“நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது”
எப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் அழுகுரல்களில் சத்தம் காதை அடைக்கிறது. இல்லையென்றால் மிக மட்டமாக ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி யாராவது யாரையாவது திட்டிக் கொண்டிருப்பார்கள். காது கொடுத்து கேட்க முடியாது. எவன் குடியை எப்படி கெடுக்கலாம், யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், எப்படி திருடுவது, எப்படி பணம் பறிப்பது என்பதாகத்தான் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், மனைவிக்கு துரோகமிழைக்கும் கணவன்மார்கள், பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகள் என பெரும்பாலான சின்னத்திரையான எதிர்மறையான விசயங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.
இப்போதெல்லாம் மாலை 5.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை யார் வீட்டிற்கும் நான் செல்வதில்லை என்று கூட சில சொல்கிற அளவுக்கு சீரியல்கள் என்று சொல்லப்படுகிற சின்னத்திரை தொடர்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. மேற்காணும் பதிவுகள் கூட வழக்கமாக சின்னத்திரைகளில் இடம்பெறும் காட்சிகள் தான்.
வாசிப்பு, இலக்கியம், பொது அறிவு, அறிவியல் சிந்தனைகள் போன்றவற்றைப் பரப்புவதற்குப் பதில் இப்படியான வாழ்விற்குத் தேவையற்ற விசயங்களைப் சின்னத்திரைகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நாமும் பொழுது போகவில்லை என்பதற்காக சின்னத்திரை தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் நமது எண்ணத்தில் நாமே நஞ்சை ஏற்றிக் கொண்டிருக்கின்றோம்.
குடும்பத்தோடு அமர்ந்து வாசிப்பது, உரையாடுவது, உண்பது, கலந்துரையாடுவது என்பன போன்ற நல்ல விசயங்கள் புறந்தள்ளப்பட்டு குடும்பத்தோடு அமர்ந்து சின்னத்திரை தொடர்களை நாம் இரசித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏற்கனவே, நம் சமூகத்தில் பலர் அடிப்படை சிந்தனையாற்றலின்றி மனரீதியாக பின் தங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களை இருக்கின்ற சூழ்நிலையிலிருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்திற்குள் கொண்டு வர தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஊடகங்கள் மக்களை இவ்வகையான மலிவான கலாச்சாரத்திற்குள் தள்ளி கொண்டிருக்கிறது. நாமும் தெரிந்தோ தெரியாமலோ அதில் மூழ்கி மீண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
நம் நாட்டில் பெரும்பாலான சின்னத்திரை தொடர்கள் மாலை நேரத்தில் தான் ஒளிப்பரப்பாகின்றன. மாலை நேரம் எவ்வளவு முக்கியமானது. வீட்டில் இருப்பவர்கள் அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விளையாட்டுப் பூங்காவிற்குச் செல்லலாம். காலாற நடக்கலாம். காலை பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் ஓய்வெடுத்தப்பின் வீட்டுப்பாடங்கள் செய்ய உதவலாம். காலையில் சமைத்த சோறு கறியையும் இரவும் சாப்பிடுவதைத் தவிர்த்து சத்தான வேறு உணவுகள் தயாரிக்கலாம். மாலை பள்ளி முடிந்து வரும் பிள்ளைகயோடு இணைந்து செய்வதற்கு ஏராளமான கடமைகள் காத்துக் கிடக்கின்றன.
ஆனால், இதையெல்லாம் தவிர்த்து விட்டு 5 மணிக்கு தொடங்குகிற சின்னத்திரை தொடர்கள் இரவு 10 மணி வரை நீள்கிற அவலம் பல குடும்பங்களில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளையும் கணவர்மார்களையும் கவனிப்பது கூட பலருக்குச் சுமையாகப் போய்விட்டது. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் வேலை முடிந்து கணவன்மார்களும் பிள்ளைகளும் கூட இரவு வரை சின்னத்திரை தொடர்களில் மூழ்கி விடுகின்றனர். தொடர்கள் முடிந்த பிறகுதான் சாப்பாடு, தூக்கம், வீட்டுப்பாடம் எல்லாம்.
பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேசுகிற கதைகளில் இப்போது சின்னத்திரையும் இடம்பெற்று விட்டது. பல குடும்பங்களில் உறவுகளுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இந்த சின்னத்திரைகள் காரணமாகின்றன. நாள்தோரும் பல மணி நேரங்கள் அதைத்தானே பார்க்கிறோம்.
நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது.
நாம் எப்போதும் நம் எண்ணங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். அவைதான் சொற்களாக வெளிவருகின்றன. நாம் சொல்லும் சொற்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவைதான் செயல்களாக மாறுகின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டும். அவைதான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கம்தான் பின் ஒழுக்கமாகிறது. ஒழுக்கம்தான் நம் வாழ்வை உருவாக்குகிறது.
மக்களின் சிந்தனையை நாசப்படுத்துவோருக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டும் என தந்தை பெரியார் சொல்லியிருப்பதாக வாசித்திருக்கிறேன். சின்னத்திரைகள் மக்களின் சிந்தனையை நாசப்படுத்தும் வேலையையே செய்கின்றன.
நம் எண்ணம், பேச்சு. செயல், பழக்கம், ஒழுக்கம், வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் சிதைக்கும் பணியைச் சின்னத்திரைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் ஒளிப்பரப்புவதால்தான் நாங்கள் பார்க்கிறோம் என்று நொண்டிச் சாக்கு சொல்வதை விடுத்து ஆக்கபூர்வமான வழியில் நமது நேரத்தைச் செலவிட வேண்டும். நாம் பார்க்காமல் தவிர்க்கும் பட்சத்தில் காலவோட்டத்தில் சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
பூங்குழலி வீரன்
வேற வெல்ல ELAIYAH
இந்த கட்டுரையால் என்ன நடக்க போகிறது
. சின்ன திரையை பார்குரத்தை நம்பவர்கள் விட போகுராகிரார்களா இல்லையே
… இல்லை நம்பவர்கள் ASTRO வை வெட்டி விட போகிறார்களா இப்போ நம்பவர்களுக்கு உலகம் ASTRO தானே
சின்னத்திரை , சினிமா உலகம் , ஆபாச பாடல்கள், நம்ம இனத்தை சீரளித்து நாசமாக்கி கொண்டிருக்கறது . என்ன செய்வது அஸ்ட்ரோ க்கு வருமானம் . இன்னொரு முக்கிய செய்தி பள்ளிக்கூடதில் கூட எதாவது நிகழ்ச்சி என்றால் அங்கு போடும் பாட்டை கேட்டாள் அதிச்சியாகிவிடுவீர்கள். ஒரு தாய் தன் மகளுக்கு விரும்பி கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? டாடி மம்மி வீட்டில் இல்லை …
இதில் ஆகா சிறந்த இசை என சொல்லி கொண்டு ஒளிபரப்பும் பாடல்கை கேளுகன்னா கேளுங்க
சின்ன திரையோ பெரிய திரையோ நமக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர திரையை குற்றம் சொன்னால் அது தப்பு . மது குடிப்பது உடலுக்கு கேடு என்று சொல்லிக்கொண்டே மதுவை குடிப்பவன் நம்மை குடிக்க வைக்க தூண்டலாம் ஆனா நம்ம தான் கவனமா இருக்கணும் . போதை பொருள் உடலுக்கு கேடு என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் சிலர் தானே அதற்க்கு அடிமையாகின்றனர் . சின்ன திரையும் அப்படியே . எப்படி எடுத்து கொள்கிறோம் என்று நம்மிடம் தான் உள்ளது . அவன் போட்டான் நான் பார்த்தேன் என்றால் தப்பு நம்முடையது . அடுத்தவன் உடையது அல்ல
திருவள்ளுவர் வழி வந்த நம்முடைய நிலை சீரழிந்த காரணம் என்ன>? நம்மவர்கள் திருக்குறள் வழி இன்னும் தெரியாமல் இருப்பதே.மொழிப்பற்று இனப்பற்று இல்லா துரோக கும்பல்களாகிவிட்டோம். தமிழ் நாட்டில் யார் தமிழ் பெயர் வைக்கின்றனர்? ஏன் இவனெல்லாம் தமிழனாக பிறக்கவேண்டும்?
