மிகுந்த சர்ச்சைக்கு பிறகு தீபவாளியன்று கத்தி படம் தீபவாளியன்று வெளியானது. இந்த படத்தில் வரும் ப்ரெஸ் மீட்டில் விஜய் பேசிய வசனஙகள் பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பல விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. அந்த வசனங்கள் இவைதான்…
ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் “தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல.
3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு.
தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா.
20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது.
அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க.இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம்
ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது.5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒருவிவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா.
இதயெல்லா கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேர இல்ல, இத சொல்ல தா டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷ இல்ல.
இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரே யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா…
(சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்) யோவ்…. சாதாரண தண்ணியா…
2ஜினா என்னய்யா.. அலைக்கட்றை.. காத்து.. வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம்…… தண்ணி அத்யாவசியம்… இவ்வாறு வசனம் பேசுகிறார் நடிகர் விஜய். இந்த வசனக்காட்சிகளை கத்தி படத்தில் இருப்பதை பல்வேறு தரப்பினர் விமர்சித்தாலும், இதில் உள்ளஉண்மை மறுக்கமுடியாத ஒன்று.
தலைவா ,,பட்டைய கிளப்பு ,,,,உன் படம் சூப்பரோ சூப்பர்
http://www.indiaglitz.com/channels/tamil/videos/54907.html
இயக்குனர் முருகதாசின் அருமையான பேச்சி
இது போன்ற நல்ல படங்களை உள்வாங்கிக் கொள்கிற அறிவு உள்ள மனிதர்கள் தமிழ்நாட்டில் நிறையபேர் வேண்டும். ” தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. தனி மனிதனை முக்கியப்படுத்தினார் பாரதி. ஒவ்வொரு மனிதனும், அவனுடைய உணர்வும், அவனுடைய உரிமையும் சுதந்நிரமும் மதிக்கப்பட வேண்டும். மனிதர்கள்மிதிக்கப்படக்கூடாது ! ஈன மனிதர்களேனும் அவர் மானம் காத்திட சக மனிதன் வீதிக்கு வந்து நாகரிகமாக… அறிவுபூர்வமாக… பொதுச் சொத்துக்கோ எந்த உயிர்களுக்கோ பங்கம் வராதபடி போராட வேண்டும். அச்சமும் பேடிமையும் அடிமைத்தனமாகும். ஜீவனைக் கொடுத்தேனும் மனித மானம் காக்கப்பட வேண்டும். இது கத்தியின் கூர்மை. இதைப் பார்த்த பின் உயிர்பெற வேண்டும் உண்மை!
என்னுடய கேள்வி ஒன்று தான்,தனக்கே பிழைக்க வழியில்லை இதில் பிள்ளைகள் எதற்கு,ஒரு ஏழை தான் பிச்சைகார குழந்தையை வர்கத்தை வழங்குகிறால்.அங்கே பெத்து பிச்சை எடுக்க வைக்கிறாள் இங்கே வசதியுள்ளவல் பெத்துக்க மாட்டேங்குறா,நாராயண நாராயண.
கத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். முருகதாஸ் , விஜய் கூட்டணி செய்திருக்க வேண்டிய கதைக்கருவே அல்ல. இந்தியாவின் விவசாயிகள் நீர் பஞ்சம் காரணமாக விவசாயத்தை விட்டு பெருநகரங்களின் கூலி வேலைக்குப் போனதையும், தற்கொலை செய்து கொண்ட கொடூரங்களையும் படம் கவனப்படுத்த முயன்றுள்ளது. ஆனால், விஜய் போன்ற மாஸ் கதாநாயகர்களின் காலில் மிதிப்பட்டு அவை பாதிப்பை உருவாக்க முடியாமல் மொன்னையாக ஆய்விடுகிறது. 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘peepli’ இந்தித் திரைப்படமும் இதே கதைக்களத்துடந்தான் இயக்கப்பட்டிருந்தது. அப்படத்தின் 10% பாதிப்பைக்கூட ‘கத்தி’ உருவாக்க முடியாமல் ஆடலும் பாடலும் என இந்தியக் கிராமங்களின் மிகப் பெரிய வலிமிக்க பிரச்சனையைப் பேச முடியாமல் தடுமாறிப் போயிருக்கிறது.
படத்தின் கதை கரு நன்று.. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.விஜய் உருப்படியாக நடித்துள்ள படம்.
என்னடா நடக்குது… இவன் படத்த வெளியிட கூடாது, தடை செய்யணும் அப்படி இப்படின்னு பேசிபுட்டு … இப்போ ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசுறானுங்க. நான் அப்போவே சொன்னேன்,.. படத்தை தடை செய்ய சொல்லும் தமிழன்தான் முதல்ல இவன் படத்த பார்ப்பான்னு…இவனுன்ங் பேச்சும் அல்லுரல ஓடுற தண்ணியும் ஒன்னுதான் ..