பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் பிரகாஷ்ராஜ், விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி என பலர் நட்புக்காக நடித்துள்ளனர்.
அதாவது கதைப்படி இதில் டைரக்டராக நடித்துள்ளார் தம்பி ராமைய்யா. வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவர் இவர். இந்த படத்தில் டைரக்டராகவே நடித்திருக்கிறார்.
மற்றபடி படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள் என்பதால், கதையின் லீடு ரோல் என்றால் அது தம்பி ராமைய்யாதானாம். அவர் இயக்கும் படத்தில்தான்இந்த நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்களாம். இவர்கள் அனைவருக்குமே ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு இருந்ததாம்.
இதில் விஷாலுக்கு ஒருநாள் படப்பிடிப்புதானாம். அன்றைய தினத்தில் மற்ற படப்பிடிப்புகளுக்கு செல்வது போன்று பதினொரு மணிக்கு ஸ்பாட்டில் ஆஜராகாமல், 9 மணிக்கே சென்று பார்த்திபனுக்கு பேரதிர்ச்சி கொடுத்து விட்டாராம் விஷால்.
அதோடு, போன வேகத்திலேயே தான் நடிக்க வேண்டிய காட்சியைப்பற்றி கேட்டு விட்டு டயலாக் பேப்பரை கையில் வாங்கிய விஷால், அரை மணி நேரத்தில் கேமரா முன்பு வந்து நின்று விட்டாராம்.
அதிலிருந்து ஒரு சின்ன கேப் கூட விடாமல் மாலை 6 மணி வரை நடித்துக்கொடுத்து, தனக்கான கேரக்டரை நிறைவு செய்து கொடுத்தாராம். அதையடுத்து, அவரை வழியனுப்ப வந்த இடத்தில் ஒரு கவரில் சில கரன்சி கட்டுகளை வைத்து விஷாலிடம் கொடுத்தாராம் பார்த்திபன்.
ஆனால், அதை வாங்கவில்லையாம் விஷால். நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை உங்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன் என்று விடாப்பிடியாக வாங்க மறுத்து விட்டாராம்.
இருப்பினும், சரி போகட்டும் எனறு விடவில்லையாம் பார்த்திபன். ஒரு சண்டேயில் நட்புக்காக நடித்துக்கொடுத்த விஷாலை நட்புக்காக சந்திக்க சென்ற பார்த்திபன், ரூ. 2 லட்சம் மதிப்பில் ஒரு பரிசு பொருளோடு என்ட்ரி கொடுத்தாராம. அதை விஷாலினால் தவிர்க்க முடியவில்லையாம்.
அப்போது, பணமா கொடுத்தால்தானே வாங்க மறுப்பே அதான் பரிசோட வந்துட்டேன் என்று தனக்கே உரிய கலகலப்பு வாழ்த்துக்களுடன் பார்த்திபன் கொடுக்க, அதை வாஙகிக்கொண்டாராம் விஷால்.