நான் எப்பொழுதும் கூறுவது ” சாப்பாட்டு கடையில் , சாப்பாடு விட்கப்படுவதர்க்காக சமைகிறார்கள் ஆனால் வீட்டில் உறவுகள் சுவையுடனும், சதத்துடனும்,சந்தோசத்துடனும் உண்ண வேண்டும் என்று சமையலுக்கு வேண்டிய பொருள்களோடு அன்பையும் சேர்த்து சமைப்பார் அன்னை. அது போல பொழுது போக்கிற்காக சீரியல் தயாரிப்பவர்கள் சமூக மேம்பாட்டை விட தத்தம் பொருளாதாரத்தை பெருக்கத்தனே தயாரிக்கிறார்கள். அன்று ஆண்டுக்கு ஒருமுறை தொலைக்கட்சியில் தமிழ் படம் ஒலி ஒளி பரப்புவதற்கு சொல்லி எத்தனை வேண்டுகோள்கள், முறையீடுகள்,ஆர்ப்பாட்டங்கள். இன்று நாம் தவிர்க்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம். இன்று பணத்துக்காக என்னென்னவோ செய்கிறார்கள், அதனில் சின்னத்திரையும் ஒன்று. கட்டுரையாளர் கூறுவது போல் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இந்த சின்னத்திரையினால் எத்தனைபேர் இறைவழிப்பாட்டையும் விட்டு விட்டார்கள். படைத்து பராமரிப்பவ்ரையே மறந்தவர்கள் வேறு யாரை நினைப்பார்கள். இதன் காரணமாக எத்தனை நபர்கள் உறவுகளின் சுக துக்க நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளமால் இருக்கிறார்கள். மேலும் சீரிலகளில் கூறப்படும் எதிர்மறை கருத்துக்களால் ஏற்படும் விளைவுகளையும் நாம் பார்க்கிறோம். அதன் வழியாக நாமும் சிறிது சிந்தித்து செயல் பட்டால் நமக்கு நன்மை பயக்கும். ஒருமுறை திரைபாடத்தை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்று கருத்தரங்கில் கலந்து பயன் அடைந்தேன். அதனில் கூறப்பட்ட முக்கிய கருத்து ‘திரைப்படம் அந்த கதையின் முடிவை நிர்ணயித்து, ஆரம்பத்திலிருந்து காட்சிகள்,வசனங்கள் (பாடல்கள் உட்பட) அந்த முடிவை நோக்கியே செல்லும். அந்த படத்தின் நீளம் ஏறக்குறைய 2 அல்லது இரண்டரை மணி நேரம் ஓடும். அந்த கால கட்டத்தில் பிறப்பு வளர்ப்பு,காதல், மோதல் போல இன்னும் பல காட்சிகள் நடிபெற்று முடியும். திரைப்படத்தில் நடப்பது போல நமது வாழ்விலும் நடக்க முடியுமா? அங்கே தொட்டதும் காதல், நிஜ வாழ்வில் நடுக்குமா? இரண்டரை மணி நேரத்தில் ஒருவன் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வாழ்வின் சுகபோக உச்ச கட்டத்திற்கு ஏறிவிடுவார். நிஜ வாழ்வில் இது சாத்தியமாகுமா? சிந்திப்போம். நம்மிடமுள்ள பணத்தை பிடுங்க இதுவும் ஒரு வழி. நமது பணத்தை மட்டும் அல்ல, நமது நேரம், சமூக உறவு, பாசம் போல அனைத்து நல்ல பண்புகளையும் கொள்ளையடிக்கிறார்கள்.நமக்கு தெரியாமலே நாம் இவைகளை இழந்துகொண்டிருக்கிறோம். விழித்தெழுவோம் எதை தியாகம் செய்ய வேண்டுமோ அதை தியாகம் செய்வோம்.சீரியல்களா? இறைவனா? சீரில்களா? நமது நன்மைகளா? சிந்திப்போம் சில்லறையை தியாகம் செய்து அபரிமித நன்மைகளை அனுபவிப்போம்.நம்மையும் நம் நாட்டையும் இறைவன் வெகுவாக ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
மக்கள் சரியா இருந்தால் ஆட்சிசெய்பவர் சரியா இருப்பர்.மத்தவங்களையே பழி போட்டு பழகி போன ஜனம்,தன்னை அடையாளம் கான மருக்கிறது.தமிழ் நாட்டு சினிமாவே இப்படி இருந்தா இவனுங்க ல…….,நாரராயண நாராயண
வீட்டில் வேலை வெட்டி இல்லாம சும்மாவே இருக்கின்ற மக்களுக்கு ஒரு தீர்வை சொல்லிவிட்டு அஸ்ட்ரோவை குறை கூறினால் நன்றாக இருக்கும். இவர்களுக்கு பொழுது போகணுமே!.
தமிழ் தமிழர் நாட்டில் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு இந்த தொலைகாட்சி மேடியாவல் வந்தது. மக்களை வேடிக்கை பார்க்க வெச்சி பின்னாலே அடிச் ச அடிதான் இன்னும் அங்கு இந்த தமிழர் இனம் எழ முடியாமல் தவிக்குது.
இங்கும் அது பரவி உள்ளது. யாரை சொல்லி ஏசுவது அஸ்ட்ரோ ஆனந்த கிருஷ்ண பகவான் இந்த ஏழை தமிழர்களை அடிச்சி உலக பணக்காரன்.20 வருசமா ஊர்ள படம் வாங்கி விதவன் ராஜாமணி இன்று அடுத்த பணக்காரன் ..இங்கு படம் வாங்கி தொலைகாட்சிக்கு தருவிக்க யாருக்கும் தகுதி இல்லையாம். 30 லச்சம் மலேசியா தமிழர்கள் அஸ்ட்ரோ சந்தா வில் அங்கம் வகித்து கோடி கோடியா கொடுத்து சமுதாய சீர் அழிவைத்தான் காட்டினான்.சோகத்தை , கலாசார குலைவை காசு கொடுத்து வாங்கி வீனாபோங்கடா என்ற கயவர்கள் கூட்டம் திட்டம் அதி வேகமா முன்னேறுது.
இதை எல்லாம் எழுதினால் பத்தரிக்கை கூட்டம் வெட்டி காட்டி கொடுத்து வசூல் பண்ணி பூடரானுங்க ? கேலிகூத்தா போச்சிங்க தமிழன் ஊடக புழப்பு !
இந்த கேளிக்கை உலக ஊடல் கடந்த 30 வருசமா இந்த சமுதாயத்தின் மொத்த பண்பாட்டு வளப்பம் செருப்பு அடி வாங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரே ஒரு தரமான நிறுவனம் புதிய சமுதாய தொலைக்காட்சி அதை இங்கு ஒலி ஏததுவதில்லை காரணம் அது நம்மை சிந்திக்க வைத்துவிடுமாம்? ஆனந்த கிருஷ்ணன் னுக்கு இதை எல்லாம் யோச்சிக்க புத்தி போதாதது.
10 வருசத்துக்கு முன்னாள் வந்த அண்ணி மீண்டும் வருது ” அவ கேக்குறா ஒரு மனைவி என்ற முறையில் உங்கள திருப்பதி படுத்த முடில அதால உங்களுக்கு இன்னொரு பொண்டாடி ஒழுங்கு பண்றேன் என்று?”
நம்ப அவல கேக்றோம் ” அதுபோல உன் புருசான் உனக்கு ஆமபில தேடி கொடுக்கணும் என்று?” அஸ்ட்ரோ ராஜாமணியால இந்த நாட்டு மலேசியா தமிழர்களுக்கு இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு என்பதை யாரும் உணரவில்லை என்று இல்லை ஒருத்தனுக்கும் கொட்டை இல்லை அதலால் அவன் ஆடுகிறான் நாம் ஆட்டிவிகப்படுகிறோம்.
அங்க சுத்தி இங்க சுத்தி சமுதாயத்தை குறை சொல்வதை விட யார் அந்த ராஜாமணி என்று காலி செய்வோம். இதையும் இந்த ஊடகம் போடாது. காரணம் எதிர்ப்பார்த்து ஏப்பம் விட்டு அடக்கு வைக்கிற ஊடக ஒப்பாரிகள்தாம் தாம் இந்த சமுதாய துரோகிகள். ப்ரோகர்கள்.
பூங்குழலி வீரன் அவர்களுக்கு வாழ்த்துகள். அருமையான கட்டுரை. அதன் தொடர்பாக என்னுடைய கருத்துகளையும் பதிவு செய்கிறேன். தொலைக்காட்சி என்பது ஒரு பொழுது போக்குச் சாதனம். அதில் வரும் நிகழ்ச்சிகள் மக்களின் மன அழுத்தங்களைக் குறைக்க வேண்டும். ஒரு மனநிறைவான மனநிலையையும் உருவாக்க வேண்டும்.
ஆனால், இன்றைய காலத்தில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்த் தொடர்களைப் பாருங்கள். அப்படியா இருக்கிறது. நிலைமையை மோசமாகிக் கொண்டு வருகின்றன.
ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களைப் பிரிக்கின்றன. தாயிடம் இருந்து மகனைப் பிரிக்கின்றன. அப்பா மகள் உறவு முறையைப் பிளவு படுத்துகின்றன. கணவன் மனைவி உறவைக் கொச்சைப் படுத்துகின்றன. சொந்த பந்தங்களைக் கொலை செய்யத் தூண்டுகின்றன. கள்ள உறவிற்கு வழிகாட்டுகின்றன. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்து, ஒட்டு மொத்த இளம் சமுதாயத்தையே குட்டிச் சுவராக்கி வருகின்றன. எல்லாமே வேறு வேறு மாதிரியானப் பயணங்கள்.
பொதுவாகவே, நம் தமிழ்ப் பெண்கள் ஈவு இரக்கம் உள்ள நல்ல ஜீவநதிகள். அதை யாராலும் மறுக்க முடியாது. எங்கோ ஒன்று இரண்டு குறை பட்டுப் போய் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த மெகா தொடர்கள், நம் பெண்களின் அந்த நல்ல இரக்கச் சிந்தனைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் செல்லரிக்கச் செய்கின்றன.
நல்ல பல வெள்ளந்தி மனங்களைக் கெடுத்தும் வருகின்றன. மல்லிகைப் பூக்களாய் இருந்தவர்கள் கள்ளிப் பூக்களாய் மாறி வருகின்றனர். இது ஒரு வகையான மன நோய் என்றுதான் எனக்குப் படுகின்றது. முன்பு மலையகத்தில் இருந்த காவேரிகள் இப்போது வற்றிக் கொண்டே போகின்றன.
ஒரு தொடர் முடிந்த பிறகு, யாராவது சிரித்தபடி சந்தோஷமாக வீட்டு வேலையைப் பார்க்கப் போகிறார்களா? சொல்லுங்கள். இல்லவே இல்லை. மனசிலே கவலை. சட்டிப் பானைகளை உருட்டும் போது, அதே எண்ணங்கள். தொடரும் என்று போட்டு இருக்கிறார்கள். நாளைக்கு என்ன நடக்குமோ என்கிற ஒருவித எதிர்பார்ப்பு. அதைப் பற்றியே சுற்றிச் சுற்றி வரும் கற்பனைகள். இவள் ஏன் அப்படி செய்தாள். அவள் நல்லவள்தானே. அவளுக்கு என்ன வந்தது. பைத்தியம் பிடித்துப் போச்சா. இப்படி ஆயிரம் கிலோ மன உலைச்சல்கள்.
