் நிலை நிறுத்தினார். சிவத்தை நாடியே மற்ற இரு நாயன்மார்களும் நின்றனர் என்பது பக்திக் கால வரலாறு. இவர்கள் நின்ற சிவநெறிக்கு ஆகம விதிமுறைகள் உண்டு, மெய்ஞான சாத்திரங்கள் உண்டு. இவற்றை விட்டு விலகி செய்யும் எவ்வொரு சமய கிரியைகளோ, இறை கோட்பாடுகளோ, ஆலய விதிமுறைகளோ இந்நெறிக்கு புறம்பானது என்று அறுதியிட்டுக் கூற முடியும். இந்நெறிக்கு உட்பட்ட எவ்வொரு ஆகமும் சட்டமேரும். ஆக, பிழையான பக்தி நெறியில் நிற்பவர்களுக்கு வரையறை வகுக்க இவ்வாகமங்கள் வழிவகுக்கின்றன. கட்டுப்படாதவர்களை கட்டி வைக்கவும் முடியும், வெளியே நிறுத்தவும் முடியும். இவ்வாறு நெறிமுறைப் படுத்தப் பட்ட ஒரு கடவுள் வழிபாடு இன்று நமக்கு மிகவும் அவசியமே. நம் சமயத்தில் உரு மாற்றத்தைப் பற்றி யோசிக்க விரும்பும் அன்பார்ந்த தமிழ் அன்பர்களே, இந்துப் பெருமக்களே எதிர்வரும் 26 & 27, ஜூலை மாதம், 2014 – ல் ‘Shah Alam, Midlands Convention Centre- ல் நடைபெறவிருக்கும் ‘நால்வர் உணர்த்திய ஒரு கடவுள் வழிபாடு’ என்னும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் 2-ஆம் உலக சைவ சமய மாநாட்டில் கலந்து பயன் பெறலாம்.முன் பதிவுக்கு saivaperavai.org என்னும் அகப்பக்கத்திர்க்குச் சென்று பார்வை இடவும்.
ஞானி அவர்கள் கூறியது போல அந்தப் பரம்பொருளின் உணர்வு நம் மனதில் உள்ளூரத் தோன்றினால் பொய்யான பக்தி நெறியை நம் மனம் நாடாது உண்மையான மெய்யுணர்வில் நிற்கத் தூண்டும். இதுவே நம்மை முறையான அறவழியில் நின்று மேலோங்கச் செய்யும். நம் செய்கைகள் நல் வழிப்படுத்தப்படும். நற்பண்புகளுடன் வாழ்வதற்கு உண்மையான மெய்யுணர்வு வழிவகுக்கும். .
பக்தியை பற்றி எவன் ஒருவன் பேசுகிறானோ அவன் பொய்யான கருத்தை மாயையான கருத்தை சொல்ல அந்த
மார்க்கம் இந்த மார்க்கம் என்று உளறுவான் ,அவனின் பேச்சை கேட்டு காலத்தை வீணடிக்காமல் நம் கையே
நமக்கு உதவி ,நமக்கு தெய்வம் நம்மை பெற்ற தாய் தந்தையே அவர்களை வணங்குவோம் உண்மையை புரிந்துகொண்ட தமிழனுக்கு நன்றி நைனா.
பெற்ற தாயைவிட மேலானவன் சிவபெருமான் என்று உணர்க! ஒரு சிறு உதாரணம்,நம் வாசி 24 மணி நேரங்கள் நிற்காமல் செயலில் உள்ளது; அதை யார் வழி நடத்துகிறார்? நீங்கள் விழித்திருக்கும் வேளையில் உங்கள் மூளையின் ஆற்றலில் அவை வழிநடத்தபடுகிறது,நீங்கள் உறங்கும் பொது? உலகில் எந்த பெற்றோரும் தான் பெற்ற செல்வங்களை 24 மணி நேரங்கள் கண் இமைக்காமல் காத்து வர முடியாது! ஏனென்னில் அவர்களும் சாதாரண மானிட பிறவியே! பரம்பொருள் ஒருனவே அச்செயலை நல்லவர், தீயவர் என்று பாராமல் அனைவரையும் தன் செல்வங்கலாகவே காத்து வருகிறான்… தாய்,தந்தை,குரு,தெய்வம்.
