வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு சமுத்திரகனிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ஆதார் என்ற படத்தில் நடித்து வருகிறார். கண்டிப்பான தந்தை, அச்சு அசலான தமிழ் முகத்துடன் மிரட்டலான காட்பாதர் கேரக்டர் என்றால் எல்லோரும் ராஜ்கிரணைத் தேடித்தான் செல்வார்கள்.
ஆனால் ராஜ் கிரண் ஹீரோவுக்கு நிகரான சம்பளம் பெறுகிறவர். இதனால் ராஜ்கிரண் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு சமுத்திரகனியை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம். அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினிமுருகன் என்ற படத்தை இயக்க இருக்கிறார். கிராமத்தில் ரஜினி ரசிகராக இருந்து கொண்டு சிவகார்த்திகேயன் செய்யும் அலும்புகள்தான் படத்தின் கதை.
அதே ஊரில் சினிமாவே பிடிக்காத, சினிமாவால்தான் நாடு கெட்டு குட்டிச்சுவராக போகிறது என்று கருதும் ஊர் பெரிய தலைக்கட்டு ஒருத்தர் இருக்கிறார்.
இருவருக்கும் இடையிலான மோதல்தான் காமெடி சரவெடி. அந்த கேரக்டருக்கு ராஜ்கிரணைத்தான் முடிவு செய்து வைத்திருந்தார்கள். இப்போது அந்த முடிவை மாற்றி சமுத்திரகனியை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமுத்திரகனிக்கும், ராஜ்கிரணுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை. இருவருமே கேரக்டர் பிடித்திருந்தால்தான் நடிப்பார்கள். வேற்றுமை ராஜ்கிரண் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பார். சமுத்திரகனி விட்டுக் கொடுத்து செல்வார்.
சும்மா பிதற்றக் கூடாது. சமுத்திரகனி நல்ல நடிகர்தான். ஆனால் ராஜ்கிரன் இமயம்! அங்கமெலாம் நடிக்கும் நடிகர்திலகத்தின் வாரிசு ராஜ்கிரன். பணத்திற்காக ராஜ்கிரன் ஓரங்கட்டப்படுவதை ஏற்க முடியாது. நல்ல நடிகனுக்குக் கைகொடுப்பது தமிழ்த்திரை உலகத்தின் கடமை.