“நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது”
எப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் அழுகுரல்களில் சத்தம் காதை அடைக்கிறது. இல்லையென்றால் மிக மட்டமாக ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி யாராவது யாரையாவது திட்டிக் கொண்டிருப்பார்கள். காது கொடுத்து கேட்க முடியாது. எவன் குடியை எப்படி கெடுக்கலாம், யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், எப்படி திருடுவது, எப்படி பணம் பறிப்பது என்பதாகத்தான் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், மனைவிக்கு துரோகமிழைக்கும் கணவன்மார்கள், பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகள் என பெரும்பாலான சின்னத்திரையான எதிர்மறையான விசயங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.
இப்போதெல்லாம் மாலை 5.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை யார் வீட்டிற்கும் நான் செல்வதில்லை என்று கூட சில சொல்கிற அளவுக்கு சீரியல்கள் என்று சொல்லப்படுகிற சின்னத்திரை தொடர்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. மேற்காணும் பதிவுகள் கூட வழக்கமாக சின்னத்திரைகளில் இடம்பெறும் காட்சிகள் தான்.
வாசிப்பு, இலக்கியம், பொது அறிவு, அறிவியல் சிந்தனைகள் போன்றவற்றைப் பரப்புவதற்குப் பதில் இப்படியான வாழ்விற்குத் தேவையற்ற விசயங்களைப் சின்னத்திரைகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நாமும் பொழுது போகவில்லை என்பதற்காக சின்னத்திரை தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் நமது எண்ணத்தில் நாமே நஞ்சை ஏற்றிக் கொண்டிருக்கின்றோம்.
குடும்பத்தோடு அமர்ந்து வாசிப்பது, உரையாடுவது, உண்பது, கலந்துரையாடுவது என்பன போன்ற நல்ல விசயங்கள் புறந்தள்ளப்பட்டு குடும்பத்தோடு அமர்ந்து சின்னத்திரை தொடர்களை நாம் இரசித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏற்கனவே, நம் சமூகத்தில் பலர் அடிப்படை சிந்தனையாற்றலின்றி மனரீதியாக பின் தங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களை இருக்கின்ற சூழ்நிலையிலிருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்திற்குள் கொண்டு வர தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஊடகங்கள் மக்களை இவ்வகையான மலிவான கலாச்சாரத்திற்குள் தள்ளி கொண்டிருக்கிறது. நாமும் தெரிந்தோ தெரியாமலோ அதில் மூழ்கி மீண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
நம் நாட்டில் பெரும்பாலான சின்னத்திரை தொடர்கள் மாலை நேரத்தில் தான் ஒளிப்பரப்பாகின்றன. மாலை நேரம் எவ்வளவு முக்கியமானது. வீட்டில் இருப்பவர்கள் அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விளையாட்டுப் பூங்காவிற்குச் செல்லலாம். காலாற நடக்கலாம். காலை பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் ஓய்வெடுத்தப்பின் வீட்டுப்பாடங்கள் செய்ய உதவலாம். காலையில் சமைத்த சோறு கறியையும் இரவும் சாப்பிடுவதைத் தவிர்த்து சத்தான வேறு உணவுகள் தயாரிக்கலாம். மாலை பள்ளி முடிந்து வரும் பிள்ளைகயோடு இணைந்து செய்வதற்கு ஏராளமான கடமைகள் காத்துக் கிடக்கின்றன.
ஆனால், இதையெல்லாம் தவிர்த்து விட்டு 5 மணிக்கு தொடங்குகிற சின்னத்திரை தொடர்கள் இரவு 10 மணி வரை நீள்கிற அவலம் பல குடும்பங்களில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளையும் கணவர்மார்களையும் கவனிப்பது கூட பலருக்குச் சுமையாகப் போய்விட்டது. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் வேலை முடிந்து கணவன்மார்களும் பிள்ளைகளும் கூட இரவு வரை சின்னத்திரை தொடர்களில் மூழ்கி விடுகின்றனர். தொடர்கள் முடிந்த பிறகுதான் சாப்பாடு, தூக்கம், வீட்டுப்பாடம் எல்லாம்.
பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேசுகிற கதைகளில் இப்போது சின்னத்திரையும் இடம்பெற்று விட்டது. பல குடும்பங்களில் உறவுகளுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இந்த சின்னத்திரைகள் காரணமாகின்றன. நாள்தோரும் பல மணி நேரங்கள் அதைத்தானே பார்க்கிறோம்.
நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது.