பெற்ற தாய் தந்தையினர் தங்கள் பிள்ளைகளை கொள்ளுவது
இல்லை ,பிள்ளைக்கு நோய் என்றால் மருத்துவ்க்மைன்க்கு
கொண்டு சென்று நாம் குணம் ஆகும் வரை தூங்காமல் கண்
விளித்து வளத்த அந்த பெற்றோரைவிட தலையில் ஒரு
பெண்டாட்டி பக்கத்தில் ஒரு பெண்டாட்டி வைத்து கொண்டு
ரூதர தாண்டவத்தை காட்டுகாரன் போல புலியின் தொலை அணிதுகொண்டு ஆடும் சிவன் எப்ப்டி நைனா சிவபெருமான் பெற்றவர்களை விட மேலானவர் , நீ உன் தாய் தந்தைக்கு
பறக்காமல் சிவனுக்கு பிறந்த மாதிரி எழுதாதே ,அப்புறம்
உன் தாய் ——————–.
ஆஸ்திகறுக்கு வணக்கம்,நால்வர் பெருமக்கள் பக்தரா அல்லது இசை பிரியரா,தமிழ் நாயன்மார்கள் ஏன் நிறைய பாடல்கள் பாடி இறைவனிடம் முக்தி பெற்றனர்.சரியை,கிரியை,யோகம் ,ஞானம் என்பதை யெட்பீரா.அடக்கம் இராதவனுக்கு ஒழுக்கம் வராது என்று வள்ளுவம் சொல்கிறது.வுண்மை என்பது முற்றிலும் வேறுபட்டது எந்த மதத்திலும் தேவை படாத சீரமைப்பு ஹிந்து மதத்தில் வட்புருதபடுகிறது ஏனோ.பக்தியில் பல விதம் வுள்ளது வாசகர் அறியாததா(கண்ணப்பன் நாயனார்)அவர் காட்டியது தாய் பிள்ளைக்கு காட்டும் புனிதமான அன்பு யாருக்கு வரும் இந்த த்யாகம் அந்த நால்வருக்கு வருமா.ஆதியை ஏவல் செய்ய சொல்பவனே கடவுள் இல்லை சொல்வான்,காரணம் ஆதி ஏவல் செய்யாது மாறாக காத்தல் மாத்திரம் செய்யும் என்று அறிக.எல்லா மதத்திலும் அவரவர் கோரிக்கையை அவரவரே ஆதியிடம் ஆசனத்தில் அமர்ந்து த்யானம் செய்கின்றனர் அவர் த்யானம் பக்குவப்படும்போது அவர் எண்ணம் திண்ணம் ஆகிறது,அதை விடுத்தது அர்ச்சனையை பிறர் செய்ய சொல்லிவிட்டு ஊர் கதை பேசி நேரத்தை வீணே கழித்து பிறர் மீது பழி போடுவது அறிவுடையோர் செயல் அல்ல.தமிழர் பாடியே யிரை தன்மை அடைந்தனர் ஆகையால் தமிழர் கட்டாயம் தன் வாரிசுகளை சங்கீத வகுப்புக்கு அனுப்புவது சிறப்பு.அடுத்தவனை பார்த்து நாம் நம் மதத்தை அவன் பாணியில் செலுத்த நினைப்பது தவறு.சரவாக் காரர்களை பார்த்தீரா காட்டு வாசி போல் வுடுத்தி தன் கலாசாரத்தை
வுறுதி படுத்துகின்றனர்,அதே நாமாய் இருந்தால்……. .நம்மை நாம் தான் கௌரவபடுத வேணும்.தை பூச தினத்தன்று உலகமே காணவருகிறது ஏன்,கலப்படமில்லா விழா நடப்பதை காணவே.பால் குடம் எடுக்க வேண்டுமாம் ஆனால் முருகருக்கு அபிஷேகம் செய்ய கூடாதாம் பசியில் வாடும் குழந்தைக்கு தானம் கொடுக்கவேண்டுமாம்.இது ஈகை தனக்கும் தன் குடும்பத்திற்கும் செய்யப்படுவது,ஒப்புரவு வேறு என்று தெரிந்து தெளிக,வாழ்க நாராயண நாமம்.
