தமிழ்த் திரையுலகில், பல நல்ல திரைப்படங்களுக்கு திரையிட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகள் கிடைக்காத நிலை இருப்பதற்குத் தீர்வு காணும் ஒரு முயற்சியாக, வெளியாகும் திரைப்படங்களை நேரடியாக மக்களின் வீடுகளுக்கே கொண்டுசெல்லும் வணிக முயற்சி ஒன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில், சினிமா டு ஹோம் என்று அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றை இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் துவக்கியுள்ளார்.
தான் அவரது இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வெளியாக வெகு நாட்களாக காத்திருக்கும் திரைப்படமான ‘ஜே கே எனும் நண்பனின் கதை’ என்கின்ற அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், ரசிகர்களின் இல்லங்களுக்கும் நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்தை துவக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அதனால் இந்த திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் இந்த திரைப்படத்தை, ‘DTH’ எனப்படும் தளத்தில் நேரடி பரப்புகை மூலமாகவும், கைபேசியில் சிறப்பு பயன்பாட்டு மென்பொருள் மூலமாக நேரடியாகவும், ஒளித்தட்டின் வாயிலாகவும் ரசிகர்கள் காண முடியும் என்று சேரன் தெரிவித்தார். -BBC