நாம் எப்போதும் நம் எண்ணங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். அவைதான் சொற்களாக வெளிவருகின்றன. நாம் சொல்லும் சொற்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவைதான் செயல்களாக மாறுகின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டும். அவைதான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கம்தான் பின் ஒழுக்கமாகிறது. ஒழுக்கம்தான் நம் வாழ்வை உருவாக்குகிறது.
மக்களின் சிந்தனையை நாசப்படுத்துவோருக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டும் என தந்தை பெரியார் சொல்லியிருப்பதாக வாசித்திருக்கிறேன். சின்னத்திரைகள் மக்களின் சிந்தனையை நாசப்படுத்தும் வேலையையே செய்கின்றன.
நம் எண்ணம், பேச்சு. செயல், பழக்கம், ஒழுக்கம், வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் சிதைக்கும் பணியைச் சின்னத்திரைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் ஒளிப்பரப்புவதால்தான் நாங்கள் பார்க்கிறோம் என்று நொண்டிச் சாக்கு சொல்வதை விடுத்து ஆக்கபூர்வமான வழியில் நமது நேரத்தைச் செலவிட வேண்டும். நாம் பார்க்காமல் தவிர்க்கும் பட்சத்தில் காலவோட்டத்தில் சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
பூங்குழலி வீரன்
அறிவார்ந்த தமிழ் குமுகாயத்திற்கு எங்களின் சிறு முயற்சியாக தனித்தமிழ் இணையத் தொலைக்காட்சியை தொடங்கியிருக்கிறோம். திருக்குறள், தொல்காப்பியத்தை கல்வித் தொடராக ஒளிபரப்புகிறோம். மேலும் தமிழியல் சிந்தனை சார்ந்த தொடர்களை வெளியிடுகிறோம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி. http://omtamil.tv/
சின்ன திரை யோ பெரிய திரையோ இல்லை மற்ற நிகழ்ச்சி களோ, நமது இருபது ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக கலாச்சாரம், ஞானிகளின் வாக்கு, நம்பிக்கை எந்த கால சூழ் நிலையிலும் நிரூபிக்க பட்ட ஒன்று. It is time tested. அதை எடுதுக் காட்டுவது போலே இருக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக எதோ வெளிநாட்டில் அவர்கள் தங்கள் சுயநலட்டிக்காக சொன்ன கருத்தை இங்கே திணிப்பதை இனம் கண்டு தவிர்ப்போம்.
நன்றி Omtamil.tv. – காணொளிக் காட்சியைக் காண்போம்.
omtamil. tv காணொளிக் காட்சியை ஒவ்வொரு நாளும் அஸ்ட்ரோ வானொலி வருட கணக்கில் ஒளிஏறும்
சீரியலுக்கு பதில் ஒளி ஏற்றினால் நம்மை பற்றி
நாம் தெரிந்துகொள்ளவும் , நம் மொழி கலாச்சாரத்தை
புரிந்துக்கொண்டு தெளிவு பெற்ற சமூதாயமாக மாற
முடியும் செய்வாரா ராஜாமணி .
வீட்டில் தன் சொந்த செல்வாக்கை பயன் படுத்தி சீரியல் நோயை தடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டும் இங்கே செய்தியை பதிவு செய்யவும்..இங்கே மட்டும் வீராப்பாக எழுதினால் பத்தாது..குடும்பத்தில் தைரியம் காட்டுங்கள்..தொடை நடுங்கிகள் இந்த பகுதிக்கு வர லாயக்கில்லை ..
இதுவரையில் பொங்கல் ஒரு சமய நிகழ்வு என்ற விளக்கத்தை Omtamil தொலைக்காட்சியில் கண்டேன். மேலும் தொடர்வேன். இப்படி பட்ட பல அரிய மொழி, கலாச்சார காணொளி காட்சிகளைக் கண்டு அறிவுபெற அவர்தம் வீட்டிலுள்ள மகளிருக்கு கொஞ்சம் தெரிவியுங்கள். இன்னும் பல நல்ல வலைத்தளங்களும், மற்ற காணொளி தளங்களும் நிறையவே உள்ளன. பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமக்கு நன்மை.
ரமணி.கே,செம்ம அடி போங்க,இப்படி இங்கே படித்தது நேஹி,ஆம்பளை ஆம்பளையா இருந்தா வீடு வீடா இருக்கும்,சூப்பர்,வாழ்க நாராயண நாமம்.
