மோகன்லால்–மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில் கமல், கவுதமி ஜோடியாக நடிக்க ரீமேக் ஆகிறது. தமிழில் இப்படத்துக்கு பாபநாசம் என பெயரிட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் நாங்குநேரி, பாபநாசம் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் கமல் ஓய்வு நேரத்தில் அப்பகுதிகளில் உள்ள ஆன்மீக வாதிகளையும், சமூக சேவகர்களையும் வீடு தேடிச் சென்று சந்தித்து வருகிறார்.
நாங்குனேரியில் படப்பிடிப்பு நடந்த போது அங்குள்ள தோத்தாத்ரி நாதர் வைணவ மடத்துக்கு சென்று அங்குள்ள ஜீயரை சந்தித்தார். அப்போது சட்டை அணிந்து விபூதியும் பூசி இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.
பின்னர் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளரான தொ.பரமசிவனை சந்தித்து பேசினார். தென்காசியில் படப்பிடிப்பில் இருந்த போது அப்பகுதியில் வசிக்கும் சமூக சேவகர் ராம கிருஷ்ணனை சந்தித்தார். இவர் ஆய்க்குடி அமர்சேவா என்ற தொண்டு நிறுவனம் நடத்துகிறார். இங்கு ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பள்ளிகளில் படிக்கின்றனர். ராமகிருஷ்ணனிடம் கமல் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.
பாபநாசம் படத்தின் சுட்டிங்கை அடுத்து கேரளாவில் நடத்த உள்ளனர். இதற்காக படக்குழுவினர் அங்கு பயணக்கிறார்கள்.
கமல் இப்படத்தில் வேட்டி சட்டை அணிந்து நடிக்கிறார். இதனால் எப்போதும் வேட்டி சட்டையுடனேயே காணப்படுகிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகும் வேட்டி சட்டையில் தான் இருக்கிறார்.
நல்ல நடிகன் ,,