மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

குஷ்புவால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வாயை வைத்து சும்மா இல்லாமல் கற்பை பற்றி தப்பாக பேசி பல பேரிடம் திட்டுகளையும், அவமரியாதையும் பெற்று கொண்டவர்.

அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கலைஞருக்கு வலது கை போல் செயல் பட்டார். பின்பு ஆட்சி மாறிய பிறகு சினிமா தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

சினிமாவை பற்றியும் அரசியல் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உளறி ரசிகர்களிடம் மொக்க வாங்கவது இவரின் வழக்கம். தற்போது மறுபடியும் ஒரு அனல் பறக்கும் விஷயத்தை பற்றி அவதுறாக பேசியுள்ளார் குஷ்பு.

அதாவது திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதில் தவறில்லை எனும் தொனியில் நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் மற்றும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வன்முறை காட்சிகள், சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் இருப்பது போன்றவற்றுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஒரு நடிகர் நல்லது செய்யும்போது, அதனை யாருமே பின்பற்றுவது இல்லை. ஒரு நடிகர், ஏழைகளுக்கு உதவுவது, நன்கொடைகளை வழங்குவது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றை செய்கிறார். அதையெல்லாம் யாரும் பின்பற்றாதபோது, சிகரெட் பிடிக்கும் விஷயத்தை மட்டும் கருத்தில்கொள்வது எந்த வகையில் சரி?” என்று கருத்துகளை பதிந்துள்ளார்.

இது பற்றி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல பேர் குஷ்புக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்த வந்த வண்ணம் உள்ளனர்.