2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள் , அண்ணன் பிரபாகரன் தம்பிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
தேவையற்ற் ஆர்ப்பாட்டம். அறிந்தவர்களும் அறிவாளிகளும் மௌனித்திருக்க இவர்களின் ஆர்பட்டத்தில் எங்கோ ஓர் மூலையில் கோளாறுகள் தெரிகின்றன. மற்ற மொழிக்காரர்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு இப்படியெல்லாம் தொல்லைகள் இல்லை. ஏன் இந்தத் தமிழன் ந்டிக்கும் திரைப்படங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தொல்லைகள் உருவாக்கப்படுகின்றன. இப்படியே தொடர்கதையாகிப்போனால் இருக்கின்ற இரண்டு மூன்று தமிழ்க் கதானாயகர்களும் திரைபடங்களில் இல்லாமல் போஇவிடுவார்கள்.
இவர்கள் எதைத் தெரிந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள். நம்முடைய அப்பனையே தாய் சொல்லித்தான் தெரிகிறது நமக்கு..அதற்காக ஆராய்ச்சியெல்லாம் பண்ணிக்கொண்டிருக்க முடியுமா என்ன?
தெரிந்து தான் எழுதுகிறீர்களா நண்பரே.
தமிழக சினிமாக்காரர்களுக்கு ஈழப் போராட்டம் தான் கிடைத்ததா? அதைக் கொச்சைப் படுத்துவது தான் ஒரே வேலையா? சிங்களைக் கைகூலிகளும் சிங்கள அரசும் பணம் கொடுத்தால் தமிழர்களுக்கு எதிராக எதையும் சினிமா மூலம் சொல்லி விடலாமா?
சினிமாக்காரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டம், பாலியல் கொடுமைகள்,மது ஒழிப்பு, இஸ்லாமிய தீவிரவாதிகள், வீரப்பன் ,பின்லாடன், இப்படி எத்தனை இருக்க ஈழத் தமிழர்கள் போராட்டம் தானா கிடைத்தது. அதைக் கூட கொச்சைப் படுத்தாமல் எடுக்க கூடாதா?
தமிழனாய் சிந்தியுங்கள். சினிமாவுக்காய் சிந்திக்காதீர்கள்.
இளம் பாலகனின் இதயம் துளைத்த இனவாதத்தின் குண்டுகள் ,காலத்தால் அழியா இனசரித்திரம் ,இனவாதத்தின் கோர முகத்தின் அடையாளம் ,ஈழ விடுதலைப் பார்வையின் அடையாளம் புலிப்பார்வை,இனவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட இனவாதத்தின் உன்னத சாட்சியின் தமிழ் இன விடுதலையின் சான்று ,பாலசந்திரனின் கடைசிப் பார்வை ,ஈழ விடுதலையின் பார்வை ,விடுதலைக்கேட்க்கும் தமிழ் தேசிய இனத்தின் பார்வை ,புலிப்பார்வை ,பேறுபெற்ற இனப்பார்வையை ,பணப் பார்வையாக மாற்றி விடாதீர்கள் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
சந்தர்பவாதிகள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக / தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.அய்யா அதுதிராவிட பூமி அப்படித்தான் நடப்பர்,இந்தியாவில் பல மாணிலங்கள் உள்ளன இல்லையே இவர்போன்று.கேட்டால் சீர்திருத்தம் என்பர்,அயல் நாட்டு கலாச்சாரத்தை மக்கள் மனதில் புகுத்தி சீர்கேடு,தமிழ் மொழி எதற்கும் பயன்படாது போன்று,கலாச்சார அழிவுக்கு முகவரி காட்டியவர் திராவிடர்கள்.ஈழதமிழர் அங்கே போரில் அழிகின்றனர் ஆனால் இங்கே தமிழ்நாட்டு தமிழர்கள் துரோகி கருணானிதியை தேர்தலில் வெற்றிப் பெறசெய்தனர்.பிறபாகரன் மகனை போர் உடையுடுத்தி,போரில்,சண்டையில் மாண்டதாக,கொல்லப்பட்டதாக சித்தரிக்கும் சினிமா தயாரிப்பாளர்,நடிகர் மற்றும் சம்பந்தபட்டவர்களுக்கு தகுந்த பாடம் புகுட்டியிறுக்கவேண்டும்.பணத்துக்காக எதுவேனுமானாலும் செய்வரா,.இதற்காக போராட்டம் செய்யச் சொல்லிப்பாறுங்கள் நடவாது.ஒரு பெரியவர் சொல்லுகிறார்,நாம் குடும்பத்தை பொருத்த மட்டும் சிறந்த வீரர்கள்,பொதுவில் என்ன நடந்தாலும் கண்டுக்கொள்ளமாட்டோம் ஆதலால் எதிரிகள் நம் தெருவில்(இலங்கையில்) பயமின்றி கைகோர்த்து நடந்தார்கள் யென்று,மிக வருத்தத்துடன்.இழங்கை சுதந்திரம் போன்ற வார்தைகள் வெறும் விளம்பரத்துக்காக பேசும் வியாபார நுனுக்கமே.கல்லூரி மாணவர்களே உண்மையில் போராடுபவர்கள்.வாழ்க நாராயண நாமம்.
முதலில் படத்தை பார்த்த பிறகு அரிஉரை கூறுவது நல்லது.
நாம் எதையும் கண்ணால் பார்க்கவில்லை. நமக்கு எதுவுமே தெரியாது. ஊடகங்கள் வழியாகவும் காணொளிகள் வழியாகவும்தான் நாம் தெரிந்துகொண்டிருக்கின்றோம். அந்த வலிகள் எப்படி இருக்கும் என்பதையும் நாமும் உணர்கின்றோம். ஒரே நிகழ்வை . பல கோணங்களில் ஊடகங்களிலும் காணொளிகளிலும் அறிகின்றோம். தனி மனித்னாக எந்த உண்மையையும் புரட்டிப்போட்டுவிடமுடியாது. நாம் உண்மை என்று ஒரு விடயத்தில் முடிவு எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பின்னால் பல பொய்கள் வரிசைகட்டிக்கொண்டு வலம்வருகின்றன.
சக்தி அவர்களின் கருத்துக்கு நான் முரண்பாடனவன் அல்ல. ஆனால், எல்லா போராட்டங்களிலும் ஆர்வக்கோளாறுகள்தான் மேலோங்கி உள்ளனவே தவிர உண்மைகள் தெரியவில்லை என்பதுதான் என் கருத்து. நான் சினிமாவுக்கு வக்காளத்து பேசவில்லை. பல சினிமாக்கள் இன்றைய தலைமுறைகளை சிந்திக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இதுபோன்ற ஆர்பாட்டங்களினால் இன்னொரு தமிழனும் அடிபட்டுப் போகின்றான் என்பதே என்னுடைய பார்வை.