மிஷ்கினுடன் இணைந்த ராதாரவி

misradhaமிஷ்கின் இயக்கி, நடித்து வரும் புதிய படம் ‘பிசாசு’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் படமாக்கி வருகின்றனர்.

ஐஸ் பேக்டரி போன்ற 40 அடி உயர செட் அமைத்து, அதில் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஷ்கின். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் இறுதிக்கட்ட பணிகளை தொடங்கவிருக்கிறார்.

பிசாசு படத்தை இயக்குனர் பாலா தனது சொந்த நிறுவனமான பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். நாகா, பிரயகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் பிரபல நடிகர் ராதாரவியும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருக்கிறாராம்.

‘பிசாசு’ படத்திற்கு அருள் இசையமைக்கிறார். 2 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தை வரும் நவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.