ஜூலை 11ல் திரைக்கு வருகிறது “ராமானுஜன்”

தமிழகத்தில் பிறந்து உலகப் புகழ் அடைந்த கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ராமானுஜன் படம் வரும்  ஜூலை 11ல் திரைக்கு வருகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கத்தில், ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பெயரன் அபினவ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்க இந்தப் படம் வெள்ளித்  திரைக்கு வருகிறது. மலையாள நடிகை பாமா, ராமானுஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுஹாசினி மணிரத்தினம், அப்பாஸ், நிழல்கள் ரவி, சரத்பாபு, தலைவாசல் விஜய் ஆகியோரும் இதில் உடன் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் வினாயகம் இசையில் படம் வெளிவருகிறது. பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.