உலகத்திலே உள்ள சமயங்கள் பல அவற்றுள் நமது நாட்டிலே வழங்கும் சமயங்கள் நான்கு. அவை சைவ சமயம் <புத்த சமயம் இஸ்லாம் சமயம் என்பன இவற்றுள் புத்த சமயம் 2450 வருஷங்களுக்கு முன் தோன்றியது கிறிஸ்து வம் 1950 வருஷங்களுக்கு முன் உண்டானதாம் இஸ்லாம்சமயம் 1300 வருஷத்துக்கு முன் உண்டானது , சைவ சமயம் இனகாலதிலே உண்டானது என்பது ஒருவராலும் சொல்லி கொள்ள இயலாதது ,ஐய யாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த அர்ஜுனன் முதலியோர் சைவ சமயிகளாக இருந்தார்கள் அர்ஜுனருகுப் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த இராமர்முதலியோரும் சைவ சமயிகளே , ஆதலற்ர் சைவ சமயம் சரித்திர காலத்திற்கு அப்பாற்பட்டதாய் உள்ளது ,
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?.
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை!
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை!
– என்னவன் நாமத்தை பாதி நீ சூடி இருப்பதால் உன்னை விட்டு விடுகிறேன்.
-அறியாமை
(http://www.tamilvu.org/library/l4170/html/l4170ind.htm)
(http://youtu.be/_uAE2d0u3Ko)
தேனி அவர்களுக்கு, தங்களின் கருத்துக்கள் என் அறிவு தேடலுக்கு விருந்தாகவும், மருந்தாகவும் அமைந்தன. நன்றிகள் அய்யா.
சைவ சமயம் என்றால் என்ன,சைவ சமயம் ஏன் சிவத்தை குறிப்பதை நம்புகின்றனர்.சைவம் என்றால் காய் கரி கீரை சமைத்து வுனனும் வுனவாயிற்றெ.வாழ்க நாராயண நாமம்.
தமிழ்ப்பித்தன் முதலில் நால்வர் அருளிய திருமுறைகளைக் கருத்தூண்றிக் கற்க வேண்டும். நம்மில் பலர் இன்னும் மூட நம்பிக்கையிலேயே மையம் கொண்டு வாழ்கின்றனர். அதனால்தான் பரம்பொருளை உணராமல் , அவரது அன்பை உணராமல் , பயத்தினால் ஏற்பட்ட பக்தியில் வாழ்கின்றனர். நால்வர் காட்டிய வழியை நாடுவோம்; நற்பயனைப் பெறுவோம்.
நால்வர் காட்டிய வழி ,64 நாயன்மார்கள் காட்டிய வழி , வேதம் சித்தாந்தம் பாடல்கள் எல்லாம் காசு மூன் நில்லாது நைனா,காரியத்திற்கு ஒவ்வொது ,mh3370 .விமானம் காணாமல் போனதை கண்டு பிடிக்க நாடு சிரமத்தில் இருந்த போது ஒரு வேதம் தெரிந்த சாமியாரோ அல்லது குருஜியோ முன் வரவில்லை எங்கு ஓடிபோய் ஒளிந்துகொண்டார், நைனா சாவின் உச்சில் நின்றால் உங்கள் மனைவி பிள்ளைகள் உன்னை காப்பற்ற மருத்துவனைக்கு கொண்டு போவார்கள் , கோயிலுக்கோ அல்லது வேதம் ,நாயன்மார்கள் பாடிய பாடலை பாடிக்கொண்டு வேடம் போடும் மடதிர்க்கோ கொண்டு போவது இல்லை , எதார்த்தத்தை புரிந்துகொண்டு வாழ பாருங்கள் ,எனது நண்பன் ஒருவன் காப்புறுதி கம்பனியில் மார்க்கெட்டிங் வேலைக்கு போன போது நெற்றியில் பெண்கள் மாதிரி சிவப்பு போட்டு ,திருநீர் இட்டு நேர் முக பெட்டிக்கு சென்றான் ,பெட்டியை நடத்திய நிர்வாகி உனக்கு பொது அறிவு தெரியுமா என்று கேட்தற்கு நான் நாயன்மார்கள் பாடல்கள் ,சாமியை கும்பிடுவது போன்றவற்றை படித்து அன்றாடம் ஓதுவேன் என்று பதில் கூறியதை கேட்ட நிவாகி நீ நேர்முக பெட்டிக்கு இங்கு வந்திருக்க கூடாது ,கோயிலுக்கு பூசாரி வேலைக்கு சென்று இருக்க வேண்டும் என்று கூறினார் .அதனால் அன்பார்த்த
நைனா மார்களே நம் சமூதாயம் மற்ற இனத்துடன் போட்டி போட்டு மேன்னேற அவர்களுக்கு தேவையான காலத்திற்கு ஒப்பான அறிவுரைகளை சொல்லிகொடுங்கள் அதை விடுத்து அந்த அந்த வேதத்தில் ,அந்த நாயன்மார்களில் இது இருக்கிறது அது இருக்கிறது என்று சொல்லாதீர்கள் , சமயம் ஒரு வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இருக்காது தெரியுதா வெங்காய நைனா . ,
நோயாளி(TP):ஐயோ! நைனா!மைனா! யாராவது காப்பாத்துங்க நெஞ்சு வலி தாங்க முடியல!