ரமணி கே. உங்கள் கூற்றை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியது
பெண்கள் என்ன அடிமைகளா ,? அவர்களை அந்த படம் பார்க்காதே எந்த படம் பார்க்காதே என்று ஆண்கள் உத்தரவு
போட,அவர்களும் நம்மை போல மனித பிறவியே ,பெண்களுக்கு( மனைவிகளுக்கு) நாம் உத்தரவு போடும்
முன்) முதலில் நாம் நம் சகோதிரிகளுக்கு ,பெற்ற தாய்க்கு
சீரியலை பார்க்காதே என்று உத்தரவு போட முடியுமா ,ஆம்பளை என்றால் பெண்களை அடக்கி ஆள்பவன் என்று தராக அர்த்தம் கொண்டுளீர் ,ஆண்கள் குடும்ப தலைவனாக இருந்து குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தி செல்பவன் ஆண்மகன் ,மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டில் இருதுகொண்டு குடித்து கொண்டு பெண்டாட்டியை அடித்து கொடுமை படுத்துகிறவன்,அவர்களின் சின்ன அபிலாசைக்கு ( சீரியல் ) பார்ப்பதற்கு தடை செய்பவன் அல்ல ,ஆட மாட்டாதவன் மேடை கோணலாக இருக்கிறது என்று கூறுவது போல சமூதாயம் கெடுகிறது அதற்கு காரணம் சீரியல் தான் என்று கூறவேண்டாம் ,சீரியலை பார்க்கும் எத்தனை குடும்ப பெண்கள் மற்ற குடுபத்தை கெடுக்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள் ,எத்தனை பெண்கள் பாராங் கத்தியை ஏந்தி சண்டைக்கு போகிறர்கள் சண்டித்தனம் செய்வது எல்லாம் ஆண்மக்கள் ஆனால் சமூதாயம் கெடுவது சீரியலை பார்க்கும் பெண்களால் தான் என்று கூறி அவர்களை சீரியல் நோயை தடுக்க சொல்வது ஆண் ஆதிகத்தை வளர்பதற்கு இடம் தர வேண்டாம் நைனா
Omtamil.tv -யில் குறள் 1 கானொளியைக் கண்டேன். பாவாணரின் தமிழைப் பகுத்தறியும் தன்மையைக் கொண்டு முதலாவது குறளுக்கு விளக்கமளித்ததைக் கண்டு மெய்மறந்தேன். குறளை இழித்தவர்களின் குரல்வளையை இறுக்கியது மாதிரி இருந்தது விளக்கம். நன்று. மேலும் கானொளியைக் காண்போம்.
அன்பு தமிழ் பித்தன்..கோபம் ஏன்? நீங்கள் ஏற்கவேண்டும் என்பதக்காக என் கருத்தை மாற்ற இயலாது..வீட்டை திருத்த இயலாதவர்கள் எப்படி சமூக பிரச்சனையை எதிர்கொள்வீர்கள் ?எங்கள் குடும்பம் வரையில் எவருமே சீரியல் பார்ப்பது இல்லை.புரிய வைத்தோம் ..புரிந்து கொண்டார்கள்.இங்கே ஆணாதிக்கம் எங்கே வந்தது ?.உங்களால் முடியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.தேவை இல்லாமல் ஆண்மகன்,ஆணாதிக்கம் ,ஆடமாடாதவன் என்ற தேவை இலாத வசனம் ஏன் நைனா ?
இந்த கருத்து வரும் யென்று எதிர்பார்தேன்,அதற்கும் சூப்பர் பதில்.பேஸ் பேஸ்.ரமணி.கே,அன்பான வாழ்த்துக்கள் வாழ்க நாராயண நாமம்.
சாலையில் வாகனம் சிறப்பாக ஓட விதிகளும், பொலிசும் இருக்கும், ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்பட போஸ், தொழிலாளர் என்று இருக்கும், இதை போலிஸ் ஆதிக்கம், போஸ் ஆதிக்கம் என்று சொல்வதில்லை, அனால் உடல் கூறு, மன நிலைக்கு க்கு ஏற்ப ஆன் பெண் தர்மம், விதி முறை, குடும்பம், சமூகம் சிறப்பாக செயல்பட அமைத்து வெற்றிகரமா பல ஆண்டு பல தடைகளை தண்டி வாழ்ந்து வரும் உலகின் பல கலாச்சாரம் இன்று, சில கேடு கெட்ட மேற்கத்திய பெண்கள் தங்கள் சுய நலத்திற்காக அறுபதுகளில் பரப்பிய கருத்தை, அதுவும் இன்று அதன் விளைவு கொடுமையாக இருப்பதை பார்த்த பின், அதை கடைபிடிப்பது நல்லது அல்ல. இதை பல ஆராய்ச்சி செய்து, பல அநியாயங்களை பார்த்து எடுத்த தீர்மானம். நம் முன்னோர் வாழ்ந்த முறையே சிறந்தது. நட் பண்பு உள்ள பெண்ணை மதிக்கின்றோம், கலாச்சாரத்தை கெடுக்கும் பெண்ணையும், மீடியா நிகழ்ச்சியையும் மிதிக்கின்றோம்.