இரண்டு மனைவி விஷயம். தெரியும் தானே. இப்போது எல்லாத் தொடர்களிலும் இரண்டு மனைவி பிரச்சினை, சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. அந்தத் தொடர்களில் எந்த ஒரு புருசன் பெண்சாதியாவது சந்தோஷமாய் நன்றாக இருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா? எல்லாவற்றிலும் கள்ளத்தனம். இடக்கு முடக்காய்க் கள்ளக்காதல்கள். நெஞ்சத்தைப் பிழியும் வக்கிர மோசடிகள். மர்மமான கொலைகள். திடீர் திடீர் மோடி மஸ்தான்கள். ஜேம்ஸ் பாண்ட் படங்கள் கெட்டது போங்கள்.
பெண் தியாகம் செய்கிறாள் என்று காட்டுவது இயற்கையான எதார்த்தம். சரி. ஆனால், அப்படிச் சொல்லிக் கொண்டு, சீரியல்களில் அவர்கள் காட்டும் தியாகத்தின் உச்சக் கட்டம் இருக்கிறதே, ஒன்றும் சொல்வதகு இல்லை. அதைப் பார்த்தால் நரவேட்டை நாயகன் இடி அமினே வாய்விட்டு அழுவார். ஆக, அந்த மாதிரியான சீரியல்கள், ஒரு சாமான்யப் பெண்ணின் உண்மையான தியாக உணர்வுகளைச் சிதைத்து விடுகிறது. அப்படித் தான் சொல்லவும் முடிகின்றது.
இப்போது ஒளியேறிக் கொண்டு இருக்கும் தொடர்களில் வம்சம் தொடரை மட்டும் நான் பார்க்கிறேன். அதில் வரும் பூமிகா எனும் கதாமாந்தரை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். மேடம் ரம்யா, கொஞ்சம் இறங்கி வாங்க. பிளீஸ்!
எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தையும் நாம் குறை சொல்லவில்லை. அது நம் நோக்கம் அல்ல. ஆனால், தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக தாம் சார்ந்த சமூகத்தையே விற்றுப் படம் தயாரிக்கிறார்களே, அவர்களைத்தான் குறையாகப் பார்க்கிறோம். அந்தப் படங்களை இங்கே வரவழைத்து ஒளிபரப்பு செய்வதற்கு சிபாரிசு செய்கிறார்களே, அவர்களின் மனசாட்சிகளையும் குறையாகப் பார்க்கிறோம். அதனால் எத்தனைக் குடும்பப் பெண்களின் மனநிலைகள் பாதிக்கப் படுகின்றன என்பதையும் பெரிதாகப் பார்க்கிறோம்.
மெகா சீரியல்களை இங்கே இறக்குமதி செய்யும் போது, நல்ல ஒரு சமூக சிந்தனை வேண்டும். நல்ல ஒரு சமூகக் கடப்பாடு இருக்க வேண்டும். அவைதான் நம்முடைய எதிர்பார்ப்புகள்.
ஒரு தொடரில் நடந்த காட்சிகள். ஒரு கதாபாத்திரம் இறந்து விடுகிறார். மூன்று நான்கு நாட்களுக்கு இறந்தவரின் சடங்குகளைக் காட்டிக் காட்டி உயிரை வாங்கி விட்டார்கள். அந்த வாரம் ஆறு நாட்களுக்கும் அழுகை. அழுகை. அழுகை.
எப்படித்தான் அந்த மாதிரி அழுகை வருகிறதோ தெரியவில்லை. கிளிசரின் மிஞ்சிய அழுகைகள். சில நாட்களுக்கு பிறகு, மறுபடியும் ஒரு தொடர். கணவனை இழந்த பெண் ஒருத்தி. அவளுக்குச் செய்யும் சடங்குகள். அட ராமா… பக்கத்து வீட்டில் ஏதோ ஒரு துயரச் சம்பவம் நடந்தது போல இருந்தது.
எங்களுடைய நெருங்கிய உறவுக்காரப் பெண், ரொம்பவுமே வேதனைப் பட்டுப் போனாள். அவளுடைய கணவர் இறந்ததும் அவளுக்குத் துணையாக அமைந்தவை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான். மன அமைதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதற்குப் பதிலாக சீரியல்களே வேதனைத் தூறல்களாகச் கண்ணீர் சிந்தின. நேஷனல் ஜியாகிராபிக், டிஸ்கவரி சேனல் போன்றவை எடுபடவில்லை. இரண்டு மூன்று தடவைகள் டிகோடர் கார்டை எடுத்து மறைத்து வைத்தேன். நல்லது நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்பு. ஆனால், நன்றாகப் போய்க் கொண்டு இருந்த குடும்ப உறவுகளில் விரிசல்கள் தான் மிஞ்சிப் போயின. ஆக, நிலைமை அந்த மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது.
முன்பு எல்லாம் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நகமும் சதையும் என்று சொல்வார்கள். இப்பொழுது அப்படி இல்லை. யாரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். மெகா தொடர்களும், பெண்களும் என்றுதான் சொல்வார்கள்.
அந்த அளவிற்கு இன்றைய தமிழ்ப் பெண்களில் பலர், தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சில பெண்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால், சீரியல் தொடர்களைப் பார்க்காமல் வாழ முடியாது என்கிற ஒரு நிலைமை உருவாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்பது அறிவு வளர்க்கும் சாதனமாக இருந்தது. குடும்பமாக உட்கார்ந்து பார்த்தார்கள். பார்க்கவும் முடிந்தது. இப்போது அப்படியா முடிகிறது. பிள்ளைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. சமயங்களில் பேரப் பிள்ளைகள் வந்து மடியில் உட்கார்ந்து விடுகிறார்கள். தர்மசங்கடமாக இருக்கும்.
தொலைக்காட்சி என்பது தொல்லைக் காட்சியாக மாறி விடக் கூடாது என்பதே கடந்த தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள்.
இப்போது வரும் சீரியல் கதாபாத்திரங்கள், நம் பெண்களின் சொந்த வாழ்க்கையிலேயே நடமாடும் ஓர் உறவுப் பாத்திரமாக மாறிப் போய் விடுகின்றன. பெண்களில் பலர் தங்களுடைய குடும்பங்களைப் பற்றி கவலைப் படுகிறார்களோ இல்லையோ, நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றித் தான் ரொம்பவும் கவலைப் படுகிறார்கள். ரொம்பவும் அலட்டிக் கொள்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. அப்படி ஒரு தாக்கம் சன்னம் சன்னமாய் வேர்விட்டு விட்டது. It is not TOO late!
நாடகத்தில் நடிக்கும் பெண்கள் நன்றாகவே அழுகிறார்கள். எப்படி அழுவது என்பதற்கு ஆறு ஏழு மாதம் டிரேயினிங் எடுத்து இருக்கலாம். சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் அழுவதைப் பார்த்து வீட்டில் இருக்கும் பெண்களும் சேர்ந்து கொண்டு அழுகின்றார்களே. அதைப் பார்த்தால் தானே எனக்கும் அழுகை வருகிறது.
அது ஒரு எதார்த்தமான பாச நெருடல்களாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், அந்த நடிகைகள் பணத்தை வாங்கிக் கொண்டு தானே அழுகின்றார்கள். ஆனால், இங்கே வீட்டிலே காசைக் கொடுத்து விட்டு அல்லவா அழுகிறார்கள். அது தானே வேதனையாக இருக்கிறது.
கிளிசரின் போட்டால் கண்களில் நீர் தாரையாக் கொட்டும் என்பது நம் பெண்களில் பலருக்குத் இன்னும் தெரியாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் என் மனைவி எவ்வளவோ தேவலாம். வீட்டில் எல்லா சேனல்கள் இருந்தாலும் இரண்டு மூன்று நாடகங்களோடு முடித்துக் கொள்வாள். அதுவரையில் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இப்போது வரும் நாடகங்களில் ஒரு புதிய கலாசாரம், பூஞ்சக் காளான் மாதிரி கிளம்பி இருக்கிறது. அதாவது திருமணம் செய்த பெண், தன்னுடைய கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனைக் காதலிப்பது. அப்புறம் அவனோடு ஊர் சுற்றுவது, அப்புறம் தன்னுடைய கணவனுக்கு வேறு ஒரு பெண்ணை ’ரிகமண்ட்’ செய்வது. நல்ல ஒரு கூத்து போங்கள். தெரியாத பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் கலாசாரம்.
இன்னும் ஒன்று. ஒரு குடும்பத்தில் ஒரு பெண். அவளை மாமியார் கொடுமை செய்வது. அதற்கு மருமகள் வீறுகொண்டு எழுவது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாமியாரை நல்லவராகக் காட்டும் நாடகங்கள் எதுவுமே இல்லை. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் ஏதாவது ஒரு நாடகத்தைப் பாருங்கள். ஒரு பானைக்கு ஒரு சோறு போதும்.
இப்போது எல்லாம், மெகா சீரியல்களைத் தயாரிப்பவர்கள், முன்பு பிரபலமாக இருந்த சினிமா நடிகைகளை எப்படியாவது இழுத்துக் கொண்டு வந்தார்கள். முதலில் நடிகை ரேவதி வந்தார். அதன்பிறகு சுஹாசினி வந்தார். அடுத்து சுகன்யா வந்தார். அப்புறம் பானுப்பிரியா, கவுதமி, குஷ்பு, தேவயாணி, மீனா, கௌசல்யா, ரம்யா கிருஷ்ணன் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்னும் நீளும்.
ரொம்ப வேண்டாம். இன்னும் ஓர் ஐந்து ஆண்டுகள் கழித்துப் பாருங்கள். நயன்தாரா, அசின், சிரேயா பட்டாள்ம் வந்தாலும் வரலாம். அப்புறம் நம்முடைய பேரன் பேத்திகளும், சீரியல்களில் நடிக்கப் போகிறேன் என்று போர்க் கொடிகளைத் தூக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
சீரியல் தொடர்களில் காண்பிக்கப்படும் குடும்பச் சண்டைகள், சீதனக் கொடுமைகள், தவறான உறவுகள், தகாத வார்த்தைகள். இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாகத் தமிழ் பேசும் உலகச் சமூகத்திற்கே பொருத்தம் இல்லாதவை.
