செல்வராகவன் ‘காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் மாபெரும் வெற்றிக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களும் மிக முக்கியக் காரணம். அதன் பின் ‘புதுப்பேட்டை’ படத்திலும் யுவனின் இசையில் பாடல்கள் ஹிட்டாகவே அமைந்தன.
அதன் பின் செல்வராகவன் யுவன்ஷங்கர் ராஜாவை விட்டுப் பிரிந்தர். யுவன் இசையமைக்காமல் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதன் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படிப்பட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
யுவன் இல்லாமல் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட செல்வராகவன் தனது அடுத்தப் படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துள்ளாராம்.
அதோடு அவருடைய ஆரம்பகாலப் படங்களில் ஒளிப்பதிவாரளராகப் பணியாற்றி அரவிந்த் கிருஷ்ணாவுடனும் மீண்டும் இணைய முடிவெடுத்துவிட்டாராம். இதற்கு முன்பாகவே இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படக் கம்பெனியை ஆரம்பிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இருந்தாலும் இந்த முறை அந்த பழைய வெற்றிக் கூட்டணியாக முதலில் இணைந்து ஒரு படத்தை பண்ணலாம் என்று நண்பர்கள் நினைத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
“உன்னாலதானே நானே வாழ்கிறேன்..உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்…” எனப் பிரிந்து கூட்டணி மீண்டும் பாடட்டும்….!
செவ்வாய்க் கிரகத்தில் ‘காலடி’ வைக்கும் மங்கள்யான் போல இதுவும் ஒரு “மங்களகரமான” செய்தி(?)தான் இவர்கள் இணைந்ததைப்போல வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்துவிட்டால் இந்தியா ஒரே நாளில் ‘வல்லரசாக’ மாறிவிடும். .
இருவரும் பெண்பித்தர்கள் நல்ல ஒற்றுமை