சபாஷ் ரமணி அவர்களே. நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஒரு சிலருக்கு ஊருக்குத்தான் உபதேசம், உனக்கு எனக்கும் இல்லை என்று சொல்வார்கள். இதில் சிலர் ஆண்மகன், ஆணாதிக்கம், ஆடமாட்டாதவன் எனும் தேவை இல்லாத வசனங்களைப் பேசுவார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஊருக்கு உபதேசம் செய்வதே அவருடைய பொழுது போக்கு. சிரித்தே பெண்களைக் கழுத்து அறுத்து விடுவார். மனவேதனை படும் பெண்களுக்கு சீரியல்கள்தான் ஒரு பொழுது போக்கு என்று தம்பட்டம் அடிப்பார். ஆனால், அவருக்கு மூன்று மனைவிகள். பற்றாக்குறைக்கு தன் கடையில் வேலை செய்த இருபது வயது பெண்ணின் மீதும் கையை வைத்து விட்டார்.
கடைசியில், போலீஸ்காரர்கள் வீட்டுக் கதவைத் தட்டும் போது தன் பண பலத்தைக் கொண்டு சமாளித்து விட்டார். அவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்கிறீர்களா. வட்டிக்கு விடும் தொழில். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தொழில். அந்த லைசென்சைக் கூட தன் உயிர் நண்பரிடம் இருந்து ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டார். ஊருக்கு பெரிய மனுஷன். பந்தாவாக பெரிய காரில் ஊர்வலம். எவன் ஏமாந்து இருக்கிறானோ, அவனுடைய காசையும் மனைவியையும் அபேஸ் செய்வது கை வந்த கலை. இப்படி பெண்களுக்கு வக்காளத்து வாங்கும் அந்த பெரிய மனிதரின் பொழுது போக்கு டி.வி. சீரியல்கள்தான். தவற்றை நியாயப் படுத்துவதும் ஒரு பொழுது போக்கு.
நீங்கள் எல்லாம் கூறுவது உண்மை.நான் என்ன செய்தேன் தெரியுமா?அஸ்ட்ரோவை அழைதேன் சுமார் அரை மணி நேரம் பேசினேன்.முட்டால் தனமான நாடங்களை நாங்கள் பார்க்கவா பணம் கொடுகின்றோம்?அட மட சம்பரநிகளே என்று ஏசினேன்.நான் மற்றும் போதாதே நீங்களும் கூப்பிடுங்கள்.
மீண்டும் பொங்கிய பாரதி,சித்தானா,ரவி மிக சரியான உண்மையான கவிதை.திராவிடன் ஒழிந்தால் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்படுவர்.எம் வீட்டில் எஸ்த்ரோ போடனம் பிள்ளைகள் படிப்புக்கு உதவுமே யென்று ஆனால் வீட்டில் மனைவி விடுவதா இல்லை,நாராயண நாராயண.
சீரியலில் வரும் அனைத்து நாடகங்களும் சமூக கேட்டை
விளைவிக்கிறது என்றால் அது வேண்ட வாதம் செய்யும்
கருத்து , நன்றாக பாருங்கள் ஏதோ ஒருமூலையில் நல்ல
கருத்தையும் கூறுகிறார்கள் ,உதாரணதிற்கு நாதஸ்வரம்
நாடகத்தில் கோபியின் அப்பாவாக நடிக்கும் நடிகர் ,எல்லா
தவறான கருத்துக்கு அறிவுரை கூறிவருவது பாராட்ட படவேண்டிய விசியம் ,நல்ல மனிதர்கள் நல்ல கருத்துள்ள சீரியலை தேர்ந்து எடுத்து பார்ப்பார்கள் ,ரமணி கே நீங்கள் நல்லவரா கெட்டவரா நைனா .
சீரியலில் வரும் அனைத்து நாடகங்களும் சமூக கேட்டை
விளைவிக்கிறது என்றால் அது வேண்ட வாதம் செய்யும்
கருத்து , நன்றாக பாருங்கள் ஏதோ ஒருமூலையில் நல்ல
கருத்தையும் கூறுகிறார்கள் ,உதாரணதிற்கு நாதஸ்வரம்
நாடகத்தில் கோபியின் அப்பாவாக நடிக்கும் நடிகர் ,எல்லா
தவறான கருத்துக்கு அறிவுரை கூறிவருவது பாராட்ட படவேண்டிய விசியம் ,நல்ல மனிதர்கள் நல்ல கருத்துள்ள சீரியலை தேர்ந்து எடுத்து பார்ப்பார்கள் ,ரமணி கே நீங்கள் நல்லவரா கெட்டவரா நைனா .
