பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் படம் ஐ. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வருகிற தீபாவளி அல்லது பொங்கல் தினத்தன்று 6 மொழிகளில் வெளிவர இருக்கிறது.
படம் வெளிவருதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்துதான் அதன் புரமோஷன் பணிகளை தொடங்குகிறார்கள். அதன் முதல் பணியாக விக்ரமின் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். படத்தில் விக்ரம் 50 கிலோ எடையில் துவங்கி படிப்படியாக 110 கிலோ எடை கொண்டவராக மாறுவார்.
இதற்காக எந்த கிராபிச்சும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக விக்ரம் 50 கிலோ முதல் 110 கிலோ வரை மாற என்னென்ன செய்தார் என்பதை விளக்கப்போகிறது அந்த வீடியோ படம்.
அவர் உடற் பயிற்சிக்கூடத்தில் பயிற்சி, செய்வது, யோகா, தியானம் செய்வதை படம்பிடித்திருக்கிறார்கள். அவர் தினமும் என்னென்ன சாப்பிட்டார், எவ்வளவு சாப்பிட்டார், என்பது முதல்கொண்டு அத்தனை விஷயங்களும் இதில் இருக்கிறது.
விக்ரமின் டயட்டீசியன்கள், உடற்பயிற்சியாளர்களின் பேட்டிகள் ஆகியவையும் இந்த வீடியோவில் இடம் பெறுகிறது. இந்த வீடியோவை பார்த்தாலே படத்தை பார்க்க ஆவலைத் தூண்டுமாம். அந்த அளவிற்கு பக்காவாக இந்த வீடியோ தயாராகி வருகிறதாம். இதனை தனியாக ஒரு விழா நடத்தி வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்கள்.