சினிமா உலகைப்பொறுத்தவரை ஓரிரு படங்கள் வெற்றி பெற்று விட்டால் அப்படங்களின் ஹீரோக்கள் அதன்பிறகு கதை கேட்கிற தொனியே வேறுமாதிரியாக இருக்கும்.
அதாவது. முதலில், டைரக்டர் சொல்லும் கதையை கைகட்டி வாய்மூடி கேட்பவர்கள், பின்னர், ஒருமுறை கதையை கேட்டு விட்டு, ஒவ்வொரு காட்சியாக குற்றம் குறைகளை சொல்லி, அதை இந்த மாதிரி மாற்ற வேண்டும் என்று டைரக்டருக்கே கதை சொல்வார்கள்.
கேட்டால், என் ரசிகர்கள் நான் இப்படி நடித்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்று பதில் கொடுப்பார்கள்.
ஆனால் விமல் அப்படியல்ல, இதுவரை அவர் நடிப்பில், பசங்க, களவாணி,. வாகை சூடவா, மஞ்சப்பை உள்பட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
ஆனபோதும் இப்போதும் கதை விசயத்தில் டைரக்டர்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை. சொல்லும் கதையை அந்த எதிர்கேள்வியும் இன்றி கேட்பார். பிடித்து விட்டால், உடனே ஓ.கே சொல்லி விடுவார்.
அதையடுத்து, தயாரிப்பாளர் யாரு, கேமராமேன் யாரு என்று சில கேள்விகளை மட்டுமே கேட்பார். அதற்கு டைரக்டர்தரப்பில் இருந்து என்ன சொன்னாலும், படத்தை கரைக்ட்டா முடிச்சிடுவாங்கள்ல அதுபோதும் என்று கேட்பார், அதில் தனக்கு திருப்திகரமான பதில் வந்தால் கால்சீட் கொடுத்து விடுவார்.
அதனால் இப்போது விமலுக்கு பிறகு சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருக்கும் சில ஹீரோக்களிடம் கதை சொலலி ஓ.கே வாங்க முடியாத உதவி இயக்குனர்களெல்லாம், விமல்தான் கெடுபிடி செய்யாத நடிகர் என்று அவரை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். அதனால் தற்போதைய உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் விமல்.