நடிகர் ஆர்யா தன் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள அமர காவியம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நடிகராக அறிமுகப்படுத்திய நான் பட இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். அமர காவியம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இசைவெளியீட்டுவிழாவுக்குப் பிறகு அமர காவியம் படத்தின் பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே அமர காவியம் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கிறார் தனது ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் ஆர்யா.
அமர காவியம் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதை முன்னிட்டு படத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யலாமா என்ற எண்ணத்தில் கடந்த வாரம் மீண்டும் அமரகாவியம் படத்தை பார்த்துள்ளனர். படம் பார்த்த அனைவருமே ஒட்டுமொத்தமாக சொன்ன கருத்து… க்ளைமேக்ஸ், படம் பார்ப்பவர்களை உறைய வைக்கும் என்பதுதானாம். இந்தக் காட்சியை தான் கேள்விப்பட்ட 1982ல் நடந்த, ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்தே உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் ஜீவா ஷங்கர்.
இந்த உண்மை சம்பவத்தை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக வைக்க வேண்டும் என்பதற்காகவே அமரகாவியம் படத்தின் கதை 80களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம். க்ளைமாக்ஸ் பற்றி இப்ப்டியொரு பாராட்டு கிடைத்ததினால் அமரகாவியம் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜீவா சங்கர்.
உருப்பிடா தமிழ் சிநிமாகாரணுங்க ,அண்ணன் தம்பியை விட்டால் வேற ஆள் கிடைக்கிளையாம்??????????????