மனைவி:கொஞ்சும் பொறுத்துக்குங்க நைனா!ஆபரேஷன் தியேட்டர் உள்ள போயிடிங்கனா டாக்டர் உங்கள பத்திர பாத்துக்குவாங்க நைனா! இந்த டாக்டர் heart surgeon,specialist ஆம் அவர் கேட்ட RM 35K நம்ம பையன்
(கொய்னா) இப்பத்தான் கொடுத்தான்! அதனாலே பயபடாதிங்க நைனா! அவரு எப்படியாவது உங்கள காப்பாத்திருவாரு!
4 hrs later
Surgeon:அம்மா உங்க கணவருக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செஞ்சுட்டோம் இனி எல்லாம் மேலே உள்ளவன் கையிலேதான் இருக்கு! அதனாலே நீங்க உங்க சாமிய நல்ல வேண்டிக்குங்க!
கொய்னா:என்னம்மா டாக்டரு இப்படி சொல்றாரு?
மனைவி:அதாண்ட அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன் இந்த வெங்காய மனுஷன்கிட்டே;நீங்க சாமி குமிடலானும் பரவாயில்லை,ஆனா நிந்தனை செய்யாதிங்கன்னு!நாளைக்கு எதாவது ஒன்னுனா இறந்தவங்க காதுலே சிவபுராணம் பாட நமக்கு நல்லவங்க வேணுன்னு!
தம்பி kayee எந்த இடத்தில முருகனுக்கு மட்டும் தைபுசம் செய்கின்றனர் . எனக்கு தெரிந்தவரை தைபுசதன்று வித விதமான நிறத்தில் அதிலும் ஆண்கள் சமய உடை அணிவதே மிக குறைவு காவடி எடுப்பவர்கள் ( கருப்பு ,சிவப்பு ) என்று அணிந்து காவடி மட்டும் அல்ல பெயர் தெரியாத பொருளை எல்லாம் தலை மேல் வைத்து கொண்டாடுகின்றனர் , சில நேரங்களில் தைபுசதிற்க்கும் அம்மன் கோவில் திருவிழா விற்கும் வித்யாசம் தெரியாத பெருநாளாக உள்ளது இன்றைய தைபுச திருவிழா . தைபுசத்தை கலப்படமில்லாத பெருவிழ என்று சொல்லாதிர்கள் . அதே தைபுசதில் மதுரைவீரன் காளி போன்ற தெய்வத்திற்கும் காவடி எடுகின்றனர் . பலருக்கு எந்த பெருநாளை யாருக்கு செய்கிறோம் என்று குடா தெரியாமல் இருகின்றனர் . கோவிலில் சொல்லிதர வேண்டியவர்கள் சொல்லி தர பயபடுகின்றனர் காரணம் உள்ளதை சொன்னால் கோவிலுக்கு வெளியே அந்த பூசாரிக்கு காத்திருக்கும் அறுவா வெட்டு . முடிந்தால் நேரம் இருந்தால் உஜிலாதேவி எனும் வலை பக்கம் பாருங்கள் கண்டிப்பாக தெளிவு பிறக்கும் . ஒம் நமோ நாராயண
நீங்கள் சொல்வது வுன்மையே,இவை முறையாக பணிவாக அன்பாக சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் காது கொடுத்து கேட்பார் இளைஞர்கள்.நடராஜ மீது ஏற்பட்ட வெறுப்பு காவடி மூலம் நுழைந்தது,பால் குடம்,அர்ச்சனை,மற்றும் பல வழியில் வுள்ளே ஏவி விட்டனர்.அது பின் நாளில் எவியவரையே தாக்கும் என்பதை மறந்துவிட்டனர் ஏனோ,நாட்டாமை தீர்ப்பை மாதிசொல்லு என்று கழுத்தில் பாரங் வெச்சு சொரியும் பொது தெரியும் விடுங்க மங்கை.சுழல் காவடி அதிக விலையில் வாடகை சுமையை தருகிறது,இதில் குத்தகை வேறு,வெளியில் இருந்து கொண்டு வர கூடாது.காலத்தில் மாறிவிடும் மங்கை பொறுமை தேவை.இந்த கலாசாரம் இருந்தவை வாழ்ந்தவை அதை அதிகாரம் கொண்டு அழிக்க முடியாது,இவர்கள் இஸ்லாமியர் கொள்கையை நிலைநாட்ட ஏதோ மிசின் ரோபோ போல பக்தர்களை நினைகின்றனர்.யாரோ குரு பணம் வாங்கி யோகா பவேர் தருகிறார் என்று கேவலபடுதினர்,இபோர் தமிழ் பள்ளியில்,ஆரம்ப பள்ளியில் பணம் வாங்கிதான் நடந்தது,.வாய் இருப்பதால் எதை வேணுமென்றாலும் பேசுவர்.நாராயண நாராயண.
