தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்? தீவிர முயற்சியில் மோடி அரசாங்கம்

modi_rajani_001நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமது கட்சியுடன் இணைக்கும் முயற்சிகளில் பாரதீய ஜனதாக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்தின் இல்லத்திற்கு, தமிழக பாஜகாவின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜயம் செய்தார்.

இதன்போது பாஜகாவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த தமிழக சட்டமன்றத்தில் தேர்தலின் போது பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமாயின் அது தமிழகத்தில் கட்சி நலனுக்கு பாரிய உந்தி சக்தியாக அமையும் என தமிழிசை செளந்தர்ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது தம்மை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி குறித்து ரஜினிகாந்த் சாதகமான கருத்துக்களை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.