வேலையில்லா பட்டதாரி விளம்பரத்துக்காக தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் வெளியீடு! சுகாதாரத்துறை புகார்!!

smokeஏற்கனவே ஒரு படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பிரபல நடிகர்களே இதுபோன்ற செயல்களை செய்வதால் இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டப்படுவார்கள் என்று சில அரசியல் கட்சிகளும் சுட்டிக்காட்டின் அதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை இனிமேல் இந்தமாதிரியான போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று அறிவுறுத்தியது.

அதோடு, முன்னணி ஹீரோக்கள் செய்வதை அப்படியே பின்பற்றும் இளையசமுதாயம் படங்களில் அவர்கள், சரக்கு அடிப்பது, புகை பிடிப்பது போன்ற விசயங்களை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்று பொதுவான கருத்து நிலவியதால், விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் அநத மாதிரி காட்சிகளை தவிர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தில் அவர் சரக்கு, தம் அடிப்பது போன்று நிறைய காட்சிகள் உள்ளன.

ஆனால் தற்போது படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,படத்திற்கு இன்னும் பப்ளிசிட்டி செய்தால் அதிக நாட்கள் ஓடும் என்று கருதி, தனுஷ் தம் அடிப்பது போன்ற போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டி வந்தனர். இதனால், தமிழக புகையிலை கட்டுப்பாட்டு இயக்கம், மாநில சுகாதாரத்துறையிடம் புகார் செய்துள்ளது.

இதையடுத்து புகையிலை எதிர்ப்பு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் விடுத்துள்ள செய்தியில், இப்படியொரு சட்டம் உள்ளது என்பது தெரிந்தும் படத்தின் விளம்பரம் கருதி இதை செய்திருக்கிறார்கள். இது இந்திய புகையிலை தடுப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை தனுஷ் மீறியிருக்கிறார். அதனால் தனுஷ் புகை பிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள அனைத்து போஸ்டர்களையும் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது தமிழக அரசோ இதில் தலையிட்டு உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.