சென்னை: ‘அரண்மனை’ ஹிட்டானதைத் தொடர்ந்து, அதில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள மனோபாலா கூறியதாவது:இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் என் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது. விளையாட்டாக நடிக்க ஆரம்பித்து, அதுவே நிரந்தர தொழிலாகி விட்டது.
ஓரிரு காட்சிகளில் காமெடி செய்து வந்த நான், சில படங்களில் முழுநீள காமெடி வேடத்தில் நடித்தேன். என் நடிப்புக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள். சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை’ என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து விட்டது.
அடுத்து 20 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன்.‘சற்றே இளைப்பாறவும்’ படத்தில் போலீஸ், ரவுடி என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ரஜினியுடன் ‘லிங்கா’, தவிர ‘கங்கா’, ‘பூஜை’, ‘டாணா’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘ஆம்பள’ உட்பட பல படங்களில் நடிக்கிறேன். நலன் குமரசாமி இயக்கும் படத்தில் வடிவேலும் நானும் நடிக்கிறோம். ‘வை ராஜா வை’ படத்தில், சீரியஸ் வேடம். தெலுங்கிலும் நடித்து வருகிறேன். மீண்டும் படம் தயாரிக்கவும் உள்ளேன்.
எங்க பொழப்பு இப்ப நாரிகிட்டு இருக்கு ,இந்த கன்றாவிலே உன் கதையா எங்களுக்கு முக்கியம் ,,,