கவிஞர் வைரமுத்து எழுதி 2012-ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் உலகப்போர்’ நாவல் அண்மையில் வெளிவந்த உலகத் தமிழ்ப் படைப்புகளில் சிறந்ததாக மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதனாலும், மொழிவளம் -வெளிப்பாட்டு உத்தி – உழவியல் வாழ்வை ஊடறுத்துச் சொல்லும் உளவியல் – இனிவரும் நூற்றாண்டு எதிர்கொள்ளவேண்டிய கருதுகோள் என்ற சிறப்புகளாலும் “மூன்றாம் உலகப்போர்’ சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நடுவர் குழுவர் குழு அறிவித்திருக்கிறது.
செப்டம்பர் 5-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசினைப் பெற்றுக் கொள்கிறார்.
வாழ்த்துகள் கவிஞரே! இந்த சர்வதேச விருது ‘நோபல்’ பரிசு போன்று அமைய அதற்கான வழி முறைகளை டான்ஸ்ரீ சோமா அவர்கள் ஆராய வேண்டும்.
அருமை
வாழ்த்துகள். தமிழ்மொழி ஏணியின் வழி புகழ் பெற்றோர் பலர். பெரும் செல்வந்தர் ஆனவர் சிலர். அதில் இவரும் ஒருவர்.
மூன்றாம் உலகப்போரின் கதாநாயகன் ,வைர கவிஞர்க்கு வையக விருது ,எதற்கு பெருமை காவியத்ற்க்கா , இல்லை விருதிற்க்கா ,விடைஇல்லாமல் போனதே ,தென்னகத்து கவிஞர்க்கு மேலும் ஒரு மணிமகுடமே .
அரசியலில் வெண்சாமரம் வீசும் வைரமுத்துவை விட இலக்கியம் பேசும் வைரமுத்து தேவலாம்…வாழ்த்துக்கள்
2000 ம் ஆண்டில் இந்த மூன்றாம் உலகப போர் புத்தகத்தை வாங்கி இரண்டு முறை படித்தேன்… ஒன்னும் விளங்கவில்லை ? பரிசுக்கு சிபாரிசு செய்த கூட்டம் விமர்சனம் எழுதினால் பார்ப்போம்.
இதுவரை தமிழர்நாட்டில் கூட யாரும் இந்த நாவலை யாரும் பெரிதா பேசவில்லை.நம் நாட்டு இலக்கிய அறிஞர்கள், அறிவர்கள் மெச்சிக்க செய்த இதை மீண்டும் ஒருமுறை இன்று முதல் படித்து பிறகு விவாதிப்போம். அதுவரை மீசை கவிஞனுக்கு வாழ்த்துகள்.
இதற்கிடையில் ” THE THIRD MILLENNIUM ” எனும் ஆங்கில நூலொன்றை படித்தேன்…அதை Brian stableford and David Langford இருவரும் எழுதி இருந்தனர். அதில் “”” The history of mankind stretches back for eight hundred millennia, to that uncertain era…when Homo sapiens gradually evolved from Homo erectus.Through more then seven hundred fifty of those millennia,alterations in human conditions were so slow as to be imperceptible. We can speak of the last 1000 years as the third millennium not simply because of the dating system…… என்று எழுதிக்கொண்டே போகிறார். ஆர்வம் இருந்தால் Alfred A . Knof , Inc பதிப்பாளரை தேடுங்கள்.
மூன்றாம் உலகப்போர் எங்கு,,,, எப்போது ஆரம்பமாகும் என்று உலக மக்கள ஆவலுடன் காதுள்ளனர் ஏன்? என்று கவிஞர் சொல்லவில்லை!