உயர்திருகாவல்துறைஆணையாளர்அவர்கள்,
சென்னைமாநகரக்காவல்துறை
சென்னை.
அன்புடையீர் வணக்கம்.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினர் 90% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனமான லைக்கா, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
ஏற்கெனவே இனப்படுகொலை போர்க்குற்றத்துக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட இந்த தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம், கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் என 65 இயக்கங்களின் பிரதிநிதிகள் கடந்த மாதம் 19- ந்தேதி கோரிக்கை விடுத்தோம்.
அதன் பின்னர் செப்டம்பர் 6-ந் தேதியன்று 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள், கத்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை லைக்கா தயாரிப்பில் வெளியிடப்படுவதை தொடர்ந்து உறுதியாக எதிர்க்கிறோம். இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அன்று. லைக்கா வெளியிடாமல் வேறு எந்த தமிழ்த் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதாயினும் கத்தி திரைப்படம் வெளியிடுவதில் நமக்கு மறுப்பு இல்லை என்று அறிவித்திருந்தோம். ஆனாலும் ஒட்டுமொத்த மொத்த தமிழகத்தின் வேண்டுகோளை
ஏற்காமல் லைக்கா நிறுவனத்தாலேயே கத்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை இயக்குநர் முருகதாஸோ நடிகர் விஜயோ ஏற்கவில்லை.
தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இலங்கையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குறிப்பாக ராஜபக்சே குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம் தமிழகத்தில் நுழைவதை அனுமதிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போது லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிராக, ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்கு எதிராக லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரித்து அதன் பாடல் வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டிலேயே நடத்துவதையும் திரைப்படத்தை வெளியிடுவதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ்நாட்டின் தலைநகரிலேயே அந்த நிறுவனம் தனது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்துவது மற்றும் கத்தி திரைப்பட வெளியீடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டியது தங்களின் கடமை என்பதை 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பாகிய நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழகத்தின் உணர்வுகளை மதித்து லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வையும் கத்தி திரைப்பட வெளியீட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தி.வேல்முருகன்,
ஒருங்கிணைப்பாளர்
தமிழர்வாழ்வுரிமைக்கூட்டமைப்பு
இந்தப் படத்தையோ ‘இது மாதிரி’ சிக்கலில் மாட்டிக்கொண்ட பிற படங்ளையோ திரைக்கு வராமல் தடுத்து நிறுத்த முடியும் என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், திரையேறிய பின் இந்தப் படத்தை ஓடவிடாமல் செய்ய (அதாவது திரையரங்கை விட்டு ஓட வைக்க) என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தானே இந்தப் படத்தைப் பார்ப்பார்கள்? இந்தப்பட விளம்பரங்கள் வரும் தினசரிகளில் எதிர் விளம்பரங்கள் – உண்மைத் தமிழர்கள், பச்சைத் தமிழர்கள் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் வையுங்கள். தற்காலிகமாக படத்தை வெளி வரவிடாமல் தடுப்பதால் சம்மந்தப்பட்டவர்களுக்கு பெருமளவில் நட்டமில்லை. ஆனால் படத்தை ஓடவிடாமல் தோல்வியடையச் செய்தால் பெருமளவில் பொருளாதார நட்டம் ஏற்படும். இதில் நடிகரின் ‘ரசிகன், விசுவாசி’ என்பதை விட தமிழனின் இன மானம் தான் முக்கியம் என்பதை அனைவரும் உணரச்செய்ய வேண்டும்.பிற இயக்குனர், நடிகர் நடிகையருக்கும் ஒரு பாடமாக இது அமையும். தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்ல ஆலோசனை கூறியுள்ளார் நாராயணன்.. படத்தை திரையில் சென்று பார்க்காமல் இருந்தால் போதுமே.. படம் படு தோல்வி காணும் ..! சாத்திய படுமா..?
கத்தி படத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கவேண்டும்.
அரசியல் அநாதைகளும் சினிமா அநாதைகளும் நாம் தமிழர் , தமிழர் தேசியம், தமிழர்வாழ்வுரிமைக்கூட்டமைப்பு போன்று புதுபுது அமைப்புகளை உருவாக்கி தாங்கள் குழம்பியது போதாது என்று உலக தமிழர்களை குழப்ப வந்துட்டாங்கய்யா !!!
திரு வேல்முருகன் அவர்களே, இந்த கட்டுரை முரணாக உள்ளது. ராஜபக்சே தமிழ் நாட்டுக்கு வருகிறான், மற்றும் சிங்களன் தமிழ் நாட்டுல ராணுவ பயற்சி எடுக்கிறான் அதை நிறுத்த துப்பு இல்ல, கத்தி படதத்தை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை. உங்களுடைய எதிர்ப்பு லைக்கா நிறுவனத்திடம் மட்டும் இருக்க வேண்டும். வீண் குழப்பம் வேண்டாம் அன்பரே.
தமிழன்தான் சினிமா பைத்தியம் பிடித்து அலைகிறானே. சினிமா ஸ்டார்களுக்கு கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் அறிவிலிகள் தானே இவர்கள். இவர்களாவது படத்தை புறக்கணிப்பதாவது. நம்பவில்லையென்ரால் பாருங்கள். தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது சுப்பர் படம் என்று சொல்லிக் கொண்டே வருவான் இந்த இனன்.
‘உண்மை சுடும்’ நண்பரே… அதிகம் எதுக்கு? உங்க கருத்துக்கு மேலே உள்ள கருத்தை படியுங்கள் போதும் – நாம் தமிழின் மேலும் தமிழ் இனத்தின் மேலும் எத்தனை பற்றுள்ளவர்கள் என்பது புரிந்துவிடும்
நண்பரே, வீண் கருத்துக்கும் வீண் விவாதத்துக்கும் நேரத்தை செலவு செய்யாமல், வேறு நல்ல காரியத்துக்கு செய்ய வேண்டும் என்பதே என்னுடய கருத்து.
Siva Kumar Rajaram wrote on 18 September, 2014, 16:03, கூறிய கருத்துடன் இன்னும் சேர்த்து கொள்ள வேண்டிய கருத்து :
தற்போதைய தமிழக நிலவரப்படி, நாம் தமிழர் , தமிழர் தேசியம், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் “இலங்கை பிரச்சனையை முன்னிறுத்தி” பல்கலை கழகங்களில் பயிலும் குறிப்பாக தமிழ் மாணவர்களை சீரழிக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
தமிழனின் மன நிலை எப்படி இருக்கு என்று சோதிக்கத்தான் இந்த திரைப்பட வெளியிடு ! எந்த நிலையிலும் பின் வாங்க கூடாது ! இதுபோல் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் விடுவார்களா ? மத்திய அரசே தடை போடும் ! சினிமா , திராவிட பைத்தியங்களுக்கு இது புரியாது !
இலங்கை பிரச்சினையை முன்னிறுத்தி ..மாணவர்களை சீரழிகின்றனர் ????? ஹிந்தி எதிர்ப்பை என்று கூறுவதை இதையும் மாணவர்களை நம்பி செய்கின்றனர் …உண்மை நிலை வேறு இன்று உள்ளது ஒரு புதிய தலைமுறை ..அரசியல் புளுகுகளை நம்ப இவர்கள் தயார் இல்லை