இந்தியாவின் ஸ்பீல்பெர்க் ஷங்கர்தான்! -சொல்கிறார் சுரேஷ்கோபி

sureshgobiமலையாள சினிமாவில் மோகன்லால்- மம்மூட்டிக்கு அடுத்த ரேஞ்சில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் ஆக்சன் கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கும் சுரேஷ்கோபிதான் கேரளாவின் ஆக்சன் கிங் நடிகர் ஆவார். சினிமாவில் அரசியல்வாதிகளின் அநியாயங்களை தட்டிக்கேட்கும் அவர், நிஜத்திலும் அரசியல்வாதிகள் செய்யும் தவறான விசயங்களை துணிச்சலாக தட்டிக்கேட்டு வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் கேரளா முதல்வர் சொன்ன ஒரு கருத்து தவறாக இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டார் சுரேஷ்கோபி.

ஆக, சினிமா மட்டுமின்றி நிஜவாழ்க்கையிலும் ஹீரோவாக திகழும் அவர், ஏற்கனவே தமிழில் சமஸ்தானம், தீனா உள்பட சில படங்களில் நடித்தவர், தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமாரும் வில்லன்தான் என்றாலும், சுரேஷ்கோபி முதன்மை வில்லனாக நடித்துள்ளாராம்.

அதனால் ஐ படத்துக்காக உள்நாடு, வெளிநாடு என அதிக நாட்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட சுரேஷ்கோபி, இப்போது ரைக்டர் ஷங்கரின் அபரிவிதமான திறமையைக்கண்டு வியந்து போனாராம். இன்றைய டெக்னாலஜியோடு போட்டி போடும் ஆற்றல்தான் ஷங்கரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்று கூறும் சுரேஷ்கோபி, எனது பார்வையில் அவர்தான் இந்தியாவின் ஸ்பீல்பெர்காக தெரிகிறார் என்று ஷங்கரின் திறமைகளை புகழ்ந்து பேசி வருகிறார்.