”அட்டக்கத்தி” படத்தில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அறிமுகமான தினேஷின் கையில் இப்போது 5 படங்கள் இருக்கிறது. குக்கூ படத்தில் அவர் பார்வையற்ற இளைஞனாக நடித்திருப்பதால் விருதுகள் ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் கையில் 7 படங்கள். அடுத்து ரிலீசாகபோவது வாராயோ வெண்ணிலாவேவா, திருடன் போலீசா என்று தெரியவில்லை.
இதில் தினேஷ் வாராயோ வெண்ணிலாவே பற்றி அதிகம் பேசுவதில்லை. அடுத்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தையும் முடித்து விட்டார். திருடன் போலீஸ் சமீபத்தில் முடிந்திருக்கிறது. ஆக 3 படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது.
அடுத்து தனுஷ் தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில், விசாரணை என்ற படத்தில் நடிக்கிறார். இதனை தன் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறார்.
அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து உள்குத்து என்ற படத்திலும், திருடன் போலீஸ் பட டீமின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படி 7 படங்களுடன் தினேஷ் காட்டில் பட மழையும், பண மழையும் கொட்டிக் கொண்டிருக்கிறது.