நடந்து முடிந்த வருடாந்திர விளையாட்டு போட்டியில் எல்லா வகையிலும் குழுவுக்கு வெற்றியை தேடி தந்த மாணவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே.ஒவ்வோறு குழுவுக்கும் நான்கு போட்டிகள்,இரண்டு குழு விளையாட்டு போட்டிகள்,இரண்டு தனி போட்டிகள்.இரண்டு குழு விளையாட்டிலும் பங்கெடுத்து அடுத்து ஓட்டப்பந்தயத்தில் முதல் நிலை வாகைசூடி,குண்டேரியும் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற அந்த மாணவன் தகுதியற்றவனாம்.இரண்டே குழு விளையாட்டில் கலந்துகொண்ட ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு ஓலாராகாவான் கோப்பை மற்றும்2.சம்மந்தபட்ட மாணவன் ஆறாம் ஆண்டு மாணவன்.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் புகார் செய்தாச்சு,சம்மந்தப்பட்ட பள்ளியிடம் நியாயம் சேர்தாச்சு பலன் இல்லை இனி எஸ்.யூ.கே,பின் மேடியா பக்கம் நகர திட்டம்,இவர்கள் நியாயம் பேசுவதை கண்டால் வியப்பாக,பரிதாபமாக உள்ளது மங்கை.வாழ்க நாராயண நாமம்.
“காசேதான் கடவுளப்பா, அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா” என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று வாதாடும் தமிழ் பித்தரே, அந்த காசு உம்மை விட்டுப் போகும்போது சொல்லவதில்லை.
சமயத்தில் நுனிப் புல் மேய்ந்து விட்டு, முட்டைப் போட்ட கோழி மாதிரி கத்துவதால் என்ன பயன்?. சைவ சமயம் என்றால் பானை சட்டிகளைக் கொண்டு போய் சமைக்கும் நிலையம் அல்ல. சிவபெருமான் என்னும் பரம்பொருளை கடவுளராகப் போற்றி வழிபடும் சிவநெறி கொண்ட சமயம் என்று அறிக. அன்பே சிவம் என்று நிற்கும் இவர்கள், உயிர்கள் அனைத்தும் சமம் என்பதனால் பிற உயிர்களை துன்புறுத்தல் ஆகாது என்று தங்களுக்கு என கொல்லாமை நியதியை வகுத்துக் கொண்டு மரக்கறி உண்டு வாழ்ந்தவர்கள். இவர்கள் சைவர்கள். சைவர்கள் உண்ணும் உணவே பின்னாளில் சைவ உணவு என்றாயிற்று. நேரம் இருந்தால் நாயன்மார்களை அறிந்து வரவும். சமயத் தெளிவு இருந்தால் திருமுறைகளைப் பொருள் அறிந்து படிக்கவும்.
சிவ அடியார்கள் சாப்பாட்டு பிரியர் என்பதை தெளிவாக நிரூபித்துவிட்டீர்.சாப்பாட்டில் காய் கறி கீரை பருப்பும் சேர்க்கப்படுகிறது,நல்லவேளை கீரை பேரையோ பருப்பு பேரையோ,தேங்காய் மாங்காய் என்று யோசிக்காமல் போனதற்கு பாராட்டவே வேணும் தமிழ் சித்தரே.வாழ்க நாராயணன் பகழ்.
நல்ல தருணத்தில் சொன்னீர்கள் இல்லேன்னா நான் கேதரிங் என்று ஆர்டர் பணியிருப்பேன் சாபிட்டு பார்க்க மரத்தின் கறியை.நாம் நுனிப்புல் மேய்ந்து பழக்கம் நீர் எப்படி,அடிபுல் மெய்ந்தவரோ,விடு கையீ யார் எதை மேஞ்சா நமக்கென்ன,நாம் போட்ருவோம் நாராயண நாமம்.வாழ்க நாராயண நாமம்.
