சந்தானத்தை கழட்டி விட்ட அபிமான ஹீரோக்கள்!

santhanamAவடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தவர் சந்தானம். அவர் காமெடியனானபோது காமெடி கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வந்ததால், சந்தானத்திற்கு மவுசு கூடியது. முக்கியமான முன்னணி ஹீரோக்களே அவரது கால்சீட்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறிப்பாக, ஜெயம்ரவி, ஆர்யா, விஷால், ஜீவா உள்பட பல ஹீரோக்கள் தங்கள் படங்களில் சந்தானத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அதனால் சந்தானத்தின் சம்பளம் அவர்களை விட அதிகமானது. ஆனால், இப்படி படங்களின் வியாபாரங்களை தீர்மானிக்கிற இடத்தில் இருந்து வந்த சந்தானத்துக்கு ஹீரோ ஆசை தலைதூககியதன் விளைவு இப்போது அவரது மார்க்கெட் அவுட்டாகிக் கிடக்கிறது.

கைநிறைய படங்கள் வைத்திருந்த சந்தானம், இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய மூன்று படங்களைத்தான் வைத்திருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப்பிறகு அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொன்னவர்கள் இப்போது ஓடிவிட்டார்கள். அதனால் ஹீரோ ரூட்டையும் தொடர முடியாத சிக்கில் சிக்கியிருக்கிறார் சந்தானம்.

இந்த நிலையில், தனது அபிமான ஹீரோக்களான நட்பு வட்டாரங்களை மீண்டும் சந்தானம் அணுகியபோது, அவர்களும், உன் இடத்துக்கு வேறு காமெடியன்களை வைத்து பில்லப் பண்ணி விட்டோம் என்று கைவிரித்து விட்டார்களாம். அதனால் பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருந்ததை விட்டு விட்டேனே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் சந்தானம்.

சந்தானத்தை வீழ்த்துகிறார் சூரி!

santhanam-sooriவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.

தற்போதைய நிலவரப்படி, லிங்கா, அரண்மனை, ஐ, நண்பேன்டா என சில மெகா படங்களில் மட்டுமே சந்தானம் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவரது சம்பளமும் தற்போது ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பதுதான். நான் ஹீரோவாகி விட்டேன் அதனால் பழைய ஞாபகத்தில் என்னிடம் வராதீர்கள் என்று அவர் எக்குத்தப்பாக பேசுவதால், பட்ஜெட் தாங்காது என்று அவரது அபிமான டைரக்டர்களே சூரியை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் சந்தானத்துக்கு வர வேண்டிய படங்களெல்லாமே இப்போது சூரிக்கு பின்னால்தான் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த நிலையில், சந்தானத்தை வீழ்த்த இதுதான் சரியான தருணம் என்று நினைக்கும் சூரி, சந்தானம் தான் நடித்த எந்த படத்தின் ஆடியோ விழாக்களுக்கும் செல்லாத நிலையில், இவரோ, தான் அவுட்டோர்களில் இருந்தாலும் ஆடியோ விழாக்களில் அவசியம் ஆஜராகி விடுகிறார். அதோடு, அதற்கான போக்குவரத்து செலவை கூட தயாரிப்பாளர்களிடத்தில் கேட்பதில்லை. சொந்த செலவிலேயே வந்து செல்கிறார் சூரி. ஆக படஅதிபர்கள் ம்த்தியில் சூரியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.