அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதில், தங்களது மன வேதனையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் திரையுலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மௌன உண்ணாவிரதம் நடைபெற்றது.
சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகம் முன் காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்த சபை, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரை அமைப்புகள் கலந்து கொண்டன.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர்கள் சங்கச் செயலளார் டி.சிவா, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, சென்னை மாநகர திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர்கள் பிரபு, சத்யராஜ், ராஜ்கிரண், செந்தில், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஸ்ரீகாந்த், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, விமல், விவேக், சூரி, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, நளினி, குயிலி, சி.ஆர்.சரஸ்வதி தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, இப்ராஹிம் ராவுத்தர், சட்டப்பேரவை உறுப்பினர் கலைராஜன், இயக்குநர்கள் பி.வாசு, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் காரணமாக, சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்படப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் மாலை 6 மணி வரை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மாலை 5 மணிக்கு
நடிகர் சரத்குமார் உள்ளிட்டோருக்கு பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை
தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழ்த் திரையுலகினர் சார்பில் மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கும் ராதா கண்ணன் என்பவரின் செல்போனுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு ஓர் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், திரைப்படத்துறையினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி இணைப்பைத் தூண்டித்துள்ளார்.
இது குறித்து சென்னைப் பெருநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், ராதா கண்ணனின் செல்போனுக்கு எங்கிருந்து அழைப்பு வந்தது என விசாரணை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால், உண்ணாவிரதம் நடைபெற்ற பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த கிருக்கன்களுக்கு வேறுவேலையே கிடையாதா? வேலையை விட்டுவிட்டு
உண்ணாவிரதம் இருக்க பகுத்தறிவு இல்லாத பிண்டங்களா? இவர்களா சத்தியம் , நீதி ,
நேர்மை என்று படம் எடுக்கிறார்கள் ? குட்டிச்சுவர்கள் ! அம்மா வெளியேவந்தால் ஆப்பு
வைத்துவிடுவார் என்ற பயமா ? சட்டத்துக்கு அப்பாட்பட்டவர்களை புரந்த்தள்ளவேன்டாமா ? கூத்தாடிக்கு முறை இல்லை கொழுகட்டைக்கு தலை இல்லை!
இந்தியாவில் ஊழல் செய்து செய்து விட்டு நீதிமன்றத்தால் 18 வருடம் விசாரணை செய்து தண்டிக்கப்பட்டால் அது அநியாயம் என்று போரிடும் இந்த ஊழல் கலைஞர்களா நமக்கு சினிமாவின் வழி நல்வழிகாட்டப் போகின்றார்கள்?. தமிழ்த் திரையுலகினர் வக்கலாத்து வாங்குவதைப் பார்த்தால், இந்தியாவில் ஊழல் என்பது ஒரு பெரிய விவகாரமே இல்லை என்பது போலாகி விட்டது. எல்லோரும் ஊழலை அரவணைத்து ஒன்றாக கைலாசம் செல்லுங்கள். புதியதோர் தமிழகத்தைப் படைப்போம்.
விஜய்க்கு என்ன நடந்தது, வடிவேலுவுக்கு என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாதா! அவர்களின் பிழைப்புக்காக இப்படி ஒரு நாடகம் போட வேண்டியிருக்கு!
Anonymous wrote on 30 September, 2014, 23:08
கலை துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதமா ?
எண்டா கூத்தாடிகளே ! உங்கள் நடிப்பை சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள். அப்படி உண்ணாவிரதம் இருக்க விரும்பும் கூத்தாடிகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கலாமே ?
ஏன், காலையில் இருந்து மாலை வரை மட்டும் உண்ணாவிரதம் ?
Anonymous, இதையும் சேர்த்து கொள்ளவும் :
ஆளும் அதிமுக-வினரே அராஜகத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு சிரமத்தையும், பொது சொத்துக்களை சேத படுத்தியபோது, தமிழ் நாட்டின் போலீஸார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தைபோல்,
தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பதனையும் வேடிக்கையாக பார்த்து கொண்டிருப்பதுதானே. இந்த கூத்தாடிகளுக்கு மட்டும் தமிழ் நாட்டின் போலிஸ் விசாரணை/பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை பார்த்தால், தமிழ் நாட்டின் போலிஸ்காரர்களும் கூத்தாடிகள் போலவே காட்சியளிக்கின்றனர்.
ஜெயலலிதாவை தூக்காவிட்டால் இவங்களின் வாழ்க்கை சுலபமாக நடக்காது. எனினும் இவ்வளவு கேவலம் கூடாது.
