காஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவாலாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் முனி – 3 (கங்கா).
இப்படத்தின் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். வருகிற 4 தேதி முதல் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. அதுவும் 20 நாட்கள் க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது.
கங்கா படம் தொடங்கப்பட்டு வருடக்கணக்காகிறது. ஏன் தாமதம்? கங்கா படத்தை எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் சொல்கிறார்…“இடையில் சிலமாதங்கள் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் இந்த காலதாமதம். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதங்கள் தேவைப்படுகிறது.
அது முடிந்த பிறகு கங்கா படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம். காஞ்சனா போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது.” என்கிறார் லாரன்ஸ்.