விஜய் நடித்து வரும் கத்தி படத்தை ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இன்னமும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில், லைகா மொபைல் நிறுவனத்தின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் 1989லேயே இலங்கையில் இருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி விட்டேன். எனது உறவினர்கள் அனைவருமே அந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். அதனால் இலங்கைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இப்போது இல்லை.
மேலும், நானும் தமிழன்தான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள்தான் என்னை எதிர்க்கிறார்கள். அதோடு, நான் ராஜபக்சேவுடன் இணைந்து ஒரு தமிழ்ப்படத்தை தயாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதோடு, நான் ஏற்கனவே தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்றொரு படத்தை தயாரித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த படத்தை யாருமே எதிர்க்கவில்லை.
ஆனால் இப்போது கத்தி படத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பிரபலங்கள் இருப்பதால் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ள சுபாஸ்கரன் அல்லிராஜா, அடுத்தபடியாக சீமான் இயக்கத்தில் சூர்யாவைக்கொண்டு தான் படம் தயாரிக்கப்போவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.