ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் பல மாதங்களாக எதிர்ப்புகள் எழுந்து கொண்டு வந்தது. அதோடு, தமிழ் உணர்வு கொண்டவர்கள் தமிழின துரோகியான ராஜபக்சேவின் நட்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று விஜய்க்கு எதிராகவும் போர்க்கொடி பிடித்தனர்.
இந்த நிலையில், பல மாதங்களாக நடந்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமீபத்தில் லைகா நிறுவனத்தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து. எனக்கும், ராஜபக்சேவுக்குமிடையே எந்த தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக வேண்டுமென்றே வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள் என்று விளக்கமளித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த கத்தி ஆடியோ விழாவில் இதுபற்றி விஜய் பேசுகையில், நாங்க படம் எடுக்கிறது சண்டை போடுவதற்காக அல்ல. தியேட்டருக்கு வரும் அனைவரும் சந்தோசமா படம் பார்த்து ரசிக்கிறதுக்காகத் தான். யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இந்த படத்தை எடுக்கல.
மேலும், நான் தியாகின்னு சொல்ல வரல, ஆனா தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்ல. கொஞ்ச நாளாவே கண்டபடி வதந்தி பரப்பி விடுறாங்க. உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனா இந்த மாதிரி வதந்திக்கெல்லாம் எப்படி விளக்கம் கொடுக்க முடியும் என்றார்.
நான் தமிழின துரோகி அல்ல!
தலைவா இந்த விளக்கமெல்லாம் தேவையில்லை ,நீ என்ன சொன்னாலும் தமிழ் காதில் வாங்கி கொள்ள மாட்டான் ,ஏன்னா நானும் தமிழனாச்சே !,கவலை படதே தலைவா படம் ரீலீஸ் ஆனவுடன் ,முதல் பாலபிஷேகம் உனக்குத்தான் தலைவா ,எந்த கொம்பனாலும் தடுத்து நிறத முடியாது,,என்னை போல தமிழனுக்கு நாய்க்கும் பூனைக்கும் கல்யாணம் பான்னி தான் பழக்கம் ,,மன்னிச்சிரு தலைவா
அம்மா ஆட்சியில் இருக்கும் வரை நீங்கள் தமிழின துரோகியாகத்தான் சித்தரிக்கப்படுவீர்கள்!
அப்படி தமிழின தூரோகியாக விஜய் என்றால் ,மலேசியாவில் படத்தை விநியோகம் செய்கிறவனும் தமிழன துரோகிதான்,இங்க ULLAVANAIYUM உதைக்க வேண்டாமா ? ,,இருந்தால் இது தமிழ் ,தமிழ் தமிழ் ,தமிழ் மொழி படம் ,இந்த தமிழ் மொழி படம் நிச்சியம் BOX OFFICE
உண்மை தெரிந்தவர்கள் விளக்கமளித்தால் நல்லது. தமிழ் துரோகிகளுக்கு துணை போக மாட்டேன்.
தலைவா… எவன் செத்தா உனக்கென்ன. ஆடு நனையுதேன்னு நீ ஏன் அழற..தமிழன் இப்படித்தான். எரியற வீட்டிலேயும் கல்லா கட்ட முடியுமான்னு பார்க்கும் நீதான் நடிகன் நீ சும்மா ஜமாய், நீதான் தமிழன். நீதான் நாளை தலைவன்
தமிழ்நாட்டு முதல்வராக இருந்து கொண்டு ஈழ தமிழ் இன அழிப்புக்கு துணைபோனவன், மருத்துவம் பெறவந்த போரில் நேரடியாக தொடர்பில்லாத பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியவன் ஆகிய துரோகி கருணாநிதியின் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களை தொடர்ந்து ரசிக்கும், ஆதரிக்கும் மானங்கெட்டெ தமிழர்களுக்கு எதிரி ராஜபக்சே குடும்பத்தினர் எடுக்கும் படங்களை பார்க்க வலிக்கிறதா?எதிரி துரோகியை விட மேலானவன்…. முடிஞ்சா முதலில் இப்ப ஆட்சியிலே இல்லாத கருணாநிதி குடும்பத்தினரை எதிர்க்க துணிவு இருக்காடா உங்களுக்கு?அவன எதிர்த்து தமிழ் நாட்ட விட்டு தொரத்துங்க.அப்புறம் வாங்க ராஜபக்சே வ எதிர்க்கலாம்…நானும் வரேன்.வாழ்க கத்தி விஜய்.
அம்மாவுக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் அனைவரும் தமிழின துரோகிகள் தான்! விஜயிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாலாமே இருப்பது அம்மாவுக்குத் தெரியும். நாளையே ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி, அம்மாவுக்கு எதிராக ஆட்சியை அமைத்தாரானால் ……? யாருக்கு நஷ்டம்? முடிந்த வரை எதிரிகளை வளர விடக்கூடாது என்பதில் அம்மா மிகவும் எச்சரிக்கையாய் இருக்கிறார்! அரசியல்வாதிகள் அப்படித்தானே வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்? அம்மா மட்டும் விதி விலக்கா!
அம்மாவுக்கு எதிரி விஜய் ? ஆனான பட்ட ரஜினியே வாலை சுருட்டி விட்டார்.! இவர் எம்மாதிரம் ?