அதையும் தாண்டிய நிலையில், மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு தேவையே இல்லாதவை. என்ன செய்யலாம். அதிபர் ஒபாமாவிற்கு கடிதம் எழுதி அமெரிக்கத் துணைக் கோளங்களைப் பயன்படுத்தி, சீரியல் நாடகங்களுக்கு ஒளித் தடை செய்யலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
– மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மொத்தத்தில் ஆய்வு இல்லாத அறிவுகெட்ட ஊட உரிம அதிகாரிகள் சமுதாயத்து பணத்துல நம்மை சிரிபபா சிரிக்க வெச்சி வேடிக்கை காட்ட அதை வாங்கி தரும் director of program ராஜாமணிய என்ன செய்யலாம்?
ஐயா முத்துகிருஷ்ணன் அவர்களே தங்களின் நீண்ட கருத்தை படிக்க இனிமையாய் இருந்தது. வேதனையும் தந்தது. எமக்கு அந்த பிரச்சனை ஏதும் இல்லை. அஸ்ட்ரோ தொடர்பை துண்டித்து 8 வருடம் ஆகி விட்டது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டு ஒழியாது என்பார்கள். சின்னத்திரை வரும்பொழுது பயனீட்டாளர்கள் சேனலை உடனடியாக மாற்றினால் ஒளிபரப்பும் நிருவனத்துத் தெரிய வரும் எத்துனை பயனீட்டாளர்கள் அந்த நிகழ்ச்சியை வெறுத்து ஒதுக்குகின்றார்கள் என்று. உடனே அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள். இந்த சின்னத்திரை நிகழ்ச்சியை வெறுத்து ஒதுக்குபவர்கள் அதிகமாகிக் கொண்டே போக நிகழ்ச்சியும் ஒரு நிறைவைக் காணும். முயன்றுப் பாருங்கள்.
ஐயோ சீரியல் என்றாலே தலை வலிக்கிறது . ஒரே போர் .
அஸ்ட்ரோவில் மக்கள் தொலைக்காட்சி என்று ஓர் ஒளியலை இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதில் இம்மாதிரியான ‘கொடுமைகள்’ கொண்ட நாடகத் தொடர்கள் மற்றும் சினிமா திரைப்படங்கள் இல்லை. எனவே, இந்த ஒளியலையை பலரும் பார்ப்பது இல்லை. இங்கே புலம்பித் தீர்த்த அத்தனை பேருக்கும் ஒரு சவால்…உங்க வீட்டு அஸ்ட்ரோவை ‘நாசமாகப்’ போன நாடகத் தொடர் ஒளியேறும் அலைவரிசைப் பக்கம் உங்க வீட்டுக் ‘குலவிளக்குகள்’ திருப்பாமல் பார்த்துக் கொள்ள உங்களால் முடியுமா?
நாட்டில் உருப்படியான நிகழ்ச்சிகள் ஒலியேறும் ‘தமிழ்’ வானொலி எதுவும் இல்லை. இருக்கும் இரண்டு வானொலிகளும் வெறும் இரைச்சலாக’ இருக்கின்றன. தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பிருக்கும் ஆர்.டி.எம்.2-இல் கூட அதிக ஒலிபரப்பு நேரம் கேட்டு (அல்லது போராடிப் பெற்று) அதிலாவது ‘நல்ல, பயனுள்ள’ நிகழ்ச்சிகள் ஒளியேற ‘நம்மவர்கள்’ முயற்சி செய்யலாமே? முடியுமா? தினமும் ஆர்.டி.எம் ஒளியலையில் ஒளியேறும் செய்திகளைக் கூட ‘உருப்படியாக’ அரைமணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாத வண்ணம் ஒளிபரப்புகிறார்கள். செய்தி வாசிக்க வந்தால் ‘நவரசங்களையும்’ கொட்டி இன்னொரு ‘சீரியல்’ போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். அல்லது செய்திகளை கூர்ந்து கவனிக்கவிடாமல் செய்தி வாசிப்பவரின் உடல் அசைவுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவற்றையெல்லாம் சம்மந்தப்பட்டவர்களிடம் காலம் காலமாக புகார் செய்து பலனில்லை…நிலைமை இப்படி இருக்க ‘நம் குடும்ப மாதர்குல விளக்குகளுக்கு இருக்கும் ஒரே ‘பொழுது போக்கும்’ வகையில் இருக்கும் இந்த சீரியலகளைப் பார்க்கவிடாமல் செய்வது எப்படி? .
இந்த அஸ்ட்ரோ வங்க்காதிங்க ……………….. நல்ல உணர்வுள்ளவர்கள் மலேசியத் தமிழர்கள் என்ற அஸ்ட்ரோ வை முதலில் உங்களது விட்டிலிருந்து விரட்டுங்கள்.நான் ஊருக்கு உபதேசம் செய்யவில்லை.எனது விட்டில் அஸ்ட்ரோ வை நான் வாங்கவில்லை.இதே போல் முதலில் ஒரு 1000 பேர் அஸ்ட்ரோ வை கான்ஸல் செய்யுங்கள் நமக்கு விமோச்சனம் கிடைக்கும்.
முத்து கிருஷ்ணனின் முத்தான கருத்துகளுக்கு பாராட்டுக்கள். “முத்து” நீங்கள் நம்பர் சத்து.
அய்யா மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களே…நல்ல ரசனை…நல்ல திறனாய்வு., சீரியல்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவீர்கள் போலிருக்கே….அதனால் தான் உங்களின் எழுத்துப் படிவங்களை இப்போதெல்லாம் படிக்க முடிவதில்லையா? ம்ம்ம்ஹ்ஹ்ஹ்
திராவிட கலாசாரம் சீரியலில் கான்பிகிறார்கள்.. திராவிட ராதிகாபோன்றோர் தங்கள் கலாசார மற்றும் சொந்த அனுபவத்தையும் மேன்டைகரா முருங்கையுஷ்போல் நன்றாக கலக்கி கொடுகிறார்கள் பருகி நாசமாபோங்க மக்கா
வம்சம் பார்க்கும் நண்பர் முத்துக் கிருஷ்ணன் அவர்களே ,
மேடம் ரம்யா கிருஷ்ணன் ஏற்கெனவே ஒரு குப்பை கூடையை
சிதற விட்டவர் தான் .
வம்சமும் அந்த வரிசை தான் !
இவ்வளவு நீண்ட குறிப்பை விட இதன் தீர்வு என்ன என்பதற்கு
ஏதாவது சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .
நீங்களும் அந்த குப்பைகளை எல்லாம் மீண்டும் அவிழ்த்து
கொட்டியது ……; ஊர் அறிந்ததர்க்கு படித்த எங்கள் நேரம்
தான் பாழ்!
தமிழர்களுக்கு தேவை சில செய்திகள் ,நாட்டு நடப்புக்கள் ,
பிற உலக நடப்புக்கள் ,சுற்றுலா ,அறிவியல் செய்திகள் ,
விவசாயம் …,ஏதோ ஒன்றிரண்டு தொடர் நாடகங்கள் ,
உள்ளூர் …வெளியூர் கலை கலாச்சார நிகழ்வுகள் ,பாடல்
ஆடல் திறன் காணும் நிகழ்வுகள் ….என இப்படி பல வற்றை
அடுக்கிக் கொண்டே போகலாம் .
யாருக்கு வேண்டும் இத்தனை தனியார் அலைவரிசைகள் ?
அப்படி வேண்டுவோருக்கு என்ன ஆயிரம் கண்களும்
ஈராயிரம் செவிகளுமா வைத்திருக்கிறார்கள் ?
அவை என்ன கணினி போன்று ஒரே சமயத்தில் அவ்வளவையும்
கிரகித்துக் கொள்ளுமா ?
இருப்பதோ ஒரு வயிறு …!? படைப்பதோ கடோர்கஜனுக்கான
உணவு !?
இதை ஆய்வு பண்ண வேண்டிய அமைச்சு …அவர்களை பணம்
பண்ணவிட்டு…பொதுமக்களை திணறடிப்பது ஏன் ?
வேண்டியவருக்கு வேண்டியதை வியாபாரம் செய்வதை
விடுத்து ;இன்னும் புதிது புதிதாக அலை வரிசைகளை அடுக்கி
பணம் பண்ணுவது ஏன் ?
அதுவும் பேக்கேஜ் என்னும் பெயரால் இதை வாங்கினால்
தான் இது என்று அடுக்கிக்கொண்டே போவது ஏன் ?
உதாரணம் : சன் டி வீ அலைவரிசையோடு சில அலை
வரிசைகள் சேர்க்கப்படுகின்றன .இருந்தும் மேற்படி அலை
வரிசையின் சில நல்ல நிகழ்வுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்
பட்ட விண்மீன் என்னும் பகுதிக்கு நகர்த்தப் பட்டு தனிக்கட்டணம்
பேசப்படுகிறது .
அதே போல் இந்த எச் டி விவகாரம் …,ஏன், இந்த தரம் உயர்த்தலை
தனிமைப் படுத்தி அதிக கட்டணம் விதிக்க வேண்டும் ?
நான் ஏற்கெனவே இப்பகுதியில் இவை பற்றி ஒரு கட்டுரை
பகிர்ந்து கொண்டுள்ளேன் .
ஆனால், அப்போதும் பலர் என்னென்னவோ எழுதினார்களே
அன்றி நோய்க்கு மருந்து பற்றி பேசவில்லை !
ராஜாமணியை நோவானேன் ? அவர்கள் பணம் பண்ண நாட்டுக்கு
வந்து வசிக்கும் தகுதியும் பெற்றுவிட்டவர் .
