ஒருகாலத்தில் சினிமாவுக்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இன்றைக்கு நிலைமை தழைகீழாகிவிட்டது. ஒரு கீபோர்டும், கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் இசையமைப்பாளர்கள் ஆகிவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது.
டிஜிட்டல் சினிமா, சில லட்சங்களில் படம் எடுப்பது போன்ற காரணங்களால் புதுமுக இசையமைப்பாளர்களுக்கு சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் இப்படி வந்தவர்கள்தான். வெற்றியடைவதற்கு முன் வெறித்தனமாக வேலை பார்ப்பவர்கள் வெற்றியடைந்த பிறகு மூளைக்கு வேலை கொடுக்க மறந்துவிடுகிறார்கள்.
சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் சரக்கு என்று இசையமைத்த பல பாடல்கள், பல மியூஸிக் டிராக்குகள் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து திருடப்பட்டவை என்று இணையதளங்களில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி கையும் களவுமாக சமீபத்தில் மாட்டி இருப்பவர் அனிருத்.
ஏற்கனவே ஆண்டரியாவுக்கு லிப்லாக் கொடுத்ததை வெட்டவெளிச்சமாக்கியதும் இணையதளங்கள்தான். இதோ இப்போது கத்தி படத்தின் டீசருக்கு அனிருத் அமைத்த இசை எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. டிவிபிபிஎஸ் – டோனி ஜூனியர் (DVBBS & Tony Junior )இருவரும் இணைந்து உருவாக்கிய இம்மார்டல் (Immortal )என்ற மியூஸிக் ஆல்பத்திலிருந்து சுட்டிருக்கிறார் அனிருத்.
சந்தேகம் இருந்தால் க்ளிக் பண்ணிப்பாருங்க… DVBBS & Tony Junior-யின் Immortal ஆல்பத்தை பாருங்கள்.