ஜெயம்ரவி- சூரி காமெடி கலாட்டா!

jayam sooriநிமிர்ந்து நில் படத்தையடுத்து தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் சுராஜ் இயக்கும் படம் என 3 படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. இதில் சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆக்சன், லவ், காமெடி கலந்த ஒரு ஜனரஞ்சகமான வேடத்தில் நடிக்கிறாராம்.

அதோடு, இந்த படத்தில் ரஜினி, அஜீத், விஜய் படங்களில் அவர்கள் ஒரு ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுப்பது போன்று ஜெயம் ரவியும் ஒரு பாடலோடுதான் என்ட்ரி ஆகிறாராம். ஏற்கனவே அதிரடியாக நடனமாடக்கூடியவர் ஜெயம்ரவி என்பதால். இந்த பாடலில் அவரது நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த பாடலை சமீபத்தில் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சென்று படமாக்கியுள்ளனர். அதோடு, ஜெயம்ரவி- புரோட்டா சூரி இருவரும் நடிக்கும் சில காமெடி காட்சிகளும் படமாக்கப்பட்டதாம். ஏற்கனவே தில்லாலங்கடி உளளிட்ட சில படங்களில் காமெடி செய்திருந்தாலும், இந்த படத்தில் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் காமெடி காட்சிகளில் பின்னி எடுத்துள்ளாராம் ரவி. கூடவே சூரியும் அவருடன் போட்டி போட்டு நடித்ததால் இந்த படத்தில் தனது காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகும் என்று எதிர்பார்க்கிறார் ஜெயம்ரவி.