1980களில் ஹீரோக்களாக அறிமுகமாகியோ, ஹீரோக்களாக வளர்ந்தவர்களில் பெரும்பாலானோர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மாறிவிட்டனர். சிலர் நடிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவர் மட்டுமே இன்னமும் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். சரத்குமார் இப்போதுதான் ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக், மோகன் இருவரையும் திரையுலகம் பக்கமே பார்க்க முடிவதில்லை. அர்ஜூன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி நடிக்கும் ‘ஜெய்ஹிந்த் 2’ மெதுவாக வளர்ந்து வருகிறது.
‘கடல்’ படத்தில் திடீரென வில்லனாக நடித்த அர்ஜூன் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக ஒரு தெலுங்குப் படத்தில்தான் வில்லனாக நடிக்கப் போகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் இயக்குகிறார். அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் வில்லன் நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறதாம். அர்ஜூனைப் போலவே மற்றொரு தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவும் வில்லனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ‘தாண்டவம்’ படத்தில் வில்லனாக நடித்தவர்தான் இந்த ஜெகபதிபாபு.
ம்ம்ம்..வில்லனாக நடித்து ஹீரோவாக மாறியவர்கள் நிறைய உண்டு, இப்போது அப்படியே தலைகீழாக நடக்க ஆரம்பித்துவிட்டது.