கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் விஸ்வரூபம். இப்படத்தை ’உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, இயக்கியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது, இதில் கதாநாயகியாக பூஜாகுமார் நடித்திருந்தார். மேலும் இந்த பாகத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், இதை பூஜா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் ‘ இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் சவலாக இருந்தது, அதிலும் கடலின் ஆழத்தில் படம்பிடித்தது, மிகவும் புதுமையாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கிறது’ என டுவிட் செய்துள்ளார்.

























