விக்ரம், எமி ஜாக்சன், நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் ‘ஐ’.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிஸர் நேற்று முன்தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. டீஸரைப் பார்த்த ரஜினி உள்பட பிரபலங்கள் பலர் ஷங்கரை வியந்து பாராட்டி வருகின்றனர். டீஸர் வந்ததில் இருந்து எல்லோரின் கவனமும் ‘ஐ’ படத்தின் மீது தான் இருக்கிறது.
மேலும் ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வந்த படங்களை விட தற்போது அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘ஐ’ படம் அமைந்துவிட்டது. முதலில் ஐ படத்தன் கதையை ஷங்கர் ரஜினியிடம் தான் சொன்னாராம். அதுவும் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பாகவே சொல்விட்டாராம். இந்த கதை ரஜினிக்கு அப்போதே மிகவும் பிடித்துவிட்டதாம்.
இருந்தாலும் தான் மாடலாக நடித்தால் சரிப்பட்டு வராது என்று கூறி அதில் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். ஒரு மாடலின் கடுமையான உழைப்பும், வேதனையும் தான் ஐ படம். இந்தப் படத்தில் விக்ரம் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ் சினிமா நல்ல முன்னேற்றம் காண வேண்டும் ,,உலகெங்கும் தமிழ் சினிமா பரவ வேண்டும் ,தமிழ் மொழி உலக மொழியாக அமைய வேண்டும் ,தமிழ் மொழி வளர எந்த மாநில நடிகர் காரணமாக இருந்தாலும் வரவேற்போம் .