அவரை அமர்தியவர்களுக்கு தானே விசுவாசமாக இருப்பார் .
பணம் பண்ண தெரியாதவரையா வியாபார உலகம் வைத்திருக்கும் .
மக்களுக்கு தேவையானதை மக்கள் பிரதிநிதிகள் தானே வகை
படுத்த வேண்டும் !
எல்லா அலை வரிசைகளும் சீரியல் என்னும் தொடர்களை அதிக
மாக ஒளி ஏற்றுவதால் …ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை என்று
வைத்தால் சமுதாயம் ஏன் எல்லா அலை வரிசைகளையும்
தேர்வு செய்யப்போகிறது .?
நான் மீண்டும் எழுதுகிறேன் …,ஐரோப்பிய உலகில் இரு இந்திய
அலைவரிசைகள் தான் .அங்குள்ள தமிழர்கள் சில அலை வரிசைகளை நடத்துகிறார்கள் .முழுக்க நல்ல நிகழ்சிகள் ,
அதுவும் மலிவான கட்டணம் .நம்மைப்போல் கொட்டி அழுவது
கிடையாது !
இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் இனி சாதாரண மக்கள்
நல்ல நிகழ்வுகளை பார்க்க இயலாது . பெரும் பணம் வேண்டும் !
இதற்கு யாராவது மணி கட்ட வேண்டும் !
அதற்க்கு வழி/ உபாயம் சொல்லுங்கள் .
நல்லதை எடுத்துக்கொள்ளவும் கெட்டதை ஒதுக்கவும் தெரியாத முட்டாள் இனமா தமிழினம்? உணரவற்ற இனமா தமிழினம்? ஆம் என்று யாராவது சொல்வீர்களானால் அதற்கான காரணத்தை அலசி ஆராயவேண்டும். தமிழினத்தை எல்லா சீரழிவுகளிலிருந்தும் மீட்க என்ன வழி? யாராவது உண்மையைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவே கூடாது எனும் ஈகோவை எப்படி அகற்றுவது ? இதற்கும் திராவிடன்தான் காரணம் என்று சொல்லி எஸ்கேப் பண்ணப் பார்க்காதீர்கள்.
மலாக்கா முத்துகிருஷ்ணன் அவர்களின் அலசித் தொகுக்கப்பட்ட கருத்து படிப்பதற்கு மிக சுவராசியமாக இருந்தது. நாம் சிந்திக்க சில விடயங்களைத் தொட்டிருந்தார். மதுவில் தொடங்கி, சினீமாவில் சிக்குண்டு இன்று அவைகளுடன், புதிதாக வைத்துள்ள சீரழிக்கும் சீரியல் தொல்லையிலும் இருந்து மீள முடியாத ஆழத்தில் மூழ்கியுள்ளோம். இவை 3ம் நமது இன முன்னேற்றத்தை அரிக்கும் புல்லுருவிகளாக உள்ளன. ஒப்பீட்டுப் பார்வையில், இந்த 3ல் நம் சமூகம் ஈர்க்கப்படும், சீரழிக்கப்படும் அளவிற்கு மற்ற சமூகங்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது இல்லை. திரையில் பார்ப்பதை நம்போல் அவர்கள் உள்வாங்குவது இல்லை. (உம்): மற்ற இனப் பெண்கள் சினீமா, சீரியல் பார்த்து, வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களால்/துன்பங்களால் தற்கொலை செய்வது இல்லை. மற்ற இன ஆண்கள் அவர்கள் சீரியல், சினீமாவைப் பார்த்து அதில் வரும் கொடூரங்களை சகிக்கவண்ணா வன்முறையாக அடுத்தவர்கள் மேல் நடத்துவதில்லை. படிக்கும் நம் மாணவர்கள் பாடத்தை பல முறை படித்தும் அதனை உள்வாங்க திணறுகின்றனர்; ஆனால் ஒருமுறை பார்க்கும் சினீமா, சீரியலை சிறிதும் சிரமமின்றி உள்வாங்கி டயலாக்கை அப்படியே ஒப்புவிக்கின்றனர்.!! சிலர் மேலே கூறி உள்ளது உண்மை. சமூக நோயின் அறிகுறிகள் குறித்த் பேசுகிறோம். அவற்றிற்கு ஏற்ற நல்ல மருத்துவம் என்ன? மருத்துவம் சிக்கலானது. நம் சமூகம் மருத்துவம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை. நல்ல தலைமை மருத்துவர்களும் தென்படவில்லை. நல்நோக்க சமூக சிந்தனைக்கொண்ட கட்டுரை. மருந்து கொடுக்க முடியாவிட்டலும் சமூக நலன் எண்ணி நோயின் கூறுகள் அறிந்து கூறி உள்ளார் ஆசிரியர். பாராட்டுகள்.
நல்லா இருந்த என் மனைவியும்,இப்போ 5 மணிக்கு வேலை முடிந்து
வந்து 8.30 வரை சீரியல் பார்பதாக என் மகள் சொன்னால்,அதுவும்
ஆஸ்ட்ரோவில் வேலை செய்யும் என் மகள். நான் லேட்டா
வருவதால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தோழர்களே… ஒழக்கத்தின் மீது, உண்மையின் மீது, அறத்தின் மீது நம்மவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் சோறு போடாது என்று பேசும் இனம் எப்படி உண்மை வெல்லும் என்று நம்பும்? நேர்மையாக இருக்க முற்பட்டால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோம் எனும் எண்ணமுள்ள எந்த இனமும் நேர்மையை, உண்மையை, சத்தியத்தை, அறத்தை வாழ்க்கையின் ஆதாரமாக் கொண்டு வாழ முற்படாது. அப்படி வாழவும் ஆர்வம் கொள்ளாது. அயோக்கியர்களை ஆதரித்து அண்டிப் பிழைக்க நினைக்கும் ஒரு மனோபாம் உள்ள இனம் எப்படி பரிசுத்தமாய் இருக்க ஆசைப்படும்? வாழ்க்கையில் பாவத்திற்கு அஞ்சாத மனோபாவமிக்கப் போக்கு ஓர் இனத்தைக் பாதாளத்தில் தள்ளிவிடும். பொய்பேசுவதில் சுகம் காணும் ஒர் இனம் எப்படி மனசாட்சிக்கு பயந்து நடக்கும்? இறையச்சம் இல்லா இனம் எப்படி உருப்படும்? ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும் நீதி மொழியை மதிக்கத் தெரியாத ஓர் இனம் எப்படி ஊர்மெச்ச வாழ்ந்துவிட முடியும்? நல்லதைத் தேடித் தேடி வாசித்து கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கையில் அந்தக் கருத்துக்களை சத்திய சோதனையாக எடுத்து வாழ்ந்து பார்க்க ஆர்வமில்லாத ஓர் இனம் எப்படி முன்னேறும்? ஓர் இனம் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் எவ்வளவோ காரணிகள் இருக்கின்றன. அவற்றில் மேற்குறிப்பிட்டவையும் அடங்கும். அது நம்மினத்திற்கும் பொருந்தும்!
தமிழ்நாட்டில் மக்களின் மனோ நிலை அடையாலம்,முகவரி.பெண்கலுக்கு நன்மை கிடைக்கும்,ஆண்களுக்கும் நல்ல செய்தி இருக்கு.பள்ளி மாணவர் பொறுப்பு,மனைவியின் கடமை,கணவனின் கடமை,சுற்றம் பேணல்,வுரவின் நன்மை,வொழுக்கம்,ஒற்றாடல்,முழு திருக்குறளே அடங்கி வுள்ளது.அப்பாவி பெண்ணுக்கு வுஷாராய் இருக்க போதிக்கும் நூல்,போட்டு வாங்குவது,இப்போ எல்லா மதத்திலும் வந்துவிட்டது சீரியல்,பார்ப்பவர் கண்ணை பொருத்து அமையும்,கருத்து.ஆண் அராஜகம் அட்டூழியம் ஆதிக்கம் ஒழியும்,மறையும்.திராவிடம் கூரும் வாழ்வு மலரும்,சம வுரிமை.பேஸ் பேஸ் சூப்பர்,வாழ்க நாராயண நாமம் .
சார் அங்கே நடப்பவையை தானே வெளிச்சதில் போட்டு காட்றானுங்க,இந்த கார்டியன் வுரவு பற்றி கேள்வி ஏதும் பட்டது இல்லையோ,ஒரு படிச்சா தம்பதிக்கு ஆளுக்கு ஒரு கார்டியன் கட்டாயம் வேணுமாம்,மலாக்கா முத்து எழுதிய [பஞ்சு காளான் ]ஆரம்பிக்கும் பகுதி இன்று நடக்கும் வுண்மை சம்பவம்,.விவாகரத்து நடவாது தடுக்க இந்த கார்டியன் வுரவு அவசியமாம் மலாய்காரன் கூட போலோ பண்றான்.இது நடக்கணுமா பெருசுங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்புறாங்க,மனைவியே இந்த வசதி செஞ்சு தர்ரா அம்மா அப்பாவா யார்க்கு வேணும்,அடுத்த கணமே பெற்றொர் முதியோர் விடுதிக்கு போங்குஸ்.பெண்ணுக்கு கணவனின் நண்பன்,ஆணுக்கு மனைவியின் தோழி.குடும்பத்தில் பிரச்சனையே வருவது இல்லையாம் லைப் லாங்.இது பரவலா நடக்குது அதை தான் படமா போட்டு காட்றானுங்க,இல்லேன்னா பெண் சங்கம் பெரிய புரட்சியே நடத்தியிருக்கும்,தெரியும் தானே.இதுக்குதான் திராவிடம் வேணாம் கடவுள் மீது நம்பிக்கை வைக்க சொல்வது.குற்ற வுணர்வு நம்மை விடாது தவறான வழிக்கு செல்ல சிந்திக்க,வரலட்மி கௌரி விரதம்,போன்றவை அன்பை பெருக்கும்,அக்கறையை கூட்டும்.உடம்பில் தங்கம் அதிகம் அணிந்தால் காமம் வராது.ஆதலால் தாலி போட்டணர்,ஜாதி பிரிக்க அல்ல.வெள்ளி காமத்தை கூட்டும் ஆதலால் காலில் வெள்ளியில் மிஞ்சு போட்டனர்.இவை விஞ்ஞானம்.வெங்கட ராமசாமி வேரு கதை விட்டிருப்பானே,நாராயண நாராயண.
