இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டரில், ஒரு படம் ஒருவாரம் ஓடுவதே பெரிய விஷயம், ஆனால் ஒருபடம் 19 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா.? ஆமாம், உண்மை தான், ஒரு படம் இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத படங்கள் பல உண்டு, அதில் ஷாரூக்-கஜோல் நடித்த காதல் காவியம், ‛‛தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே” படம். ஆதித்யா சோப்ரா இயக்கத்தில், ஷாரூக்கான்-கஜோல் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த இப்படம், மும்பையில், மராத்தா மந்திர் எனும் தியேட்டரில், காலை நேரக்காட்சியாக இப்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
19 ஆண்டுகளாக ஓடி வந்த இப்படத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார் சம்பந்தப்பட்ட தியேட்டர் அதிபர். இதுகுறித்து அந்த தியேட்டரின் உரிமையாளர் மனோஜ் டெசி கூறுகையில், டிசம்பர் மாதத்திற்கு பிறகு தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே படத்தின் காட்சிகளை முற்றிலுமாக நிறுத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். எங்களது தியேட்டர் ரயில் நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துவிட்டதால் இந்தப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீபகாலமாக இந்தப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டது, அதனால் போதிய கலெக்ஷ்ன் இல்லை, அதனால் இந்தப்படத்தை திரையிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக இயக்குநர் ஆதித்யா சோப்ராவிடம் பேச இருக்கிறோம். மேலும் இந்தப்படத்தை பார்க்காத இன்றைய தலைமுறைகள் இருந்திருக்க முடியாது, நிச்சயம் அவர்கள் ஒருமுறையாவது பார்த்திருப்பார்கள், எனக்கு தெரிந்து பல பேர் இப்படத்தை 100 முறைக்கு மேல் பார்த்துள்ளனர், அதுமட்டுமின்றி டிவியிலும் இந்தப்படம் அடிக்கடி ஒளிப்பரப்பு செய்யப்படுவதால் இனி இந்தப்படத்தை தியேட்டரில் திரையிட்டாலும் எடுபடாது. எனவே இப்படத்தின் காட்சிகளை முற்றிலுமாக நிறுத்தலாம் என எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
தமிழனை காட்டிலும் வாடா நாட்டுக்கார்நுங்க அவ்வளவு முட்டாளா ? அடபாவிகளா