தொடரும் பிரச்சனை! கத்தி படத்துக்கு தடை வருமா?

vijay_05விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் தகவல்களை விட, அந்த படத்திற்கு எதிரான பிரச்சனைகள் அதிவேகமாக வெளியாகிவருகின்றன. விஜய் திரைப்படம் என்றாலே பிரச்சனை என்கிற நிலை சமீபகாலமாக பல பிரச்சனைகளைக் கடந்து வெளியாகும் விஜய் படங்களிலிருந்து தெரிகிறது.

விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்திற்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் மருமகனின் நிறுவனமான ‘லைக்கா மொபைல்ஸ்’ தயாரிக்கிறார்கள் என்பதும் ஒன்று. தற்போது உருவாகிவரும் கத்தி திரைப்படத்தையும் அதே ‘லைக்கா மொபைல்ஸ்’ நிறுவனத்தினர் தயாரிப்பதால் இந்த பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஈழ ஆதரவாளர்கள் பலரும் ’இந்த தகவல் குறித்து சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் அமைதியாக இருக்கிறோம். லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவிற்கும் தொடர்புகள் இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்தால் படம் வெளியாகும்போது எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்’ என்று கூறியிருக்கின்றனர்.