“இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை துடைக்க இங்கிருந்து குரல் கொடுக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் போராடுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் நாமே கதி என்று நம்பி நம் நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகளை எப்படி வைத்திருக்கிறோம்.
இலங்கை அரசை போலவே முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறோம். அவர்களை சந்தேக கண்ணோடு பார்க்கிறோம். தொப்புள்கொடி உறவு என்று சொல்கிறோமே இங்கிருக்கும் இலங்கை தமிழனுக்கு ஒரு வாய் சோறு கொடுத்திருப்போமா. அதை சொல்கிற, அவர்கள் வாழ்க்கையை சொல்கிற படம்தான் ஆனந்த மழை” என்கிறார் இயக்குனர் சுப.தமிழ்வாணன்.
இயக்குனரே ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அதுதவிர ஜெய் ஆனந்த், களஞ்சியம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், தீபிகா என்ற புதுமுகம் ஹீரோயின். ஸ்டீபன் ராயல் இசை அமைத்திருக்கிறார், கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
நாம் இன்னும் இந்தத் திரைபடத்தைப் பார்க்கவில்லை. ஆனால், மேலே, சொல்லப்பட்டிருப்பதில் பல உண்மைகள் தெரிகின்றது. பக்கத்து வீட்டுக்கரனிடம் ஒட்டு இல்லை…உறவு இல்லை. எங்கோ இருப்பவனுக்காக அனுதாபப்படுகின்றோம். என்ன நியாயம்…எது நியதி.? எனக்குப் புரியவில்லை.
இத் உங்கள் பக்கத்து நியாயம். இன்னொரு பக்கம் இருக்குமே!
போர் முடிந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அகதிகளை தொடர்பு கொண்டு அவர்களை அவரவர் பூர்விக இடங்களுக்கு அனுப்பி புதுவாழ்வு மலரச்செய்ய வேண்டும் .இனிமேல் அகதிகளாக இருக்ககூடாது.