மனசாட்சி இல்லாமல் பிறரைத் தூற்றுவன்,எப்போதும் வன்மத்தோடு இருப்பவன்,ஒழுக்கத்தை உயிரென ஓம்பாதவன் பரிசுத்தமான கடவுளைப் பற்றி பேசக்கூடாது. அந்தத் தகுதி அவனுக்கு இல்லை. பெரியவர்களை, சமூதாய விடுதலை வீரர்களை , ஒரு இனத்தைச் சுயமரியாதை உள்ள இனமாக மாற்ற தன் வாழ்நாளை செலவிட்ட தியாகிகளை மதிக்கத் தெரியாதவன் கருத்திடுகிறேன் எனும் தோரணையில் பண்டாரத்தனமாகப் மூடத்தனத்தை இங்கே விதைக்கக்கூடாது! சீரியலிலும் மூடத்தனம், சினிமாவிலும் மூடத்தனம். இந்த மூடக்கொள்கைகள் வாழைப்பழத்தில் ஊசியைச் செருகுவதைப் போல பகுத்தறிவற்றவர்களால் கலாச்சாரம் ,சடங்கு எனும் பெயரால் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன.
கம்போ தோழரே ,மலாக்கா முத்துகிருஷ்ணன் சீரியல் மேல்
உள்ள வெறுப்பை காட்டினாரா அல்லது பிழைப்புகாக தினக்குரலில் எதையவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் சீரியலை தொட்டு எழுதினாரா . நீங்களும் அவருக்கு ஜால்ரா
போடுகிறீகள் ,சீரியலை குறை கூறு தோழர்களே , முதலில்
நன்மை பாருங்கள் .1. பெண்கள் இப்போது அழகாக தமிழ்
மொழியில் பேசுகிறர்கள் , 2.குடும்ப பிரச்சனைகள் வரும் பொழுது தாங்களே தீர்த்துக் கொள்கிறார்கள் , 3) பொறுப்பில்லாமல் பிள்ளைகளை வளர்த்தால் அதன் பின்
விளைவுகளை தெரிந்துக் கொள்கிறறார்கள் 4) நம்மோடு
உள்ள உறவினர்கள் குறித்து தெளிவாக புரிந்துக் கொள்கிறார்கள் ,5)தகாத வார்த்தையை பேசினால் குடும்பம் சீர்லையும் என்பதும் தெரிந்து மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் பக்குவமாகா பேசி பழகுகிறார்கள்
இப்படி நல்லவைகளை அடிக்கிக்கொண்டே போகலாம் ,
சினிமா என்பது பொழுது போக்கும் ஒரு ஊடகம் ,அதில் நல்லவைகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் ,
நமக்கு 6ஆம் அறிவு இருக்கிறது அதுக்கு தெரியாதா
தீயதை விளக்கி நன்மையை எடுக்க ,6ஆம் அறிவு இல்லாத மலாக்கா முத்துகிருஷ்ணன் உளறுகிறார் என்றல் நாமும் அவரோடு உலர முடியுமா ,அவரை இணைய தளத்தில் நிறைந்து கிடைக்கும் பழைய செய்தியை மக்களுக்கு தெரிந்த செய்தியை தேடி புதியதாக எதையோ கண்டு பிடித்து விட்டதாக தினக்குரல் வாசகர்களை ஏமாற்றுகிறார் மக்கள் எல்லோரும் இணையத்தளத்தை வலம் வருகிறர்கள் அவரின் பழைய புராண செய்திகளை படிக்க விரும்பாத வாசகர்கள் தினக்குரல் பத்திரிக்கையை வாங்காமல் இப்போது மக்களோசை பத்திரிக்கையை வாங்குகிர்றாக்கள் தோழரே ,அவர் கருத்தை கேட்டு நீங்களும் சரி ,அவரும் சரி சீரியலை ,சினிமாவை ஒழிக்க முடியாது மலாக்கா முத்து கிரிஷ்னான் மல்லாக்காக படுத்து குறை கூறினாலும் ஒன்னும் செய்யமுடியாது , சினமா துறையை நம்பி எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் ,தொலைகாட்சியில் வேலை செய்யும் நம்மவர்கள் இருக்கிறர்கள் என்று அவருக்கு கூறுங்கள் நைனா .
சின்னத்திரையில் வருவதும் போவதும் தான் தமிழர்களின் வாழ்க்கை பண்பாடு என்று எழுதுபனே தமிழன் அல்லாத போது, இதுதான் தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்க்கை முறை என்று இவன் என்ன விளக்கு பிடித்துப் பார்த்தானா?. இது பரவலா நடக்குதுன்னா, எங்கே? உங்க வீட்டிலா?. எப்படி அந்த சின்னத்திரை தயாரிப்பாளர்கள் ஒரு வருபோகின்னா அதற்கு சற்றும் குறையாதது இங்கு கருத்து எழுதும் ஒரு வருபோகி!. என்ன ஒரு அதிசியமான கண்டுபிடுப்பு. உடலில் தங்கம் போட்டால் காமம் வராது?. எங்காவது ஒரு கேனையன் உட்கார்ந்திகிட்டு இருப்பான் அவனிடம் சொன்னால் நம்புவான். செம்பருத்தி வாசகர்கள் அறிவுள்ளவரே என்று மறந்து, தனக்கு கனவில் வந்தததை எல்லாம் எழுதி பிதற்ற வேண்டாம். இப்படிதான் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, சொல்லி தமிழர்களை மூடனாக்கினான் அயலூரில் இருந்து வந்த பார்ப்பனன். அதனையே மீண்டும் இங்கே சொல்லி கடுப்பேடுத்த வேண்டாம். நாசர் ஒரு படத்துல வார்த்தைக்கு வார்த்தை அன்பே சிவம்-ன்னு சொல்லிட்டு அதற்குப் புறம்பான காரியத்தையே செய்து கொண்டிருப்பார். கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேணாம். காரணம் நம்பிக்கை, நம்பிக்கை என்று எல்லா மூட நம்பிக்கையையும் ஒருங்கே கூட்டி வந்து இந்து மதத்தில் சேர்த்து வைத்து வயிற்றை வளர்ப்பது வாடிக்கையாகி விட்டது. அப்படி வந்ததுதான் வரலட்சுமி விரதம். கடவுளை உணர்ந்து வழிபட வேண்டும். அங்கே அவ நம்பிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
தமிழன் அய்யா அன்று மூடத்தனத்தை பின் பற்றியவர்கள் மத்தியில் சினிமா மேலும் மூட பழகத்தை பரப்பிய போது
சிந்தனைக்கு வேலை கொடுக்க விரும்பாத சிலர் அந்த
மூட பழகத்தை பின் பற்றியதை ஒப்புகொள்கிறேன் ,ஆனால்
இப்போது எங்கு பார்த்தாலும் அறிவின் வளர்ச்சி காரணமாக மனிதர்கள் முனேற்றம் அடைந்து மூட பழக்கங்களை
ஒதுக்கி வைகிறார்கள் ,மூடபழகத்தை சில சீரியல்கள் கொண்டு வந்தாலும் அதானல் விளையும் தீமைகளும்
எடுத்து காண்பிக்கிறார்கள் ,உங்களுக்கு பிடிகவில்லை என்றால் ஒவ்வொரு சீரியலில் காட்சி முடிந்ததும்
தாயரிப்பாளர்கள் உங்கள் கருத்தை எழுதி அனுப்பலாம் என்று வரும் முகவரிக்கு எழுதுங்கள் , மூட பழக்கங்கள் வருவது சீரியல் தான் காரணம் என்று கூறவேண்டாம் ,சீரியல் வருவதிற்கு முன் மூட பழக்கங்கள் இல்லையா . மூட பழக்கங்கள் வளர்வதற்கு காரணம் மதம் என்பதை மறக்க வேண்டாம் .
பெரியார் தாசனுக்கும், பெரியாருக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமால் கிணற்று தவளைப் போல் கருத்து எழுதுவதேனோ?.
அய்யா kayee நீங்க தமிழ்ல தான் எழுதறீங்கன்னு தெரியுது. ஆனா என்ன எழுத வர்றீங்கன்னுதான் புரியலே…
மலாக்கா முத்துகிருஷ்ணன் இணைய தளத்திலிருந்து பல நல்ல செய்திகளைத் தொகுத்துக் கொடுத்து வந்தார். இப்போது நண்பர் தமிழ்ப்பித்தன் மூலம் தினக்குரல் இப்போதும் வருகிறது என அறிகிறேன். ஆனாலும் கண்ணுக்குத் தென்படுவதில்லை. நன்றி நண்பா!
அய்யா.. தமிழ்ப்பித்தன் அவர்களே… உங்களுக்குமா என் உள்ளம் தெரியவில்லை!? எந்த மூடப்பழக்கம் மதத்தோடு இல்லாமல் தனியாக வருகிறது? அது சீரியலாக இருந்தாலும் சினிமாக இருந்தாலும் மதச்சாயம் பூசப்பட்டப் பிறகே சந்தைக்கு வருகிறது. மூடநம்பிக்கை மதத்தை ஒதுக்கிவிட்டு தனியாக வந்திருக்குமேயானால் எப்போதோ தமிழன் அதற்கு சாவுமணி அடித்திருப்பான். சினிமாவிலும் சீரியலிலும் தங்கமுலாம் பூசப்பட்டே வருகிறது. அதற்காக நல்ல தரமானவற்றை நான் குறை காண்பவன் அல்லன். நான் ஏன் எழுதினேன் என்பதை தேனி புரிந்துகொண்டார்.
