இன்றைய தேதியில் தியட்டர்களில் படம் ஓடுவது கூட சாதனை இல்லை. திரைப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களை யு டியூப்பில் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதுதான் சாதனையாக இருக்கிறது. விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கி உள்ள ஐ படத்தின் டீஸர் யு டியூப்பில் நிகழ்த்தி வரும் சாதனை தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் (செப்டம்பர்) 15ஆம் தேதி வெளியான ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
அடுத்து, 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களையும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்த ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், தற்போது மேலும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. அதாவது, யு டியூப் பில் 15 நாட்களில் 70 லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதே வேகத்தில் பார்வையார்கள் பார்த்தால் இப்படம் டிவரைவில் 1 கோடி பார்வையாளர்களைப்பெற்றுவிடும். அப்படி நடந்தால், 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சாதனையைப் படைக்கும்.
ஐ படத்தின் சாதனைகள் இப்படியாக இருக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியானது. இந்த டீஸருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஆனால், மற்ற ரசிகர்களை குறிப்பாக சாதாரண மக்களை இந்த டீஸர் பெரிய அளவில் கவரவில்லை. கத்தி படத்தின் டீஸர் வெளியாகி சுமார் 2 வாரங்கள் நெருங்கிவிட்ட நிலையில்கூட இன்னும் 20 லட்சம் பார்வையாளர்களைக்கூட எட்டவில்லை.
விஜய்யின் முந்தைய படங்களான ஜில்லா, தலைவா ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இதைவிட பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. அதை வைத்து பார்த்தால் கத்தி டீஸருக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்றே தோன்றுகிறது.
எவன் எவனை முந்தினாலும் ,படம் வெளி வந்த பிறகுதான் தெரியும் ,,கத்தி ஐயை வெட்டி தவடு பொடியாக்கிவிடும் .