சினிமா என் ஓவியத்தின் கால்தூசுக்கு ஈடாகாது: சிவகுமார் கோபம்

sivakumarமார்க்கண்டேயர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி நடிக்கும், ‘மெட்ராஸ்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் மகனை வாழ்த்த வந்த சிவகுமார் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் பேசியதாவது: நான் அடிப்படையில் ஓவியன். கடைசி வரைக்கும் ஓவியனாகவே வாழ்ந்து சாக வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன். 7 வருடங்கள் ஓவியனாக வாழ்ந்தேன். அதன்பிறகு விதி என்னை சினிமா நடிகனாக்கியது. ஓவியன் வாழ்க்கைக்கு விடைகொடுக்க வேண்டியதாகிவிட்டது. 40 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். 175 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். மொத்தம் 192 படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படங்களும் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையும் என் 7 ஆண்டுகால ஓவியன் வாழ்க்கையின் கால் தூசுக்குகூட ஈடாகாது.

சமீபத்தில் ஓவியர் கோபுலுவை சந்தித்தேன். ஒரு நடிகனாக இல்லாமல் ஓவியனாக உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி எனது ஓவியங்களை அவரிடம் காட்டினேன். என் கைகளை எடுத்து கன்னத்தில் ஒற்றிக் கொண்டார். நான் நடிகனாக வாழ எடுத்த முடிவு சரியா என்று அவரிடம் கேட்டேன். “அது சரியான முடிவுதான் நீ வெறும் ஒவியனாக இருந்தால் நான் உன்னை பார்க்கவே சம்மதித்திருக்க மாட்டேன். நடிகனாக இருக்கிறதாலதான் பார்த்தேன். இப்போ சினிமாவில் நடிக்கவில்லை தானே மீண்டும் ஓவியனாகு” என்றார்.

அதன்படி இப்போது ஓவியனாகியிருக்கிறேன். என்னிம் 5 ஆயிரம் பென்சில் ஹெச்கள் உள்ளது. நூற்றுக் கணக்கில் ஆயில் பெயிண்டிங்சும், வாட்டர் பெயிண்டிங்சும் வைத்திருக்கிறேன். அவற்றை வைத்து ஒரு கண்காட்சி நடத்தப்போகிறேன்.

 

சிவகுமாரின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.