ரஜினியின் லிங்கா பட சண்டை காட்சி: ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்கள்

lingaAசென்னை: ரஜினி பட கிளைமாக்ஸ் ஸ்டன்ட் காட்சியை அமைத் தார் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்.ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘லிங்கா‘. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி கர்நாடக மாநிலம் ஷ¤மோகாவில் நடக்கிறது.

ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லீ விட்டாகெர் ஸ்டன்ட் அமைக்கிறார்.  இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘இன்றுதான் லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இறுதிநாள். பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இக்காட்சியை பிரமாதமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேல்.

அவருடன் பணியாற்றுவது நிறைவுபெறுகிறது என்று எண்ணும்போது ரொம்பவே இழக்கிறோம் என்று உணரத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.இப்படத்திற்காக இன்னும் 2 பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக உள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் டிசம்பர் 12ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.