அதிக விலைக்குப் போகுமா…’ஐ’ டப்பிங் ரைட்ஸ்…!

aiiஷங்கர் இயக்கும் படம் என்றாலே பிரமாண்டம் கண்டிப்பாக இருக்கும். இதை அவருடைய முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்திலிருந்தே தொடர்ந்து வருகிறார். ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களிலேயே மிகப் பிரமாண்டமான படமாக ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ படம்தான் இருந்தது.

அது மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகவும் அந்தப் படம்தான் இருந்தது. ஆனால், அந்தப் பெருமைகளையெல்லாம் ‘ஐ’ படம் முறியடித்திருக்கிறது. ‘ஐ’ படத்தின் தயாரிப்புச் செலவுகள் 180 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்ல மேக்கப், ஆடைகள், படமாக்கப்பட்ட இடங்கள், அரங்குகள் என தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காத அளவிற்கு ‘ஐ’ படத்தில் இருக்கும் என படத்தில் பணியாற்றிவர்கள் மூலம் செய்திகள் கசிந்துள்ளன.

தற்போது, படத்தின் வியாபாரப் பேச்சுகள் ஆரம்பமாகிவிட்ட நிலையில், இதுவரை ரஜினிகாந்த் படத்துக்காக நிர்ணயம் செய்யப்பட்ட விலைகளையெல்லாம் ‘ஐ’ படம் கடந்து வருகிறதாம். தமிழ் சினிமாவில் இதுதான் இதுவரையிலான மிகப் பெரிய வியாபாரம் என ‘ஐ’ படத்தைக் குறிப்பிடுகிறார்கள். அந்த விதத்தில் ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை, ஒரு சராசரியான நேரடி தெலுங்குப் படத்தை விட மிகவும் அதிகமாக பேசப்பட்டு வருகிறதாம்.

‘ஐ’ படத்தின் தெலுங்கு உரிமை 30 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இது ‘எந்திரன்’ படத்தின் டப்பிங் உரிமை விலையை விட 3 கோடி ரூபாய் அதிகமாம். ‘எந்திரன்’ டப்பிங் உரிமை 27 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.

இந்த டப்பிங் விலையைக் கண்டு தெலுங்குத் திரையுலகம் மிரண்டு போயுள்ளதாம். அந்த அளவிற்கு விலை கொடுத்து வாங்கப் போகும் தெலுங்குத் தயாரிப்பாளர் யார் என்பதுதான் இப்போது அங்குள்ள பேச்சாக உள்ளது. ‘ஐ’ படத்தின் செய்திகள் போகப் போக ‘ஆஆஆஆ…’வென ஆச்சரியப்படும் அளவிற்கு அமையும் போல் உள்ளது.