மூடிய அறையில் “கத்தி” இசை வெளியீட்டு விழா! வெளியே முற்றுகைப் போராட்டம்! புதிய காணொளிகள் இணைப்பு!

katthiஇலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் “கத்தி” இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் “லீலா பெலஸ்” மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது.

லீலா பெலஸ் உல்லாச விடுதியைச் சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டு சிறப்புப் பாதுகாப்புடன் இசை வெளியீடு நடைபெற்றது. மூடிய அறையில் பெரும் பாதுகாப்புடன் கத்தி இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.

மறியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் பேரணியாக லீலா பெலஸ் விடுதியை நோக்கி நகர்ந்தபோது காவல்துறையினர் உள்நுழைய அனுமதிக்கவில்லை. விடுதிக்கான அனைத்து வீதிகளும் தடுப்புகள் போடப்பட்டு கால்துறையினரால் மூடப்பட்டன. தமிழீழ ஆதரவாளர்கள் உள்நுழைய முற்பட்டபோது, காவல்துறையினருக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

தமிழீழ ஆதரவாளர்கள் இசைதட்டு வெளியீட்டு நிழக்வுக்காக வைக்கப்பட்டிருந்த பதாதைகள் மற்றும் பனர்களை அடித்து நொருக்கியும் கிழித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன் லைக்கா நிறுவனத்திற்கு எதிராகக் கண்டனங்களையும் கோசங்களும் எழுப்பினர்.

இறுதியில் மறியலில் ஈடுபட்ட தமிழீழ ஆதரவாளர்கள் 500 பேருக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு  மண்டபம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பணத்தால் தமிழரை விலை பேசும் லைக்கா அல்லிராசா! விலை பேச முடியாத மாணவர் அமைப்புகள்! – உலக தமிழர் பாதுகாப்புமையம்

 

தனது பேட்டியின்  மூலம் தாய் தமிழ் மக்கள் முன் பணத்திமிருடன் அவர்பேசியபேச்சு, பணத்தைவைத்துக் கொண்டு எதுவும் செய்துவிடலாம் என்ற சிந்தனை- அதன் பின்னால்பணத்தின் மணத்தை கண்டு அதன் பின் ஓடியவர் புலம்பெயர்மக்களிடையேயும்உள்ளனர், அதேபோல்தமிழகத்திலும் இருப்பதாகதோன்றுகிறது.

ஆனால் இந்த பணம் எங்கே இருந்து வந்தது என்று அல்லிராசாவால் கணக்குகாட்ட முடியுமா?

ஏற்கனவே இந்தபணசூறையாடலில் சிறிலங்காவில் ஒரு கொலையே நடந்திருக்கிறது.

(கோடி பணத்தை எப்படிபெற்றார்- “லைக்கா நிறுவனம் மகிந்த அரசுடன் இணைந்து நூறுமில்லியன் டொலர் பணத்தைச்சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டேலீடர் என்ற ஊடகம் 2008 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தும் வேறு காரணங்களுக்காகவும் அந்த ஊடகத்தின் ஆசிரியர்ல சந்தவிக்கிரமதுதுங்க்க கொலை செய்யப்பட்டார்.

பின்னதாக 2009 ஆண்டில் மந்தனா இஸ்மையில் அதன் தொடர்ச்சியைப் எழுதியபோது அரசகூலிகளால்தாக்கப்பட்டார்.”)

டேவிட்கமேரோனின் கோன்செர்வடிவ்கட்சிதேர்தல்நிதி – கறுப்புபணம் – அல்லது கணக்கில்காட்டாத பணம் என்று ஒரு பிரச்சனை பிரித்தானிய பாராளுமன்றத்தில்வந்தது.

கனடா, மொரிசியஸ், இந்திய போன்ற நாடுகள் காமன்வேல்த் மாநாட்டை பகிஸ்கரித்த போது அதன் முக்கியச் போன்செர்ஆகினார்.

இதை கண்டும் காணாமல்புலம்பெயர் தமிழர்கள் அதை நாம்மறுக்கவில்லை, காரணம் இங்கேயும் பணத்தைகண்டு, இலவசத்தைகண்டு, மலிவுவிலையைகண்டுமயங்குபவர்களும்இருக்கிறார்கள்.

அதற்காக இன்று புலம்பெயர்தமிழர்கள் அமைதியாகஇருக்கவில்லை, இந்தப் பணத்திமிர்படைத்த அல்லிராசாவிட்கு எதிராக வேறுவிதங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.

கறுப்புபணம் என்கிறோம், ரத்தம்தோய்ந்த பணம்என்கிறோம் – அதுவந்தவழியைஅல்லிராசா சொல்வாரா! தனது 2 நாள் வருமானம் போதும் என்று எனது தாயாக உறவுகளுக்கு சவால்விடும் அல்லிராசா தமிழ் படம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

போதைப்பொருள்கடத்தல், வரிப்பணத்தைதிருட்டு போன்ற இன்னோரன்ன வழிகளில் குவியும் பணத்தை படம் தயாரித்து இலாபமீட்டுகிறோம் என்று கணக்குக்காட்டுவதற்காகவே பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மில்லியன் கணக்கில் சட்டவிரோதப் பணம் புழங்கும் தொலைத் தொடர்பு வியாபாரிகளான லைக்கா சினிமாத்தயாரிப்பில் ஈடுபடுவது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

லைக்கா என்ற பல் தேசிய வியாபார நிறுவனம் தமிழ்மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக் கூட வழங்கவில்லை என 2012 ஆம் ஆண்டில் கார்டியன் நாழிதழ் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையில்மக்களின்பணத்தைசுருட்டுவதில்லைக்காஈடுபட்டது.

லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக் கூட வழங்கவில்லை. லைக்கா மூன்று வருடங்களாக கோப்ரட் வரியக்கட்டாமல் ரோரிக்கட்சிக்கு நன்கொடை வழங்கி வருகிறது எனகார்டியன் நாழிதழ் தெரிவித்திருந்தது.

இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டு வதில்லைக்கா ஈடுபட்ட இதே நிறுவனம் கத்தி, கோடரி, அலவாங்கு என வரிசையில் சினிமா எடுத்து வரிப்பணத்தை கலைகலாச்சார வன் முறையாக மக்கள் மத்தியில் விதைக்கிறது.

இந்த நிலையில் லைக்காவிற்கு எதிரான போராட்டங்கள் ஜனநாயகமுற்போக்குசக்திகளால் புலம்பெயர்நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. கருத்தியல்தளத்திலும் செயற்பாடுகளாகவும் இப்போராட்டம்முன்னெடுக்கப்பட்டது, முன்னெடுக்கப்படுகிறது.

நாங்களும்புலம்பெயர் இனையதளங்களைபார்க்கிறோம்- எவரும் லைக்காவிற்கு விளம்பரம்செய்யவில்லையே ,  செய்ததாகதெரியவில்லை, செய்தவர்களும்தவிர்க்கிறார்கள், இதுவும் போராட்டத்தில் ஒரு வடிவம்தான்.

வேறுவித போராட்டங்கள் லைக்காவிட்கு எதிராக நடக்கிறது- அண்மையில் நடந்த விழாவில் லைக்காவிளபரத்தை தமிழர்கள் எதிர்த்தார்கள், லைக்கா விளம்பரங்கள் கிழிக்கப்படுகின்றன- விளம்பரம் ஓட்டுபவர்கள் தெருக்களில் பகலில் நடமாடபயப்படுகிறார்கள்.

அதிகபணம் கொடுத்து வேலைக்கு ஆட்களை அமர்த்துகிறார்கள்- ஆனால்சம்பளம் கொடுக்கமாட்டார்கள்- 2 நாள் வருமானத்தில் கத்தி படத்தை எடுக்ககூடியவர்கள் தொழிலாளர் சம்பளம் கொடுக்கமாட்டார்கள், அரசவரி கட்டமாட்டார்கள், மகிந்த போல் எலும்பு கூட்டு வியாபாரம் முலம் மக்களை பாதுகாக்க நினைக்கிறார்கள்.

விலைபேச முடியாத மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் முன் நாம் தலைவணங்கி நிற்கிறோம்.

தமிழ் நாட்டில் கடைசி நேரத்தில் பின் வாக்கிய விடுதலை சிறுத்தைகளுக்குஎன்னநடந்தது?

சுவிஸ் நாட்டுக்கு வந்த சீமானை எமது தேசிய கொடியுடன் மதிப்பளித்து அவருக்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடிவாழ்த்தினார்களே, அதே கட்சியை சேர்ந்த பொறுப்பான ஒருவர்கூறுகிறார் ” பாலசிங்கம் அண்ணாவும் சிறிலங்கா ஹெலிகோப்டேரில் பிரயாணம் செய்தவர்தானேஎன்று” எவ்வாறான கீழ்த்தரமானசிந்தனைகள். காலகட்டங்களை மறந்து பேசுகிறார்கள்.

டேவிட்கமேரோன் வாகனத்திலேயே யாழ்ப்பாணம் சென்றார், நவநீதம்பிள்ளை அம்மையாரும் தமது வேலைபளுவுக்கு இடையில்வாகனத்திலேயே பிராயணம் செய்தார்.

பணத்திமிர்பிடித்து அலையும் அல்லிராசாவையும் பாலசிங்கம் அண்ணாவையும் ஒப்பிட இவரின் அறிவு அல்லிராசாவின்பணத்தில் மூழ்கியதா?

அல்லிராசா உலகப்பணக்காரர்களில் எத்தினையாவது இடத்தில்இருக்கிறார்?

சமுதாயத்தில் விலைபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்- ஆனால் உண்மையான கொள்கையுடன் வாழ்பவர்கள் சிலரே.

அப்படியானவர்கள் இன்றும் தமிழகத்தில், சுயமரியாதைக்காக போராடுபவர்களை நாம்போற்றுகிறோம்.

இன்று லைக்காவின் பணம் எங்கு இருந்த வந்தது என்று தெரியாமல் கண்மூடிநிற்கும் தமிழகதிரைப்படஉலகமே – என்னநடந்தது உங்களுக்கு – லைக்காவின் பணமூலம் சவாலுக்கு அடிபணிந்து விட்டீர்களா?

உலக தமிழர் பாதுகாப்புமையம்- இங்கிலாந்து.

[email protected]