துப்பறியும் ஆனந்தன் படத்தில் நடிக்க முடியாது என அறிவித்து சூர்யா கைவிட்ட பிறகு திக்குத்தெரியாமல் திகைத்து நின்றார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்போது, அவருக்கு கை கொடுத்த அஜித், ஏ.எம்.ரத்னத்தை கையைக்காட்டிவிட்டு கால்ஷீட்டும் கொடுத்தார்.
அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார் கௌதம் வாசுதேவ் மேனன். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.
அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளில் கௌதம் வாசுதேவ் மேனன் பிஸியாகிவிட, இன்னொருபுறம் சிம்புவும் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இது நம் ஆளு படத்தில் நடிக்கப்போய்விட்டார். இந்நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தன.
உண்மை என்ன?
கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் என்ன தெரியுமா? சிம்பு நடிக்கும் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் கைவிடவில்லையாம். அஜித் நடிக்கும் படத்தை முதலில் முடித்துவிட்டு வருவதாக சிம்புவிடம் முறைப்படி சொல்லிவிட்டுத்தான் தல 55 படத்தை இயக்கத் தொடங்கினாராம்.
சிம்புவை வைத்து இயக்கிய படத்திற்காக இதுவரை கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே எல்லா பாடல்களின் டியூன்களையும் போட்டுக் கொடுத்துவிட்டாராம். இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றாலே படம் முடிந்துவிடுமாம். எனவே தற்காலிகமாகவே படத்தை நிறுத்தி இருக்கிறார்களாம்.
இவ்வளவு பெரிய தொகையை செலவு பண்ணிவிட்டு, அந்தப்படத்தை எப்படி ட்ராப் பண்ண முடியும்? அஜித் படம் முடிவடைந்ததும் சிம்பு படத்தின் படப்பிடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் தொடங்குவார் என்று சொல்கிறது கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு.
சிம்பு ஊஊஊஊஊ……………….