மூடப் பழக்கத்திற்கு சமூகம் பலியாகக் கூடாது எனும் நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. ஆனால், கருத்துகள் இறை மறுப்பு கொள்கைக்கு இட்டுச் சென்றது வருத்தமே. மூடநம்பிக்கை வேறு உண்மை சமய நம்பிக்கை வேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள். இறைமறுப்பு கொள்கை அது தோன்றிய தமிழகத்திலேயே தோற்றுப்போய்விட்டது. படைப்பு ஒன்று இருப்பதே படைத்தவன் ஒருவன் இருப்பதற்கு சான்று. மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவடைகிறது என்பதும் ஏற்புடைய ஒன்றல்ல. இயேசு, புத்தன் போன்ற மஹான்கள் இறைவனைப் பற்றிதானே பேசினார்கள். உலகம் அந்த மஹான்களைத்தான் இன்றுவரை போற்றுகின்றது. இறைமறுப்பு கொள்கையாளர்களையல்ல. பெரியார் யார் என்று கேட்போரே இன்று அதிகம்!
ஐயா பினாங்கு கீரன் , இன்னும் எத்தனை நாளைக்கு இறைவன் என்ற மாயையில் உழன்று கொண்டிருக்க போகிறீர்கள்? இறை மறுப்பு கொள்கை தோற்கவில்லை! நாளுக்கு நாள் மெதுவாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எத்தனை உலகத்திற்கு சென்ற்ருக்கிரீர்கள்?மனித வாழ்வு இவுலகோடு முடிவடைவதில்லை என்று கூற! .பூனை கண்ணை மூடி கொண்ட என்ற கதைதான் ….. நினைவு படுத்துகிறது , பெரியார் பற்றிய உங்கள் கருத்து!!!!. அல்லது சீ சீ இந்த பழம் புளிக்கும் ….!!! என்ற நரியை ………..?
ஐயா இமு.த. நீலவண்ணன், நீங்கள் கற்பனை பன்னிக்கொண்டிருக்கும் அந்த இறைவன் இல்லை…இல்லவே இல்லை. அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், உண்மை இறைவன் இருக்கின்றான். எவரும் அவர்தம் மூளையைப் பார்க்க முடியாது. ஆனால், மூளையைப் பார்த்தால்தான் நம்புவேன் என்பது அறிவுடைமையாகாது. அது போலத்தான் இறைவனும் அவனது இராஜ்யங்களும்.
மூட நம்பிக்கை,எது மூடநம்பிக்கை ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சசோதர சகோதரி என்பதையா,பெற்றவள் தாய் என்பதையா இப்போது அதிகம் ஞாபக மறதி,இவர்கள் ஆதி குரங்கென்பதை மரந்தே விட்டேன்,மண்ணிக்கவும் ஆதிகுரங்கே,நாராயண நாராயண.
சைவ சமயத்தினர் போற்றும் ஐம்பெரும் சிவா தளங்களில் ஒன்றான திருவண்ணமலை 260 கோடி (2,600,000,000) ஆண்டுகள் பழமை வாய்ந்ததென அறிவியலாளர்கள் ஆய்வு கூறுகின்றது.இமயம் தோன்றியதும் இதற்கு பிறகுதான் என்பதை உறுதிபடுத்தினர் புவியிலாளர்கள்.தாழம்பூ கூற்று ஒரு புறம் இருக்க,அடியை தேடுங்கள். பரம்பொருளின் அடி நம் உச்சி, பரம்பொருளை அறிவீர்! அறிவு ஒன்றே பிரதானம்! எல்லாம் சிவமயம்!
த்யானம் செய்யுங்கள்,பரம் பொருளை உணருங்கள்,பின் பக்தி செய்யுங்கள்.அஷ்டாங்க யோகம் பழகுங்கள்,சாமியார் ஆகவேண்டாம்.சிறந்த தலைவணாக புகழ் பெற வாழலாம்.உங்கள் தேவை பூர்தி மூலாதாரத்தில் தூங்கிகொண்டிருக்கிறது,த்யானம் அதை தட்டி எலுப்பிவிடும்,அஷ்டாங்க யோகம் அதன் அறம்.எலும்பிய குண்டலினி சர்வ காரிய சித்தி தரும்,முறையாக குரு பெற்று பயிற்சி செய்யுங்கள்,வேதம் கற்ற குருவாய் தேடுங்கள் முறையாக குருவிடம் கற்ற கல்வி ஈரேழு தலைமுறையை காக்கும் என்கிறது குறள்.யாம் இங்கு தொட்டுக்காட்ட முடியாது சுட்டிக்காட்டவே மடியும்.ஈகை,ஒப்புரவு போல்,இங்கே யாம் கூரியது ஒப்புரவு.உங்கள் குருவிடம் பெருவது ஈகை.வாழ்க நாராயண நாமம்.