போடா முட்டாள் பயல்களா…………உருபடவே மாடிங்க்கடா…………………..நாசமாபோனவங்காலா……….அவள் கொள்ளை அடித்தால்…………..உள்ள இருக்கிறாள்………..அவளுக்கு வக்களதா……………….தமிழ் படத்தை பார்பதிமுதலில் னிருந்த வேண்டும்…………………….
தமிழ் நாட்டில் இத்தனை கோழைகளா…???
எவனுக்கும் நீதி நியாயம் /தர்மம் அதர்மம் என்பதில் எல்லாம் கவலை இல்லையா ???
எவனுக்கும் சொந்த அறிவு இல்லையா ?இவ்வளவு அறிவில்லா
மூடர்கள் கொண்ட நாடு உலகிலேயே தமிழ் நாடாகத் தான் இருக்கும் !
வியப்பாக இருக்கிறது …,திரை உலகில் இவ்வளவு முட்டாள்கள் என்பது!!!
ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் இனி தலை நிமிர்ந்து தைரியமாக
கொள்ளையோ கொள்ளை அடிக்கும் ???
அந்த அம்மா குற்றவாளி என அறிவிக்க 4 ஆதாரங்கள் தெளிவாக
விளக்கப் பட்டுள்ள நிலையிலும் …இந்த கூத்தாடிகள் பண்ணத்
தொடங்கிய கோமாளித்தனம் இவர்களை தூ …என உமிழச் செய்கிறது .அதுவும் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டிய முதல்வர்
அடித்த கொள்ளையோ கொள்ளை …இன்று எல்லாம் மக்களுக்காகவாம் ???
இந்த மூட மக்களுக்கு அப்படி என்ன பெரிதாய் செய்திருக்கிறாய் ?
சில அதிரடி மின் நிலையங்களை (மகாதீர் செய்தது போல 1992இல் )
அமைத்து மக்களுக்கு வசதி செய்து கொடுத்தாயா ?
தவித்த வாய்க்கு நல்ல தண்ணீர் கிடைக்க இருக்கும் ஆறுகளை
சீர் பண்ணிக்கொடுத்தாயா ?
இதை செயல் படுத்த நீ அடித்த கொள்ளையில் சில கோடி போதுமே !!!
இன்னும் உன்னை நம்பிக்கொண்டு அரசியல் லாபத்துக்காக நடிக்கும்
இந்த கூட்டம் உருப்படுமா ???
காலம் சொல்லவேண்டிய இன்னுமொரு தீர்ப்பு …விபச்சாரிகளிடம்
விலைபோகாமல் இருந்தால் …,தர்மம் வென்றதாகும்…,
எவ்வளவு பேரு COMMENt எழுதுறேங்க்கள அம்மா உழல செய்தார் என்று ,,கருத்து எழுதின நீங்கள் எல்லாம் உத்தம புத்திரனா ?? போயி உங்க முதுகை திரும்பி பாருங்க_____.அடுத்தவரி குறை சொல்லுவதென்றால் தமிழனுக்கு கொண்டாட்டம் ,அதான் அபோகிற இடமெல்லாம் செருப்பால அடிக்கறாங்க .ஒருத்தன் மேலே ஏறினாள் அவன் காலை இழுத்து கிலே தள்ளுவது ,இது தமிழனின் நண்டு புத்தி ,,இதனால் சொந்த நாடு கூட இல்லாமல் நாடோடியாக வாழ்கிறோம் .
இவ்வளவு ஏச்சுபேச்சு எதற்கு ???
பொதுவாக சொல்லுவார்கள்; தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல்
இருக்க மாட்டான் என்று !
இது புறங்கையை நக்கிய கதை அல்ல ;பொறுப்போடு நடக்கவேண்டியவன் …தேன் கூட்டையே முழுங்கிய கதை!!!
அதையும் 18 ஆண்டுகளாக இல்லை…இல்லை என்று வாதிட்டது ;
ஜோடிக்கிறார்கள்…,பொய்யான வழக்கு என்றெல்லாம் ஊரை
ஏமாற்றியது … …,இன்னும் எவ்வளவோ ???
தமிழனின் நண்டு புத்தி என்பது இங்கே தேவை இல்லா வாதம் !
அரசியலில் அறம் பிழைத் தார்க்கு அறமே கூற்றாகும் என்பது
வேத வாக்கு !
பல கோடி பாமரர்கள் வாழும் இந்தியாவில் நீதி வெல்லுமா ?
பலே கில்லாடிகள் நடிப்பதில். தூங்குவதுபோல் நடிக்கிறார்கள் எழுப்பமுடியாது. இவர்களது ஒழுக்கம் நாடறிந்த கதை. விட்டுத்தள்ளுங்கள். இவர்களிடம் கற்றுக்கொள்ள என்னயிருக்கிறது.