அஞ்சான் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ருசிகர தகவல் வந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பெங்களூர் மாநிலங்களில் மட்டும் இதுவரை 14.5 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 11.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ரூ 22.82 லட்சமும், இங்கிலாந்தில் 41.59 லட்சமும் வசூல் வந்துள்ளது என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.
ரஜினி படத்திற்கு பிறகு முதல் நாள் வசூல் அதிகம் வருவது அஞ்சான் படத்திற்கு தானாம்.
எவன் அப்பன் வீட்டு காசு ,,தமிழனும் தமிழன் பணத்தை சூரையாடுகிறான்
அஞ்சான் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது. அப்படின்னு நீங்கதான்டா சொல்லுறேங்க ! பாத்தவன் சொல்லறான் ” இப்பதான் நல்லாவே தூக்கம் வருது ,கொஞ்ச நாளா தூக்கம் இல்லாம ரொம்ப கஷ்ட பட்டேன் என்று “!
மச்சான் நீ சூப்பர் ஓர் SUPER
அஞ்ஞான் பட வசூல் அபாரம் என்று வரும் தகவலைப் பார்த்தால் ரசிகர்களுடைய ரசனை இவ்வளவு மட்டரகமாக இருகின்றதே என்று வேதனை பட வைக்கிறது. படத்தப் பார்த்த நான் மிகவும் நொந்து கொண்டேன். ஒரு குப்பையை திரையில் காட்டி பணம் சேர்க்கிறார்கள். இரண்டு ஒன்றாம் நம்பர் ரவுடிகளின் பழி வாங்கும் படலத்தை கதையாக்கி காசு பண்ணப் பார்க்கிறார்கள் .பத்து பதினைந்து ரௌடிகளை கொன்ற கதநாயகன் போலீஸ் கமிஷனருடைய மகளை
காதல் பண்ணிகிறார். அந்தப் பொண்ணும் சூரியாவுக்கு தெரியாமலே அவருக்கு பணிவிடை செய்கிறாரம் . அதுவரையில் போலீஸ் கமிஷனர் காதில் பூச்சுற்றிக் கொண்டு தேசாந்திரம் போய்விட்டாரோ ? இது போன்ற தேவையில்லாத கதையில் ஒட்டாத வன்முறையை புதிய தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி தமிழ் சினிமாவை சீரழிக்கிறார்கள். காக்க காக்க சாயலை காப்பியடித்து சூரியாவை புதிய ரவுடியாக காண்பித்திருகின்றார்கள் . முன்னது சூரியன் என்றால் பின்னது அதன் ஒளியை பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடிதான். மும்பாய் போலீஸ் பே பே தானா?
எல்லாரும் போயி மலேசிய படமான மைந்தன் படத்திற்கு ஆதரவு கொடுப்போம் வாருங்கள்