த்யானம் செய்பவர் மரந்தும்கூட நெகட்டீப் சிந்தனை கூடாது,தாழ்வு மணபான்மை கூடாது.பின் அது அப்படியே நடந்துவிடும்,ஆதலாலே சொல்வர்,நன்மையும்,தீமையும் பிறர் கொடுக்க வாரா.நீர் எதை நினைக்கிறாயோ அதுவாய் ஆகிறாய்.இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராய்ந்து அதனை அவன்கண் விடல்.இதனை பெரியோர் கூரியது.அஷ்டாங்க யோகத்தில் ப்ராணயாமம் பகுதியில்,நாடி சுத்திக்கு முன் காயசுத்தி செய்தல் வேண்டும்.மூச்சை நிருத்தும் நேரம் எவ்வளவு நிருத்துகிரோமோ அந்த அலவு ஆற்றல்கூடும்,அதிக நிமிடம் சிரமமின்றி நிருத்தும் போது நீ வெற்றி பெறுகிறாய்.உதாரணத்திற்கு மூச்சை இலுத்து நிருத்தி”படிப்பில் யாம் திறமைசாலி”என்று நினைப்பின் நீர் அதை பெறுவாய்.இப்படி பகிரங்கமாக சொன்னால் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.முதலில் அறத்தை கற்றுக்கொள்ளும் இல்லையேல் தீயவழியில் செல்லக்கூடும்.மாணவர் எதை கேட்கவேண்டும்,படித்து முடித்தவர் எதை கேட்கவேண்டும்,குடும்பஸ்தர்,அரசியல்வாதி/துறவி எதை கேட்க வேண்டும் என்ற அறம் தெரிந்திருக்கவ் வேண்டும்.அறம் தெரிந்த எவரும் காதலில் விழ மாட்டார் ஆனால் பொருப்பாய் நடப்பார்.நீர் கற்ற அறம் உண்ணை சார்ந்தவரையும் பற்றும் ஈரேலு தலைமுறையையும் காக்கும்.வாழ்க நாராயண நாமம்.
சிவபெருமான் திருவடியை அடைய பல வழிகள் நமக்கு அருளியிருகின்றனர் நம் முன்னோர்களான சித்தர் பெருமக்கள்.சித்தருக்கும் சித்தரான முருக பெருமான் நம் அனைவருக்கும் துணை.
அதில் ஒன்றை பயன் பெற புகட்டலாமே,காத்திருபோம்,வாழ்க நாராயண நாமம்.
kayee! நான் கற்றது கை மண் அளவே! இறைவனை முழுமையாக சரணடைந்து விட்டால் அவ்வப்போது அந்த பரம்பொருள் அனுப்பும் தூதுதான் இது போன்று: வரும் 26 & 27, ஜூலை மாதம், 2014 – ல் நடைபெறவிருக்கும் 2-ஆம் உலக சைவ சமய மாநாடு.தாங்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம்,காத்திருக்க அவசியம் இல்லை! எல்லாம் சிவமயம்!
எனக்கு நாயன் மார் என்றால் யார் என்பதை மட்டும் விளக்க முடியமா சார்.வாழ்க நாராயண நாமம்.
ஞானீ…நீங்கள் எழுதுவதை எல்லாம் தனிக்கை இன்றி வெளியிடுகிறார்கள் என்பதற்காக 260 கோடி ஆண்டுகளுக்கு முன்னமேயே திருவண்ணாமலை சிவதளம் உள்ளதென்று ,அதுவும் இமயம் தோன்றுவதற்கு முன்னமேயே உள்ளது என்று எழுத எப்படித்தான் உமக்கு மனம் வந்ததோ தெரியவில்லை. தயவு செய்து எங்களை முட்டாளாக்கும் முயற்சியை கைவிடுங்கள். உடனடியாக இதற்கான ஆதாரத்தை வெளியிடும்படி தங்களையும் செம்பருத்தியையும் கேட்டுக்கொள்கிறேன்.
