சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு? என்ற சர்ச்சை கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் பிரமாண்ட விழா எடுத்து விஜய்க்கு அந்த பட்டத்தை சூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதோடு, அப்படியொரு விழா நடந்தால், அதில் ரசிகர்கள் மட்டுமின்றி, அதை ஆதரித்து பேசுவதற்கு திரையுலக பிரமுகர்களும் வேண்டுமே என்பதால், விஜய்தரப்பில் இருந்து தென்னிந்தியா மட்டுமின்றி, பாலிவுட் ஹீரோக்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த நிலையில், தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தின் டைட்டில் கார்டில் இதுவரை இளைய தளபதி விஜய் என்றே போட்டிருப்பவர், படம் திரைக்கு வரும்போது சூப்பர் ஸ்டார் விஜய் என்று போடவும் முடிவு செய்திருக்கிறாராம்.
ஆனபோதும், அந்த பட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் முறைப்படி அறிவித்து விட்டால், தனக்கு பிரச்னை இல்லை என்று நினைக்கிறாராம். அதனால் இந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் கத்தி யூனிட்டும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி இன்னும் நடித்து கொண்டுதானே இருக்கிறார்….அதற்குள் ஏன் இந்த அவசரம்…?இப்பொழுது தான் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்றார்.மக்களிடம் நல்ல நடிகன் என்று பெயர் வாங்கினால் போதுமே……!பெயர் நிலைக்க நல்ல நடிப்பு கலை போதும்….மக்களுக்கு உங்கள் கலைதுறை மூலமாக நல்ல செய்திகளை பரப்ப முயலுங்கள்…எம்.ஜி.ஆர் போல…!சமுதாய சீரழிவை தடுங்கள்…இதுதான் ஒரு நல்ல நடிகனுக்கு அழகு.அப்பொழுது மக்களே கொடுப்பார்கள் பட்டம் இன்னொரு எம்.ஜி.ஆர் என்று……..அதுவே சிறந்த பட்டம்.
இது நடக்காது என்றே தோன்றுகிறது. விஜய்க்கு சுப்பர் ஸ்டார் தகுதி இல்லை! ரஜினிக்கும் இவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது!
காசு பணம் கொட்டும் பட்டம் பட்டம்
உல் சுலுவார் மணியின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்