சந்தானம் வேண்டுகோள்! மறுத்துவிட்ட ரஜினி!

ரஜினியின் பிறந்தநாளன்று படத்தை ரிலீஸ் செய்ய, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திவரும் லிங்கா படக்குழு தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறது. லிங்கா படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி தற்போது நிகழ்கால காட்சிகளில் சந்தானம் மற்றும் அனுஷ்காவுடன் நடித்துவருகிறார்.

படப்பிடிப்பின் போது ரஜினிக்கு கொடுக்கப்பட்ட வசனங்களில் ரஜினியின் சிறப்பம்சங்களில் ஒன்றான ’பஞ்ச்’ டையலாக்குகள் நிறையவே இருந்திருக்கிறது. அதைக்கண்ட ரஜினி ‘பஞ்ச் டையலாக்குகளை தவிர்த்துவிடலாமே! தற்போது நடிக்கும் எல்லோரும் பஞ்ச் டையலாக் பேசுகிறார்கள். நாமும் ஏன் அதையே செய்யவேண்டும்” என்று சொல்லி பஞ்ச் வசனங்களை நீக்க சொல்லிவிட்டாராம்.

 

ஆனால் இதை ஜீரணிக்கமுடியாமல் ரஜினியின் ரசிகரான சந்தானம் உட்பட பலரும் ரஜினியிடம்  ‘பஞ்ச் டையலாக் பேசுறதே நீங்க அறிமுகப்படுத்துனது தான். ரசிகர்களாகிய நாங்க அதிகமா எதிர்பார்ப்பதும் அதைத்தான். அதை வேண்டாம்னு சொல்றத ரசிகர்கள் எப்படி ஏத்துக்குவாங்க’ என்று ரஜினியிடம் கேட்க… ‘வேண்டாம்ப்பா… எல்லாரும் செய்யுறத நாம ஏன் செய்யனும்’ என்று மறுபடியும் சொல்லிவிட்டதால் சந்தானத்துடன், படக்குழுவினரும் மௌனமாகிவிட்டார்களாம். லிங்கா திரைப்படத்தில் ரஜினி பிக்-பாக்கெட் திருடன் கதாபாத்திரத்தில் நடிப்பது கூடுதல் தகவல்.