மலேசியாவில் சில தெலுகு மலையாளிகள் கூட விட்டுக்கு வெளியே மதுரை வீரன் ஐயனார் போன்ற கடவுளை வாசலுக்கு பக்கத்தில் வைத்து வணக்கு கின்றனர் . சிலர் வீட்டுக்கு வெளியே சிறிய கோவிலையே வைத்து வணக்குகின்றனர் . வருடத்துக்கு ஒரு முறை கோழி ஆடு என்று பலியும் தருகின்றனர் . இது சரியா ? நான் யாரையும் கேலி செய்ய வில்லை , எனக்கு யாரவது விளக்க முடியுமா ?? மனிக்கவும் எனக்கு தமிழர்களின் சமயம் அவ்வளவாக தெரியாததால் கேட்கிறேன் . தேனீ அண்ணா நீங்களாவது சொல்விர்கள ?
தங்கை மங்கை தங்களின் குறையே எங்களின் ஆதங்கமும் கூட. வீட்டுக்கு வெளியே தனியொரு தெய்வ சந்நிதி வைத்து வணங்குவது நம் சமய நெறிகளுக்கு முரணானது. மதுவும், மாமிசமும் வைத்துப் தெய்வங்களுக்குப் படைப்பது சமய மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும். போதிய சமய அறிவு இல்லாதவர்களே பிழையான பக்தி நெறியில் நின்று வழிபடும் முறைகள் இவை. நாம் 21-ம் நூற்றாண்டுக்கு வந்து விட்ட பிறகும் இந்நாட்டில் வாழும் பெரும்பாலானா தென் இந்தியர்கள் சமயத்தைப் பொறுத்த வரையில் விசிலடிச்சான் குஞ்சுகளாகவே வாழ்வதை பார்க்கும் பொழுது இவர்களுக்கு விடியவே விடியாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
உன்னுள் கடவுளைப்பார். உன் செய்கையில் கடவுளைப்பார். சொல்லில் கடவுளைப்பார் எண்ணத்தில் கடவுளைப்பார். பசியென்று வருவோருக்கு அன்னமிட்டு ஆனந்தத்தில் கடவுளைப்பார். இல்லையென்று வருவோருக்கு இயன்றதைக் கொடுத்து கடவுளைப்பார். தாய் தந்தை ஆசான் உருவில் கடவுளைப்பார். உளமே கோயில் ஊனுடம்பே ஆலயம்… சொல்வது எளிது செயலில் கொள்வதோ பெரிய ?????? சிற்றறிவுக்கு எட்டியதை சொல்லிவிட்டேன்.. சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றால் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்…
எல்லாமே பலமாதிரி இருக்கட்டும்… என்ன பண்றது? அப்பா அம்மா இப்படிதானே சொல்லிக்குடுத்தாங்க??? சரி.. சரி.. தெரிஞ்சவங்க சொல்லுங்க சாமி…வீட்டுலே (சாமிபடமா / சிலையா /வெறும் விளக்கு ஒளியா) எதெவெச்சி எப்படி சாமி கும்புடுறது என்று கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் இல்லே???
மங்கை, தமிழனும்தான் இப்படி செய்றான்… கோழி, ஆடு வெட்டி படையல் போட்டுட்டு பிறகு, கொன்னா பாவம் தின்னால் தீரும்னு தானே எல்லாத்தையும் தின்னுட்டு போறான்… கேட்டா வந்தது காளியாம்…கேட்டது கோழியாம்..!!!! ஆனா, சமையல் சூப்பரா இருக்கும்லே!!!!
ஆது ஈகை கொண்டாட்டமே,கடா கடா கறி அடுப்புல கிடக்கு மொடா மொடா கல்லு வூத்து தமிழ் சினிமா தானே.அதர்வண வேதம்.ஊர் காவல் தெய்வத்துக்கு படைத்துவிட்டு விருந்து பரிமாருகின்றனர்.கண்ணப்பனை போல.எந்த நூற்றான்டாயிருந்தால் என்ன,நாம் இட்லி தோசை வரை தானே நிற்கிறோம்.நாம் விஞ்ஞானிகள் அல்லவே,விவசாயிகள் தானே,ஆதலால் தானே பொங்கள் செய்ய சொல்லி கலுத்தை கடிக்கிறோம்.இவனுங்க தலையிடாத வறை விவசாயம் சரியாதான் போய்கிட்டு இருந்துச்சு,எப்போ பொங்களை வேறு துரதிஷ்ட நாலுக்கு மாத்தினானோ,விவசாயம் ஒழிந்தது.நாராயண நாராயண.