என் கருத்தை Anonymous அப்படியே காப்பி அடித்து ஏன் நைனா .
இன்று பல பேர், தீயதால் ப்ரைன்வாஷ் பண்ண படுகிறார்கள். ஒரு தவரான கருத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப அது உண்மை என்று நம்பு வார்கள். இன்று பெண்களுக்கு சொல்ல படும் கருத்து, ஆண்கள் கெட்டவர்கள், தங்களை ஆன் ஆதிக்கம் செய்கிறார்கள் அதை எதிர்து, ஆண்களை ஜெயிலுக்கு அனுப்புவோம், தாங்கள் நினைத்த படி ஆடுவோம் என்பது. நம் பாட்டிகளுக்கு இந்த எண்ணம் வந்திருந்தால் பலர் இன்று, தாயிடம் வளர்ந்து இருக்க மாட்டார்கள், தகப்பன் பெயர் தெரியாமல், திருமணம் பொய் என்று, மிருக வாழ்கையும், மன நோய், போதை, கொலை இன்றை விட பல மடங்கு அதிக மாக இருந்து இருக்கும் மேற்கத்தியர் போல. அனால் இன்றைய பெண் புரட்சியால், எதிர் காலத்தில் பலர், பெண் குழந்தை உட்பட இந்த கொடுமைக்கு ஆளாவார்கள். விதி முறைகள் மாறும் போது, தலை முறைகளும் மாறுமே.
பெண்ணுக்கு படிப்பு முக்கியம் என்று சொல்லும் நாம், பெண்ணுக்கு 400 கரு முட்டை உண்டு, வயதுக்கு வந்ததில் இருந்து menopause 40 கலீல் வரும், முதல் 200 கரு முட்டை தான் healthy பேபி உருவாக்கும், அதனால் பெண்கள் இளமையில் திருமணம் புரிய வேண்டும் என்பதை மறக்கின்றோம். மெய் ஞானம் நாம் பிறந்தது கடவுளை ஆடை வதற்கு என்று கூறும். முன்பு கணவன் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்வான், அவன் மனைவி அவனை கடவுளாக நினைத்து சேவை செய்து அவளும் கடவுளை அடைவாள். இன்று சினிமா ஹீரோக்கள் டான் பிறந்ததே பெண்ணை அடைவதற்கு என்று லோ லோ வென்று நாயாய் அலைகின்றனர். லிங்க புராணம், கலியுகத்தில் பெண், ஆணை மதிக்க மாட்டாள், பல ஆண்களிடம் அலைவாள், ஆனும் பெண்ணும் தர்மட்டிக்கு எதிராக நடப்பார்கள் என்கிறது. இன்று பல பெண்ணிடம் அடக்கத்தை காணோம், இளமை போனபின், கற்பிழந்த பின் மாப்பிள்ளை தேடி, பின் divorce என்று நிற்கின்றனர். வேதம் பெண் இளமையில் திருமணம் செய்ய வேண்டும், அணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தது 7 வருடம் வித்தியாசம் வேண்டும் என்கிறது. இன்று பல உறவுகள் முரிவதட்கு இதற்கு மாறாக நடப்பது காரணம். சின்னதிரையில் சீரழிந்த நடிகைகல், நம் வீடு பெண்களுக்கு பாடம் சொல்கின்றனர். அடுத்தவன் நம் மதத்தை பேசினால் கோபம் வருது, அனால் எத்தனை பேர் நம் மத கோட்பாடுகளை பின்பற்றுகின்றோம், பெண்கள் இப்போ போட்டு கூட வைபடில்லையே. பல குடும்பத்தில் முதுகு எலும்பான ஆண்கள் வீட்டை விட்டு விரட்ட படுகின்றனர். சமூக சிரழிவு கண் முன்னே தெரிகிறது.
பன்ச் வரலையே இந்த நேரமா பார்த்து,இரண்டுபேறும் ஒரு ஓரமாய் காமடி பன்னுங்கப்பா,நாராயண நாராயண.
வாழ்க சின்னத்திரை
நாராயண நாராயண.
நாசமா போங்கடா ,,,
தேவை இல்லாமல் இதல்லாம் எளுததிர்
வம்சம் தொடர் எப்போது முடியும்
எனக்கு பூமிகா கேரைக்ட்டர் எப்போது இறந்து போகும்