என் உறவுக்காரர் அவர் தோழியின் பிள்ளைக்கு பிறந்த நாள், வாங்க போய்ட்டு வரலாம் என்று என்னை அழைத்தார் . அந்த தோழியும் எனக்கு பரிச்சயம் என்பதால் நானும் சென்றேன் . 7.30 மணிக்கு வெட்ட வேண்டிய கேக் கை 8 45 வெட்டினார்கள் காரணம் பிள்ளையின் தாய் அவர் அறைக்குள் உடை மாற்றிக்கொண்டே சீரியல் பார்த்தால் லேட் ஆகிவிட்டது . இதில் இறங்கி வந்தவர் சீரியலில் என்ன நடந்தது என்று கதையை அவர் மகளிடம் விளக்கிகொண்டிருந்தார் . எனக்கு மணியாகி விட்டதால் மொய் பணத்தை அவரிடம் தந்து விட்டு வெளியாகிவிட்டேன் . இது போல பல தடவை பார்த்திருகின்றேன் . சீரியல் மோகத்தினால் விருந்தினரை வெளியே வந்து வாங்க என்று அழைக்க குட மனமிள்ளதவர்களை நான் பார்த்திருகின்றேன் . சீரியல் குறைத்து கொண்டு அறிவுக்கு வேலை தரும் நிகழ்சிகளை / உலக நடப்புகள் புதிய கண்டுபிடிப்புகளை ஒளிபரப்பினால் நாமும் பல சாதனைகளை செய்யலாம் .
ஒரு பத்திரிக்கை என்பது நடப்பு செய்திகளையும் ,சம்பவங்களையும் தாங்கி வருகிறது ,அதே வேலை கருமாதி
செய்தியையும் தாங்கி வருகிறது ,அதனால் அந்த பத்திரிக்கை
கருமாதி பதிரிக்கையாகி விடுமா ,அது போல தொலைகாட்சி
என்பது நல்ல கதைகளையும் ,மூட பழகங்களையும் தாங்கி
வருகிறது உங்கள் அறிவு நல்லதை எடுக்காமல் கெட்டதை மட்டும் எடுத்துகொண்டால் நான் என்ன செய்ய முடியும் ,ஒன்னு சீரியல் வேண்டாம் அஸ்ட்ரோ நிலையத்திற்கு தெரியப் படுத்துங்கள் இல்லை என்றால் உங்கள் தொலைக்காட்சி பெட்டியை அடைத்து வையுங்கள் ( உங்கள் மனைவி உங்களுக்கு சமையல் செய்து கொடுக்காவிட்டால் ) என்னை கோபிக்காதீர் சீரியல் இப்போது வந்த தொலைக்காட்சி நாடகம் , அப்படி இதனால்தான் சீர் கெடுகிறது என்று சொல்லும் மெத்த அறிவாளிகளே சீரியல் நாடகம் வருவதற்கு முன் நம் சமூதாயம் என்ன சிறப்பாக வாழ்ந்தா , இப்போது தமிழ் மாணவிகள் பல்கலைக்கழக வார விடுமுறை யன்று கோலாலும்பூரில் தெருவில் சதை வியாபாரம் செய்வதாக பத்திரிக்கையில் வரும் செய்தி க்கு கரணம் சீரியலா எந்த நாடகத்தில் கல்லூரி பெண்கள் சதை வியாபாரத்தை செய்ய சொல்லி கொடுக்கிறர்கள் ,என்ன மாற்றம் என்றால் சினிமாவில் பெண்கள் ஆண்களை தண்டிக்க பத்ர காலி வேடம் போடுவார்கள் ,சீரியலில்
மற்ற குடும்பத்தை கெடுக்க வில்லி வேஷம் போடுகிறார்கள்
நடிகனாக வேஷம் போட்டால் பிணமாக வும் ,வில்லனாகவும்
காமுகனாகவும் ,நல்லவனாகவும் நடிக்க வேண்டும் , நல்லவனாக நடித்தால் கெட்டவனாக நடித்தால் கெட்டவன்
என்று நினைக்கும் அறிவிலிகளுக்கு நான் ஒன்றும் கூற
முடியாது .பாவம் நம் பெண்கள் சில கணவன் மார்களின்
கொடுமை ,பிள்ளைகளின் கைவிடுதல் ,கணவன் வேறு ஒரு பெண்ணை நாடி செல்லும் கொடுமைகளால் அன்றாடம்
மனவேதை படும் பெண்களுக்கு சீரியல் ஒரு பொழுது
போக்கு மையமாக அமைகிறது , ஆண்கள் பிரச்னை வந்தால் கூட்டாளிகளுடன் கடைகளிலோ ,அல்லது பப்புக்கு சென்று
குடித்து தங்கள் கவலையை போக்கிக் கொள்கிறான் ,பெண்கள் சீரியலை பார்க்க வேண்டாம் நீங்கள் கெட்டு போய் விடுவீர்கள் என்று மல்லாக்கா முத்து கிரிஷ்னான் கூருகிறார் என்று கூறி அவர்களை ஆண்களை போல பப்புக்கு சென்று குடிக்க சொல்ல போறீர்களா அறிவார்ந்த நைனாகளே .
மனிதன் அதுவும் தமிழன் எப்போதும் தான் செய்த தவற்றை மற்றவர்களின் மீது போடுவான் ,தன்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாமல் போனால் விதி மீதும்,
தான் தவறு செய்து விட்டால் குறுக்கே போகும் பூனை மீதும் இப்படி எல்லா இயலாமை காரியங்களுக்கு சாங்கியம் , கணவன் மனைவி ஒத்து வாழாமல் போனால் பொருத்தம் அடுக்கி கொண்டே போகலாம் ,அதனால் ஒரு பொழுது போக்கு சாதனம் தான் அதுவும் சீரியல்தான் சமூதாயத்தை சீரழிக்கிறது என்று கூறி உங்களை அறிவிலிகளாக மாற்றிக்கொள்ள வேண்டாம் நைனா . , ,
தமிழ் சமுதாயம் அழிந்து கொண்டு போகிறது… நாடகம் இல்லாத வீடே இல்லை…
விடுங்கப்பா! ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனிதன் மாறிக்கொண்டே வருவான். இப்போது நமது பெண்களுக்கு சின்னத்திரை அவசியமாகப் படுகிறது. நமக்கு முன்னுதாரணம் தமிழ் நாட்டுப்பெண்கள் தான். அவர்கள் மாறினால் இவர்களும் மாறுவார்கள்.பூங்குழலி வீரன் எழுதவதைப் பொழுது போக்காகக் கொண்டிருக்கிறார்; எழுதுகிறார். இப்போது நமது பெண்களுக்குப் பொழுது போக்குகள் இல்லை. கொஞ்சம் ஏமாந்தால் கணவன் மாணவி-பிள்ளைகள் என்று பாராமல் குடும்பத்தை நாடு ரோட்டில் நிறுத்திவிட்டு புதுசா ஒன்றைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறான். பெண்கள் என்ன செய்வார்கள்? வீட்டில் அடைந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு இந்தச் சின்னத்திரைகள் தான் ஆறுதல். அதற்கும் வேட்டு வைத்தால் எப்படி? எவ்வளவோ நல்ல நிகழ்ச்சிகள் ஒளி ஏறத்தான் செய்கின்றன. அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? கணவன்-மனைவி, மாமனார்-மாமியார் இவர்கள் அடித்துக் கொள்ளுவதில் இருக்கும் சுவராஸ்யம் வேறு எங்கு இருக்கிறது? நிலைமை இப்படியே இருக்கப்போவதில்லை. எல்லாம் மாறத்தான் செய்யும். அப்போது நமது ரசனையும் மாறும்.இதோ காலை 8,30 க்குப் பக்தி நிகழ்ச்சியில் ஆரம்பித்து இரவு 12.30 மணி வாணி ராணி யோடு எமது நேரம் முடிவடைகிறது. இதில் பாதி பக்தி, பாதி சீரியல் நாடகங்கள். பாதி நரகம், பாதி சொர்க்கம்! காலம் வரும். மாறுவோம்.
அவரவர்கள் திருந்தினால்தான் உண்டு. இதை அப்படியே விட்டு விடுவோமே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அப்போது எல்லாம் தானே நடக்கும்.
சின்னத்திரை சினிமாவைப் பார்த்துதான் பெரும்பாலோர் சீர்கெடுகின்றார் என்பது தனி நபரின் குற்றச்சாட்டாகும். மது , மாது , கொலை , தற்கொலை , குண்டர் கும்பல் , தகாத உறவு என ஆன்ம நெறிக்கு ஒப்பற்ற செய்கைகள் இன்றல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களிடையே உவந்தும் ஊர்ந்தும் வந்துள்ளன என்பதை அனைவரும் அறிவோம். தமிழ் சினிமா உலகம் மட்டும்தான் இப்படி உள்ளது என்று கூறிடின் அது முற்றிய பொய்யாகும். இதர மொழி தொடர்களையும் காணுங்கள் தெரியும். பொழுதைத் தக்க வழியில் கழிக்க தெரியாதோரும் சிற்றின்பத்தைத் தேடுபவர் மட்டுமே இந்தத் தொடர்களைக் கண்டும் களித்தும் வருகின்றனர்.
இந்தத் தொடர்கள்தாம் நம்மைச் சீர்கெடச் செய்கின்றது எனின், திரு.ராஜமணியை நாடச் சொல்லுங்கள். இடைவிடாது தொடர்களை ஒளிபரப்பும் அவரை முதலில் சரி செய்யுங்கள்(பதவியில் பவணி வருபவர்).
