தொட்டதெல்லாம் துலங்குவது என்று சொல்வார்களே…அது தமிழ்சினிமாவில் தற்போது ஒன்றிரண்டு பேருக்குத்தான் பொருந்தும். அவர்களில் ஒருவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான பி.மதன்.
நீதானே என் பொன்வசந்தம் தவிர, விண்ணைத்தாண்டி வருவாயா தொடங்கி இவர் தயாரித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான். குறிப்பாக, சிவகார்த்திகேயனை வைத்து இவர் தயாரித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய இரண்டு படங்களும் மதனுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தன.
மான்கராத்தே படத்தை அடுத்து தற்போது பிரபுசாலமன் இயக்கும் கயல் படத்தைத் தயாரித்து வருகிறார் மதன். இந்த இடைவெளியில் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக உரிமையை வாங்கிய மதன், அந்தப் படத்துக்கு பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்களை செய்து படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வருகிறார் தனுஷ். எனவே அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மதன் இத்தனை கோடிகளை வாரி இறைத்து விளம்பரம் செய்கிறாரே என்று திரையுலகில் பலரும் கேலி பேசினார்கள்.
ஆனால் அனைவரது கணிப்பையும் மீறி வேலையில்லா பட்டதாரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவில் வசூல் மழை பொழிகிறதாம். தனுஷிடமிருந்து 12 கோடிக்கு வாங்கப்பட்ட வேலையில்லா பட்டதாரி படம் இதுவரை 20 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.


























இந்த படத்தை போயி பார்க்கிறவன் வேலை வட்டி இல்லாதவனாக தான் இருப்பான்
என்ன சார் நீங்க என்ன வேல வெட்டி இல்லாதவனு சொல்லுரிங்க,ஆமா நான் இந்த படத்த பாத்தேன்ல…ஆனா நான் கடமை தவறாத உழைப்பாளி சார்.கமான் என்ஜோஇளா.
ஏன் நல்லாதானே போயிட்டிருக்கு,யூத்யா,தமிழன்பா ரோம்ப கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்த போய்பா.நீங்க யெல்லாம் வாழ்தனும் வேற யாறு வாழ்துவா.சினிமான்னா என்டர்டேய்ன்ட்மெனட் ஒன்லி.வாழ்த்துங்கப்பா வளருவா,வாழ்க நாராயண நாமம்.
நல்ல படம் சார்
உண்மை தான் . இப்படியும் மொக்கை படம் தமிழில் வெற்றி பெறுகிறது . அனால் மலையாளம் தெலுகு மொழியில் எவ்வளவு அருமையாக படம் செய்கின்றனர் . அண்மையில் ஒரு தெலுகு படம் பார்த்தேன் தாத்தா (நாகேஸ்வரராவ் ) மகன்(நாகர்ஜுன ) பேரன் (நக சைதைன்ய ) நடித்த படம் அருமையான கதை . அதை பாராட்ட குடா சிலருக்கு மனம் இல்லை .
தமிழ் படத்தை பாராட்டலாம் ,,தெலுங்கு படத்தை பாராட்டினால் ,”நான் தமிழர் “என்று சொல்லிக்கொள்ளும் தெலுங்கர்கள் தமிழனுக்கே வெட்டு வைப்பானுங்க ,,மொக்க
தனுஷுக்கு பாலபிஷேகம் உண்டு ,,