பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்!

ssr_002பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1950, 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.

பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார்.

பின்னர் இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்தார்கள்.

1962ல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் சார்பில் 1970 ஏப்ரல் 03 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் 86 வயதான இவர், உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.