நேற்று 12 படங்கள் வெளியீடு கண்டன !

cccஇந்த ஆண்டு ஒரு சில வாரங்கள் தவிர மற்ற வாரங்களில் 4 முதல் 8 படங்கள் வரை சராசரியாக வெளிவந்து கொண்டிருந்தது. இதுவரை 150 நேரடி படங்களும், டப்பிங் படங்களையும் சேர்த்து 210 படங்கள் வரை வெளிவந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இது தமிழ் சினிமா சரித்திரத்திலேயே சாதனை அளவாகும்.

இதற்கு சிகரம் வைத்தாற்போல நேற்று (அக் 10) 12 படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 16 படங்கள் வரை ரிலீசாவதாக இருந்தது. வங்ககரை, பண்டுவம் போன்ற சில படங்கள் கடைசி நேரத்தில் தள்ளிப்போனதால் இறுதியாக இன்று 12 படங்கள் ரிலீசாகி உள்ளது.

நேரடி படங்கள் 8

நேற்று வெளியான 12 படங்களில் 8 படங்கள் நேரடி தமிழ் படங்கள். அதில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல், செந்தில், விஜயலட்சுமி நடித்த வெண்ணிலா வீடு மட்டுமே தெரிந்த முகங்கள் நடித்த படங்கள். மற்ற அனைத்தும் புதுமுகங்கள் நடித்து, தயாரித்து, இயக்கிய படங்கள். குறையன்றுமில்லை, புளிப்பு இனிப்பு, ஆலமரம், ஜமாய், யாவும் வசப்படும், குபீர் ஆகிய படங்கள் புதுமுகங்களின் படங்கள்.

டப்பிங் படங்கள்

நேற்று நான்கு டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளது. இதில் பெர்முடா டென்டாகிள்ஸ் என்ற ஹாலிவுட் படம் 2014 ருத்ரம் என்ற பெயரிலும், அன்னபெல்லே, டிராகுலா படங்கள் அதே பெயரிலும் வெளிவந்துள்ளது. இதுதவிர டாப்ஸி தெலுங்கில் நடித்த படம் பொலிட்டிக்கல் ரவுடி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

அடுத்த வாரம்

இதேபோன்ற நிலை அடுத்த வாரமும் (அக் 17) நீடிக்கும் என்று தெரிகிறது. காரணம் தீபாவளிக்கு பெரிய படங்கள் ரிலீசாவதால் அதிலிருந்து குறைந்தபட்சம் 2 அல்லது மூன்று வாரங்களுக்கு சிறிய படங்கள் ரிலீசாகாது. அதனால் தயாராக இருக்கும் சிறுபட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு முன்பு வெளிவர திட்டமிடுகின்றன.