அதிக ஓய்வில் வீட்டிலுள்ளோர், பொழுதைத் தக்க வழியில் செலவழிக்க தகுந்த , ஏற்ற தீர்வுகளை முன்வைப்போம். எடுத்துக் காட்டாக ,ஒவ்வோர் இடத்திலும் சமய வகுப்புகள் தொடங்கலாம்( மூட நம்பிக்கையிலிருந்து விடுபட வைக்கும் வகுப்புகள்) அதிலும் குறிப்பாக நால்வர் உணர்த்திய ஓரிறைக் கொள்கை உரமேறிய சைவ சித்தாந்தத்தைக் கற்பிக்கலாம். தமிழ்மொழி வகுப்புகள் நடத்தலாம். ( தமிழ்தாம் உலகின் அனைத்து மானுடனும் பேசிய முதல்மொழி என அமெரிக்க மொழி ஆய்வாளர் Alex Collier கண்டுபிடித்துள்ளார்). முதலில் இதைச் செய்ய ஆவன செய்வதை விடுத்து ஏட்டில் உரைப்பது சிறப்பன்று.
ஒரு நேர் கோட்டை சிரியதாக்குவதர்க்கு இன்னொரு நீண்ட நேர்கோட்டை அதன் பக்கத்திலேயே போடுங்கள் என்று சிவக்கனி சொல்கின்றார். “இரு கோடுகள்” பட போல. நன்று. நேரம் போகாமல் அல்லல் படும் நம் மாமிகளுக்கும், மரியாதைக்குரிய அவரர் மனைவிகளுக்கும் நேரம் போக்க வேற்று வழியை செய்து விடுங்கள் அல்லது காட்டுங்கள். அப்புறம் ஏன் அவர்கள் இந்த சின்னத்திரை பக்கம் போகப் போகின்றார்கள். ஒரு காலத்தில் சினிமா தியேட்டரே நம் வீடு என்று இருந்த காலம் போய் இன்று அது நம்மை விட்டுப் போகவில்லையா?. அது போல இதுவும் மாற வழி பிறக்கும். யோசி, யோசி. மாத்தி யோசி.
தகுதியென வொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் அதாவது,பகைவர்,அயலோர்,நன்பர் ஒருதலை சார்பாக நிற்காமல் இருந்தலே நன்மை தரகூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்,என்கிறது குறள்.மற்றும் நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒருநினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டோழியப்போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்,என்கிறது குறல் 116.(நடுவுநிலைமை ).ப்ராமணறை படுகேவலமாக இழிவுபடுத்துகிறான் ஒருவன் அதற்கு பதில் கொடுக்கையில் குறுக்கே வழிமறித்தால் என்ன அர்தம்,தமிழ் சமுகம் எந்த தரப்பால் தாழ்த்தி மதிக்கப்டுகிறதையே யாம் அடையாலம் காட்டினோம்,சிலர் திராவிட கொள்கையை இந்த நாட்டில் ஆண்மீகம் வழி புகுத்துவதை தெழிவுபடுத்தவே முயன்றோம்.ஆசிரியர்க்கு முழு கட்டுறையை விலக்குவதை தவிர்த்து திருத்தப்பட வேண்டும் யென்று கேட்டு கொள்கிறோம்,வாழ்க நாராயண நாமம்.
ராதிகா போன்று கேடு கேட்ட நடிகைகள், நீயா நானா போன்று கலாச்சாரத்தை சிரளிக்கும் மூடர்கள், மானங் கேட்டு ஆடும் இளம் மயில்கள், vetkamillamal இதை ஒழி பரப்பும் மேடைகள்/ மீடியாக்கள், பெண் புரட்சி பேசி குல வழக்கதை கெடுக்கும் மூதேவிகள், நம் சான்றோர் தவமிருந்து சொன்னே கருதுக்களை உதாசீன படுத்தி சமூகத்தை குழியில் புதை கின்றனர். புருஷனை பெயர் சொல்லி வ போ என்று அழைக்கும் புன்னகுகள் எல்லாம் அடுத்ட கட்ட அளிவிட்ட்கு ஆரம்பம்.
குத்துவிளக்கின் கருத்து நன்று,இதெல்லாம் திராவிட கொள்கை.அடக்கம் இல்லாதோர்க்கு ஒழுக்கம் இருக்காது.அடக்கத்தையும் ஒழுக்கத்தையும் மூட நம்பிக்கை என்கிறது திராவிடம்,நாராயண நாராயண.
என்னை பொருத்தவரை இன்ட சின்ன திரை பார்ப்பதை தவிர்த்து நம் மதத்தை படித்து தெரிந்துகொள்ளலாம். இப்பொழுது நம் மதத்தை பலர் குறை கூறிக்கொண்டு வருகிறார்கள் . காரணம் நமக்கு நம் மதத்தை பற்றி தெரியாமல் இருப்பதால்தான் . மட்ட்ரவர்கள் குறை கூறினால் உடனே நமக்கு கோபம் வருகிறது . ஆனாலும் நமக்கு நம் மதத்தை சரியாக தெரியவில்லை . நிறைய புத்தகம் இருக்கிறது வேதங்கள் ,மகாபாரதம் ,பகவத்கீதை , ஹிந்து தர்மம் , திருக்குறள் மற்றும் பல உள்ளன . வயதாகியும் நமக்கு நம் மதத்தை சரிவர தெரியவில்லை . நாம் படித்து தெரிந்துகொண்டால்டான் நாளை சமுதாயம் உருப்படும் . நாமே இப்படி நாடகம் பார்துகொண்டிருன்டால் சமுதாயம் எப்படி உருப்படும்? நம் நாத்தில் பல மன்றம் இருக்கின்றன. அவர்களை நாடலாம் . நம் சமுதாய தலைவர்கள் எல்லோருக்கும் தமிழ் மத புத்தகங்களை கொடுக்க ஏற்பாடு செய்யலாம் . குறை கூறிகொண்டே இருந்தால் எதுவும் நடக்காது . கோயில்களில் சமய புத்தக சாலை ஆரம்பிக்கவும் . அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற வாய்ப்பு உள்ளது . தயவு செய்து தமிழ் அறிஞர்கள் , சமுதாய தலைவர்கள் இதை முயற்சி செய்யுங்கள் . வணக்கம் ஓம் நாம சிவாயா ……வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் .
16 உம் நிறையாத பருவ மங்கை, கற்பு கரசி, தெய்வத்தை நாடி தவமிருந்து, தர்மத்தை காத்து இருக்கும் மணாளனை மணந்து, பல பிள்ளைகளை பெற்று, இன்பத்தை பெருக்கி, துன்பத்தை குறைத்து தமிழர் பல நாடுகளை ஆட்சி புரிந்து இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக வாழ வழிவகுட்டால் அன்று. இன்று, கேடு கேட்ட பெமினிஸ்ட் கொள்கை கலை கற்று கொண்டு,பெண் புரட்சி பேசி, படிப்புக்கு கடன் பட்டு, இளமையில் கற்பிழந்து, பேய் ஆட்டம் போட்டு, புரட்சி பேசி, முதுமையில் மாப்ளை தேடி கஷ்டப்பட்டு, கிடைதால் பின் கடந்த கால விளைவு குலூடு நிம்மதி இழந்து, வேலை கிடைதால் குடும்ப/ வேலை குழப்பத்தில், பிள்ளை பெரும் கஷ்ட மாகி, பிறந்தால் முதுமை தாயின் genetic defect (25 and above)ஆகி, அதனால் தமிழர் மக்கள் தொகை குறைந்து, ஓட்டுரிமை குறைந்து, 8 கோடி தமிழர் வாழும் இந்தியாவில் ஒரு முழு cabinet பதவி கூட இல்லாமல், பெண் புரட்சி பேசி குடும்பத்தை நார் அடித்து. அவர்களுக்கு பிறக்கும் ஆண்கள் கேட்டவனா மாறி … அடுத்த வாரம் மீண்டும் தொடரும் தவறாமல் பார்க்கவும்.
சுமார் 8 வருடத்துக்கு முன்பு என் தாயாரும் சீரியல் பைத்தியம் தான் . அவருக்கு எதில் ஆர்வம் உண்டு என்று தெரிந்து கொண்டேன் ,அதை செயல் படுத்தினேன் . இன்று RTM மில் தமிழ் நிகழ்சிகள் ஒளிபரப்பினாலும் ஒளிபரபாவிட்டலும் என் தாயார் அஸ்ட்ரோ போட்டு கொடு என்று கேட்டதில்லை . காரணம் அவருக்கு நான் அமைத்து கொடுந்த பொழுது போக்கு நல்ல வருமானத்தை தருவதால் . நீங்களும் முயற்சி பண்ணலாமே ??
இது கழியுலகம் மங்கை,எல்லாமும் தலைகீழ் தான் நடக்கும்.இது விதி,விரண்டாவாதத்தை விட்டு பெரியோறை மதித்து வாழ பழகிகொண்டால் இந்த சீரியல் காணாது தொலைந்துவிடும்.ஒன்றாய் சேர்ந்து வாழ பழகிக்கொண்டால் சீரியலில் கிடைப்பதைவிட நிறையவே கிடைக்கும்.அனாதை ஆஸ்ரமம்,முதியோர் இல்லம்,குழந்தை காப்பகம்,எல்லாம் மூடப்படும்.ஹிந்து வாழ்வு சுகமானது கண்டு பெருமை சேறும்.வாழ்க நாராயண நாமம்.
மங்கை அவர்களே எந்த மாதிரியான பொழுது போக்கை ஏற்படுத்தி கொடுத்தீர்கள்?டிப்ஸ் ப்ளீஸ் யாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெற வழி காட்டுகள்
மலேசியா இந்தியாவை விட நுகர்வு கலாசாரம் பெருகிய நாடு இங்கே உள்ள மக்களுக்கு தொலைகாட்சி தொடர்கள் இல்லை என்றாலும் நுகர்வு கலாசாரம் இவர்களை சீரழிக்கும் என்பதே எனது எண்ணம் . யதார்த்தமும் கூட நன்றி
மங்கை நீ ………………….